தமிழ் - தமிழ் அகரமுதலி - சிந்தடி முதல் - சிம்புளி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சிந்தடி | செய்யுள் முச்சீரடி . |
சிந்தம் | புளியமரம் ; பாவகை ; தூக்கணாங்கருவி . |
சிந்தன் | குள்ளன் ; குறளனிலும் சிறிது நெடியவன் ; தூக்கணாங்குருவி . |
சிந்தனை | எண்ணம் ; மீண்டும்மீண்டும் நினைத்தல் ; தியானம் ; கவலை ; கவனம் ; குறிகேட்கும் செய்தி . |
சிந்தாக்கட்டிகை | கழுத்தணிவகை ; அட்டிகைவகை . |
சிந்தாக்கு | ஒரு விளையாட்டுவகை ; கழுத்தணிவகை . |
சிந்தாகுலம் | மனக்கவலை . |
சிந்தாத்திரி | நல்ல பயணம் ; இன்ப வாழ்வு . |
சிந்தாத்திரை | நல்ல பயணம் ; இன்ப வாழ்வு . |
சிந்தாதேவி | கலைமகள் . |
சிந்தாமணி | வேண்டுவனவெல்லாம் அளிக்குந் தெய்வமணி ; சீவகசிந்தாமணி என்னும் தமிழ்க் காப்பியம் ; பண்வகை . |
சிந்தாமணிக்குளிகை | களைப்பு முதலியவற்றை நீக்குங்குளிகை . |
சிந்தாமணிமாத்திரை | களைப்பு முதலியவற்றை நீக்குங்குளிகை . |
சிந்தாவிளக்கு | காண்க : சிந்தாதேவி . |
சிந்தித்தல் | நினைத்தல் ; மனனஞ்செய்தல் ; தியானித்தல் ; எண்ணுதல் ; விரும்புதல் ; கவலைப்படல் . |
சிந்திதம் | நினைக்கப்பட்டது . |
சிந்திதன் | நினைக்கப்பட்டவன் . |
சிந்தியம் | நினைக்கத்தக்கது ; சிவாகமத்துள் ஒன்று . |
சிந்தியல்வெண்பா | மூன்றடியால் வரும் வெண்பாவகை . |
சிந்தனர் | குள்ளர் . |
சிந்து | கடல் ; நீர் ; ஆறு ; சிந்துநதி ; சிந்துதேசம் ; ஒரு மொழி ; ஒரு பண் ; கொடி ; இருவாட்சி ; குள்ளன் ; முச்சீரடி ; இசைப்பாவகை ; ஒரு வரிக்கூத்து வகை . |
சிந்துசங்கமம் | ஆறும் கடலும் ஒன்றாகச் சேருமிடம் . |
சிந்துசம் | உப்பு . |
சிந்துதல் | சிதறுதல் ; ஒழுகுதல் ; நீக்குதல் ; தெளித்தல் ; செலவழித்தல் ; பரப்புதல் ; மூக்கைச் சிந்துதல் ; அழித்தல் ; களைதல் ; பயனறச் செய்தல் ; வெட்டுதல் . |
சிந்துநாடார் | நெய்தனில மக்கள் . |
சிந்துநாதன் | வருணன் . |
சிந்துபுட்பம் | சங்கு . |
சிந்துரக்கட்டி | செங்காவிக்கல் . |
சிந்துரம் | சிவப்பு ; நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி ; பொட்டு ; யானை ; செங்காவிப் பொட்டு ; புளியமரம் . |
சிந்துரித்தல் | உலோகங்களைப் பொடியாக்குதல் . |
சிந்துரை | இந்திரன் யானையால் வளர்க்கப் பட்டவளாகிய தெய்வயானை . |
சிந்துவாரம் | நொச்சிமரம் ; கருநொச்சி ; வில் . |
சிந்தூரத்திலகம் | குங்குமப்பொட்டு . |
சிந்தூரப்பொட்டு | குங்குமப்பொட்டு . |
சிந்தூரம் | சிவப்பு ; செங்குடை ; நெற்றியில் அணியும் ஒருவகைச் சிவப்புப்பொடி ; செஞ்சுண்ணம் ; யானைப் புகர்முகம் ; வெட்சிச்செடி ; யானை ; புளியமரம் ; சேங்கொட்டை . |
சிந்தூரித்தல் | உலோகங்களைச் சிந்தூரமாக்குதல் . |
சிந்தை | மனம் ; அறிவு ; எண்ணம் ; தியானம் ; கவலை . |
சிந்தைகலத்தல் | மனமொத்தல் . |
சிந்தைகூரியன் | புதன் ; கூர்மையான புத்தியுடையவன் . |
சிந்தைசெய்தல் | நினைவில்வைத்தல் ; தியானம் செய்தல் ; கவலைகொள்ளுதல் . |
சிந்தைவிளக்கு | முக்காலமும் அறிகை . |
சிப்பந்தி | வேலைக்காரன் ; ஆயுதம் தரித்த காவற்படை . |
சிப்பம் | சிறு மூட்டை ; புகையிலைச் சுமை . |
சிப்பி | முத்தின் ஓடு ; சிப்பியோடுகூடிய நீர்வாழ் உயிர்வகை ; கிளிஞ்சில் , இப்பி , சங்கு ; தயிர் அளந்துவிடும் கொட்டாங்கச்சி ; சிற்பி ; தையற்காரன் . |
சிப்பியன் | கம்மியன் ; தையற்காரன் . |
சிபாரிசு | பரிந்துரை ; ஒருவனைக் குறித்துப் பிறனிடம் ஆதரித்துப் பேசும் பேச்சு முதலியன . |
சிம்பத்தை | சிறுபுள்ளடிப்பூடு . |
சிம்பல் | ஒலித்தல் ; துள்ளுதல் ; சிம்பு . |
சிம்பல்சிலும்பல் | கந்தை . |
சிம்பிலி | வெல்லமும் தேங்காயும் கேழ்வரகுமாவுஞ் சேர்த்துப் பண்ணின பிட்டு . |
சிம்பிளித்தல் | காண்க : சிம்புளித்தல் . |
சிம்பு | சிராய் ; இரும்புத்துகள் ; செதும்பு ; மூங்கிற் சிம்பு ; இளம்வளார் ; குற்றம் ; சுண்டி இழுக்கை . |
சிம்புகட்டுதல் | ஒடிந்த உறப்புக்குப் பத்தை வைத்துக் கட்டல் . |
சிம்புதல் | ஒலித்தல் ; துள்ளுதல் ; கோபக்குறி காட்டுதல் ; சுண்டியிழுத்தல் ; ஒன்றுகூட்டுதல் ; நன்றாய்த் தேய்த்தல் . |
சிம்புரி | சும்மாடு ; புரிமணை . |
சிம்புவிடுதல் | மரக்கன்று தளிர்த்தல் . |
சிம்புவெடித்தல் | மரக்கன்று தளிர்த்தல் . |
சிம்புள் | எண்காற்பறவை , சரபம் . |
சிம்புளி | கம்பளி ; செவ்வாடை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 456 | 457 | 458 | 459 | 460 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்தடி முதல் - சிம்புளி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தியானம், சிம்பு, புளியமரம், ஒருவகைச், பொட்டு, நெற்றியில், சிவப்பு, யானை, செய்தல், சங்கு, தையற்காரன், மரக்கன்று, தளிர்த்தல், துள்ளுதல், ஒலித்தல், சிந்துதல், குங்குமப்பொட்டு, நீக்குங்குளிகை, கழுத்தணிவகை, நல்ல, கவலை, நினைத்தல், குள்ளன், எண்ணம், பயணம், இன்ப, முதலியவற்றை, முச்சீரடி, களைப்பு, சிந்தாதேவி, வாழ்வு, காண்க