தமிழ் - தமிழ் அகரமுதலி - சிரமபரிகாரம் முதல் - சிரோணி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சிரமபரிகாரம் | இளைப்பாறுதல் . |
| சிரமம் | களைப்பு ; உழைப்பு ; படைக்கலப் பயிற்சி . |
| சிரமன் | அடிமை ; ஈனன் . |
| சிரமிலி | நண்டு . |
| சிரமேற்கொள்ளுதல் | மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளுதல் . |
| சிரல் | சிச்சிலிப்பறவை , மீன்கொத்திப்பறவை ; முடிவிடம் . |
| சிரவணம் | காது ; கேள்வி ; திருவோண நாள் . |
| சிரவம் | காது ; கௌதாரிப் பறவை . |
| சிரற்றுதல் | உரக்க ஒலித்தல் ; கோபித்தல் . |
| சிரறுதல் | மாறுபடுதல் ; சிதறுதல் . |
| சிரஸ்தார் | நீதிமன்றம் , வட்டாட்சி அலுவலகம் முதலியவற்றிலுள்ள ஊழியர்களுக்குத் தலைமை அதிகாரி . |
| சிராங்கம் | தலை ; உடல்நலம் ; தடையின்மை . |
| சிராத்தம் | இறந்தோர்க்குச் செய்யுமோர் சடங்கு . |
| சிராந்தி | இளைப்பு . |
| சிராபத்திரம் | விளாமரம் . |
| சிராபரன் | இறைவன் . |
| சிராய் | மரச்சக்கை ; பனஞ்செறும்பு ; செதுக்கிய மரத்துண்டு ; பருவின் முளை ; காற்சட்டை . |
| சிராய்த்தல் | உராயந்து காயமேற்படுதல் . |
| சிராய்பாக்கு | முற்றாத பாக்கு . |
| சிராய்விழுதல் | நார்ப்பழமாதல் . |
| சிரார்த்தம் | காண்க : சிராத்தம் . |
| சிராவணம் | ஆவணிமாதம் ; புதுப் பூணூல் தரிக்கும் சடங்கு ; கல் ; சாமணம் . |
| சிராவியம் | கேட்டற்கு இனியது . |
| சிரானந்தம் | அழியா இன்பம் . |
| சிரி | நகைப்பு ; அம்பு ; வாள் ; வெட்டுக்கிளி ; கொலைஞன் ; ' தீர்வைக்கு உட்பட்டநிலம் ' . |
| சிரிட்டம் | விளாம்பட்டை . |
| சிரித்தபிழைப்பு | எள்ளத்தக்க வாழ்க்கை . |
| சிரித்தல் | நகைத்தல் ; கனைத்தல் ; மலர்தல் ; எள்ளுதல் . |
| சிரிப்பாணி | அடங்காச் சிரிப்பு ; பகடி ; ஏளனம் . |
| சிரிப்பாணிப்படுதல் | சிரிப்புக் கிடமாதல் ; சிறுமைப்படுதல் . |
| சிரிப்பாய்ச்சிரித்தல் | இகழ்தல் ; மலிந்துகிடத்தல் ; நிலைகெட்டுத் திரிதல் . |
| சிரிப்பு | நகைப்பு ; குதிரையின் கனைப்பு ; பகடி ; ஏளனம் . |
| சிரீ | திருமகள் . |
| சிரீடம் | குன்றிமணி ; வாகைமரம் . |
| சிரீதரன் | திருமால் . |
| சிரீமுக | அறுபதாண்டுக் கணக்கில் ஏழாம் ஆண்டு . |
| சிரீமுகம் | திருமுகம் . |
| சிரீவற்சம் | திருமால் மார்பின் மறு ; மார்பில் ஐந்து சுழியுள்ள குதிரை . |
| சிரு | தோளின் பொருத்து . |
| சிருக்கு | வேள்வியில் பயன்படும் நெய்த்துடுப்பு , இலைக்கரண்டி . |
| சிருகம் | அம்பு ; காற்று ; தாமரை . |
| சிருகாலன் | நரி . |
| சிருங்கம் | விலங்கின் கொம்பு ; கொடுமுடி ; சிருங்கவான் . |
| சிருங்கலம் | விலங்கு ; இரும்புச் சங்கிலி ; வில்லங்கம் . |
| சிருங்கலை | விலங்கு ; இரும்புச் சங்கிலி ; வில்லங்கம் . |
| சிருங்கவான் | பூமியின் எல்லையில் அமைந்த மலைகளுள் ஒன்று . |
| சிருங்காடகம் | நாற்சந்தி . |
| சிருங்காரநிலை | போர்க்களத்து இறந்துபட்ட வீரனது மார்பை அவன் மனைவி தழுவுதலைக் கூறும் புறத்துறை . |
| சிருங்காரம் | காண்க : சிங்காரம் . |
| சிருங்காரித்தல் | ஒப்பனைசெய்தல் , சிங்காரித்தல் . |
| சிருங்கி | நஞ்சு போக்கும் ஒரு மருந்துவகை ; சுக்கு ; பொன் ; குதிரையின் காதடியிலுள்ள தீச்சுழிவகை . |
| சிருட்டி | படைப்பு ; படைப்புப்பொருள் ; சிறந்தது . |
| சிருட்டிகர்த்தா | படைப்போனாகிய பிரமன் . |
| சிருட்டித்தல் | படைத்தல் ; கற்பனைசெய்தல் . |
| சிருட்டியாளன் | சவர்க்காரம் . |
| சிருணி | யானைத்தோட்டி ; பகைமை . |
| சிருதம் | நன்மை ; இனிமை . |
| சிரும்பணம் | கொட்டாவி விடுகை . |
| சிரேட்டம் | தலைசிறந்தது . |
| சிரேட்டன் | தலைசிறந்தவன் . |
| சிரேட்டாதேவி | மூதேவி . |
| சிரேட்டி | வணிகன் . |
| சிரேணி | தெரு ; இடையர் வீதி ; வரிசை . |
| சிரேணியம் | காண்க : சிரோணி . |
| சிரேயசு | நன்மை ; புகழ் . |
| சிரேவனம் | காட்டாமணக்கஞ்செடி . |
| சிரை | நரம்பு ; குரங்கு ; கெட்ட இரத்தம் செல்லும் குழாய் . |
| சிரைத்தல் | மயிர்கழித்தல் ; செதுக்குதல் . |
| சிரைதொழில் | சிரைக்கும் வேலை ; வீண்வேலை . |
| சிரையன் | நாவிதன் . |
| சிரோசம் | தலைமயிர் . |
| சிரோட்டம் | கடுக்காய் ; நெல்லிமரம் ; தான்றி மரம் . |
| சிரோணி | காட்டாமணக்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 458 | 459 | 460 | 461 | 462 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரமபரிகாரம் முதல் - சிரோணி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இரும்புச், விலங்கு, சிருங்கவான், சங்கிலி, வில்லங்கம், சிரோணி, நன்மை, திருமால், ஏளனம், நகைப்பு, சடங்கு, சிராத்தம், அம்பு, சிரிப்பு, காது, பகடி, குதிரையின்

