முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சித்துக்காரன் முதல் - சிந்தகம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சித்துக்காரன் முதல் - சிந்தகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சித்துக்காரன் | சாலவித்தை கற்றவன் . |
| சித்துடு | நேர்வாளம் ; கிலுகிலுப்பைச்செடி . |
| சித்துநீர் | இரசம் . |
| சித்துப்பறத்தல் | ஆகாசகமனஞ்செய்தல் ; விரைவில் மறைதல் ; செருக்குக் காட்டுதல் . |
| சித்துப்பொருள் | அறிவுமயமான பொருள் . |
| சித்துரு | கடவுள் . |
| சித்துரூபம் | நேர்வாளக்கொட்டை . |
| சித்துவித்தை | மாயவித்தை . |
| சித்துவிளையாடுதல் | சித்திகள் செய்தல் ; மாயவித்தை செய்தல் . |
| சித்தேசன் | பிறைச்சந்திர உருவமுள்ள தலைக்குட்டை அணிந்த ஒருவகைப் பிச்சைக்காரன் . |
| சித்தேரி | சிறிய நீர்நிலை . |
| சித்தை | எண்ணெய்த் துருத்தி ; பார்வதி ; தகரக்கலம் . |
| சிதகம் | தூக்கணாங்குருவி . |
| சிதகன் | சுக்கிரன் . |
| சிதகு | குற்றம் . |
| சிதகுஞ்சரம் | ஐராவதம் . |
| சிதகுதல் | உருவுதல் ; எழுதினதை அழித்தல் . |
| சிதசத்திரம் | வெண்குடை . |
| சிதசிந்து | கங்கை . |
| சிதடன் | குருடன் ; அறிவில்லான் ; பித்தன் . |
| சிதடி | சிள்வண்டு ; அறிவில்லாதவள் ; பேதைமை . |
| சிதடு | குருடு ; பேதமை ; அறியாமை ; உள்ளீடின்மை . |
| சிதப்பூரம் | பொன்னாங்காணிக்கீரை . |
| சிதம் | வெண்மை ; வெள்ளி ; வெற்றிகொள்ளப்பட்டது ; மனைவாயில் ; அறிவு ; விண்மீன் ; புளியாரை ; வெண்சிவதை ; சாதிக்காய் ; மீன் ; விண் ; விஷ்ணுக் கரந்தை . |
| சிதம்பர் | இழிந்தோர் . |
| சிதம்பல் | பதனழிதல் , கெட்டுப்போதல் . |
| சிதம்பு | பதனழிவு ; இழிவு ; தன்மையின் அழிவு . |
| சிதம்புதல் | பதனழிதல் ; நீரில் அதிக நேரம் கிடத்தலால் கைகால்கள் வெளுத்தல் ; நீர்ச் சாவியாதல் . |
| சிதமருசம் | வெண்மிளகு . |
| சிதமை | வெள்ளாடு . |
| சிதர் | மழைத்துளி ; பூந்தாது ; பொடி ; துணி ; சீலை ; கந்தைத்துணி ; உறி ; வண்டு ; மெத்தெனவு ; சிந்துகை ; சிச்சிலிப்பறவைவகை . |
| சிதர்த்தல் | பிரித்தல் ; வெட்டுதல் ; சிந்துதல் . |
| சிதர்தல் | சிதறுதல் ; பரக்கச் சொல்லுதல் ; படுத்தல் ; சிதறி வீழ்தல் ; நைதல் ; காலால் கிளைத்தல் . |
| சிதர்வை | நைந்து கிழிந்துபோன துணி . |
| சிதரம் | மழைத்துளி ; உறி . |
| சிதல் | கறையான் ; ஈசல் . |
| சிதலை | கறையான் ; துணி ; நோய் . |
| சிதவல் | சீலைத்துணி ; கந்தைத்துணி ; கிழிந்ததுண்டு ; வெட்டுகை ; குறைவுபட்டது ; சிதறுதல் ; படுக்கை ; தேரின் கொடி ; புரையோடிய புண் . |
| சிதவலிப்பு | மனவுறுதி . |
| சிதள் | மீன்செதில் ; புண்ணின் அசடு ; எலும்பு முதலியவற்றின் துண்டு . |
| சிதறடித்தல் | முறியடித்தல் ; கலங்கச் செய்தல் . |
| சிதறவடித்தல் | முறியடித்தல் ; கலங்கச் செய்தல் . |
| சிதறி | மழை ; பாதிரிமரம் . |
| சிதறுதல் | இறைத்தல் ; சிந்துதல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; கலைதல் ; அழிதல் ; பயன்றறதாதல் . |
| சிதன் | சுக்கிரன் ; அச்சமுடையவன் . |
| சிதனம் | கோடகசாலைப்பூண்டு . |
| சிதாகாசம் | அறிவுவெளி , ஞானவெளி . |
| சிதாகாயம் | அறிவுவெளி , ஞானவெளி . |
| சிதாத்துமா | கடவுள் . |
| சிதாப்பிரம் | வெள்ளைமுகில் . |
| சிதாபாசம் | மயக்கு . |
| சிதாம்புசம் | வெண்டாமரை . |
| சிதாம்போசம் | வெண்டாமரை . |
| சிதார் | சீலை ; மரவுரி ; ஒரு வாத்தியவகை . |
| சிதாரம் | தேர்க்கொடி . |
| சிதாரி | தூபப்பண்டம் . |
| சிதானந்தம் | அறிவின்பம் , ஞானானந்தம் . |
| சிதானனன் | கருடன் . |
| சிதி | ஈமவிறகு ; கறுப்பு ; வெண்மை ; கோடரி . |
| சிதிரம் | கோடரி ; தீ ; வாள் . |
| சிதிலம் | சிதைவு . |
| சிதிமலர் | தண்ணீர்விட்டான்கிழங்கு . |
| சிதுரம் | நேர்வாளக்கொட்டை . |
| சிதுரன் | பகைவன் ; தீயவன் . |
| சிதேகி | கடுக்காய்மரம் . |
| சிதேதரம் | கருமை . |
| சிதேந்திரம் | கோயில் . |
| சிதேந்திரியம் | அறிவுப்பொறி . |
| சிதேந்திரியன் | புலன்களை வென்றோன் . |
| சிதை | சிதைவு ; பிணஞ்சுடு விறகு ; இழிவுச் சொற்கள் ; கப்பற்பாய் ; கீழ்மக்கள் . |
| சிதைசுற்று | ஆலை ; சக்கரம் ; செக்கு . |
| சிதைத்தல் | அழித்தல் ; கெடுத்தல் ; குலைத்தல் ; சிரைத்தல் ; களைதல் ; ஒலித்தல் ; தேய்த்தல் . |
| சிதைதல் | தன்மை கெடுதல் ; சிதறுதல் ; அறுபடுதல் ; கோபித்தல் ; சொல்சிதைந்து வழங்குதல் ; பொய்யாதல் ; குலைதல் ; வரம்பழிதல் ; இசை முதலியன கெடுதல் . |
| சிதையர் | கீழ்மக்கள் . |
| சிதைவு | குற்றம் ; கேடு . |
| சிந்தகம் | புளியமரம் ; தூக்கணாங்குருவி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 455 | 456 | 457 | 458 | 459 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சித்துக்காரன் முதல் - சிந்தகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிதறுதல், செய்தல், துணி, சிதைவு, முறியடித்தல், சிதறி, கலங்கச், கறையான், வெண்டாமரை, கெடுதல், கீழ்மக்கள், கோடரி, ஞானவெளி, அறிவுவெளி, கந்தைத்துணி, சுக்கிரன், குற்றம், தூக்கணாங்குருவி, மாயவித்தை, நேர்வாளக்கொட்டை, அழித்தல், வெண்மை, கடவுள், சீலை, மழைத்துளி, பதனழிதல், சிந்துதல்

