தமிழ் - தமிழ் அகரமுதலி - சிரோத்திரம் முதல் - சிலந்தி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சிரோத்திரம் | காது . |
| சிரோதரம் | கழுத்து . |
| சிரோந்தம் | மயிர்ச்செறிவு ; செறிமயிர்ப் பரப்பு . |
| சிரோபத்தியம் | கடுக்காய் . |
| சிரோபத்திரம் | கடுக்காய் . |
| சிரோமணி | தலைமணி ; உயர்ந்தமணி ; தலை சிறந்தவன்(ள்) ; பண்டிதர் பட்டப்பெயர் . |
| சிரோமுட்டி | கீழ்நோக்கி அம்பெய்கை . |
| சிரோரத்தினம் | தலைமணி . |
| சிரோருகம் | தலைமயிர் . |
| சிரோவல்லி | மயிலின் உச்சிக்கொண்டை . |
| சிரோவேட்டம் | தலைப்பாகை . |
| சிரௌதம் | சுருதி சம்பந்தமானது ; வேதத்தில் விதிக்கப்பட்டது . |
| சிரௌதி | வேதத்தில் கூறப்பட்ட கருமங்களில் வல்லவன் . |
| சில் | சில ; சிறுமை ; நுண்மை ; சிறு துண்டு ; ஓட்டுச்சீலை ; வட்டமானது ; உருளை ; தலையணி ; கடற்சில் ; ஆரவாரம் ; மூடி ; மூக்குக்கண்ணாடி . |
| சில்காற்று | தென்றல் . |
| சில்குதல் | சிலவாதல் . |
| சில்சொல் | மென்மொழி . |
| சில்பதவுணவு | உணவில் சிறிதளவே சேர்க்கப்படும் பொருளாகிய உப்பு . |
| சில்பலி | சிறு பலி . |
| சில்லங்கெடுதல் | சிதறுண்ணுதல் . |
| சில்லத்து | சிறு சட்டை . |
| சில்லம் | தேற்றாமரம் ; எட்டி ; சிறு துண்டு . |
| சில்லம்பாய் | கிழிந்த பாய் . |
| சில்லர் | வேடர் ; சுவர்க்கோழி , கிறீச்சென்று ஒலிக்கின்ற பூச்சிவகை . |
| சில்லரி | சிலம்பின் பருக்கைக்கல் . |
| சில்லறை | சில்லறைச் சரக்கு , சிதறியவை ; மீதி ; சில்வானம் ; தொல்லை ; ஒரு காதணி வகை ; சிதறின தொகை ; சிறு தொகையாக மாற்றும் பணம் ; இழிந்தது . |
| சில்லறைக்கடை | சிறிதளவாக வாணிகஞ்செய்யுங் கடை ; பணமாற்றுங் கடை . |
| சில்லறைக்கணக்கு | விவரம் விளங்காத சிறு தொகைகள் ; சில்லறைக்குறிப்புகள் . |
| சில்லறைக்காசு | சில்லறையாயுள்ள தொகை ; கையூட்டு . |
| சில்லறைக்குடி | குறைவாகப் பயிரிட்டு வாழும் குடிகள் . |
| சில்லறைப்புத்தி | கயமைத்தனம் ; விபச்சாரம் . |
| சில்லறையாள்கள் | முதன்மையல்லாதவர் ; தொந்தரவு செய்யும் கீழோர் . |
| சில்லாட்டு | சில்லறை ; சிறுசெயல் . |
| சில்லாடை | காண்க : பன்னாடை . |
| சில்லான் | சிறு ஓணான் ; குருவிவகை ; ஒரு விளையாட்டு ; கறையான் . |
| சில்லி | சுவர்க்கோழி ; ஓட்டை ; வட்டம் ; தேருருளை ; சிறுகீரை ; துண்டு . |
| சில்லிக்காது | சிறு தொளையுள்ள காது . |
| சில்லிக்கோல் | சிறு கம்பு . |
| சில்லிகை | சுவர்க்கோழி ; நல்லாடைவகை ; சூரியகிரகணம் . |
| சில்லிடுதல் | குளிர்ந்துபோதல் ; ஒலித்தல் ; நடுங்குதல் ; சினத்தால் முகம் சிவத்தல் . |
| சில்லிமூக்கு | இரத்தம் வடியும் மூக்கு ; மூக்கு நுனி . |
| சில்லியகப்பை | சல்லடைக் கண்போன்ற சில்லிகளையுடைய அகப்பை . |
| சில்லியடை | சல்லடைவகை . |
| சில்லிரத்தம் | பொசியும் இரத்தம் . |
| சில்லிவாயன் | பயனின்றி ஓயாது பேசுபவன் . |
| சில்லு | துண்டு ; வட்டமாயுள்ள விளையாட்டுக் கருவி ; ஓடு ; நொண்டி விளையாட்டு ; சக்கரம் . |
| சில்லுக்கருப்பட்டி | ஒருவகைப் பனைவெல்லம் . |
| சில்லுண்டி | இழிந்தது ; இழிந்தவன் ; சிறு குழந்தைகள் . |
| சில்லுணா | சிற்றுண்டி . |
| சில்லூறு | காண்க : சிள்வண்டு . |
| சில்லெனல் | குளிர்ந்து இருத்தல் ; புலன்களுக்கு இன்பமூட்டுங் குறிப்பு ; முகமலர்ச்சிக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு . |
| சில்லை | இழிவு ; பழிச்சொல் ; முரட்டுத்தனம் ; பிரண்டை ; நீர்ப்பறவை ; சுவர்க்கோழி ; கிலுகிலுப்பை ; சிவல்வகை . |
| சில்வண்டு | காண்க : சிள்வண்டு . |
| சில்வாய் | கடைவாய் . |
| சில்வானஞ்சேர்த்தல் | வீட்டுப் பொருள்களை மறைவாக விற்றுப் பணம் சேர்த்தல் . |
| சில்வானம் | செலவுக்குக் கொடுத்ததை மிகுத்து வைக்கும் பணம் ; சிறுதூறல் . |
| சில | கொஞ்சம் . |
| சிலக்குணம் | திமிங்கிலம் . |
| சிலகம் | அகப்பை . |
| சிலங்கம் | விளாம்பட்டை . |
| சிலத்திற்கடுகு | காண்க : சிலக்குணம் . |
| சிலத்தின்பிருதிவி | கருப்பூரச் சிலாசத்து . |
| சிலதன் | மருதநிலத்தான் ; ஏவலாளன் ; பணியாளன் ; தோழன் ; தூதன் . |
| சிலதி | தோழி ; வேலைக்காரி . |
| சிலதை | நீண்டு மெலிந்து கருநிறத்தவளாய்க் காம மிகுந்தவள் . |
| சிலந்தி | கொப்புளம் ; நச்சுக்கட்டி ; அபிநயத்துக்குரிய ஆண்கையுள் ஒன்று ; கருஞ்சிலந்திமரம் ; சிலந்திப்பூச்சி ; கோரைவகை ; கோமேதகவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 459 | 460 | 461 | 462 | 463 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரோத்திரம் முதல் - சிலந்தி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிறு, காண்க, சுவர்க்கோழி, துண்டு, பணம், இரத்தம், விளையாட்டு, மூக்கு, அகப்பை, குறிப்பு, சிலக்குணம், சிள்வண்டு, தொகை, தலைமணி, கடுக்காய், வேதத்தில், சில்லறை, காது, சில்வானம், இழிந்தது

