தமிழ் - தமிழ் அகரமுதலி - சித்திக்கல் முதல் - சித்து வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சித்திக்கல் | செடில் ஆட்டத்திற்காக நாட்டப்பட்ட தூண் ; குறுஞ்சிலைக்கல் . |
| சித்திகணபதி | விநாயகன் . |
| சித்தித்தல் | கைகூடுதல் . |
| சித்திநெறி | முத்திவழி . |
| சித்திபத்தனம் | வீடுபேறு . |
| சித்தியடைதல் | வீடுபேறடைதல் . |
| சித்தியர் | தெய்வமங்கையர்வகை . |
| சித்திரக்கம்மம் | வியத்தகு வேலைப்பாடு ; சித்திர வேலைப்பாடு . |
| சித்திரக்கம்மி | ஆடைவகை . |
| சித்திரக்கரணம் | நன்றாகக் கையினாற் செய்யுந் தொழில் ; புணர்ச்சிவகை . |
| சித்திரக்கிரீவன் | அழகிய கழுத்தை உடைய புறவு . |
| சித்திரக்குள்ளன் | மிகக் குள்ளமானவன் . |
| சித்திரகடம் | பெருங்காடு . |
| சித்திரகம் | கொடிவேலி ; ஆமணக்கு . |
| சித்திரகவி | நாற்கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடும் மிறைக்கவி ; சித்திரகவி பாடுவோன் . |
| சித்திரகாயம் | புலி . |
| சித்திரகாரன் | ஓவியன் , படம் வரைபவன் ; சிற்பி . |
| சித்திரகாரி | ஓவியன் , படம் வரைபவன் ; சிற்பி . |
| சித்திரகூடம் | சித்திரச்சாலை ; சீராமன் தங்கிய ஒரு மலை ; சிதம்பரத்தில் உள்ள திருமால் கோயில் ; தெற்றியம்பலம் . |
| சித்திரச்சூடகம் | அழகிய வேலைப்பாடமைந்த மோதிரம் . |
| சித்திரச்சோறு | காண்க : சித்திரான்னம் . |
| சித்திரசபை | திருக்குற்றாலத்தில் உள்ள கூத்தப் பெருமான் ஆடும் சபை . |
| சித்திரசாலை | காண்க : சித்திரமண்டபம் . |
| சித்திரதாளம் | ஒன்பான் தாளத்துள் ஒன்று . |
| சித்திரப்படம் | ஓவியம் ; பூந்துகில் ; யாழ் முதலியவற்றின் பல நிறமுள்ள உறை ; எழுதுசித்திரம் . |
| சித்திரப்படாம் | பூந்துகில் . |
| சித்திரப்பணி | வியத்தகு வேலை ; ஓவியம் . |
| சித்திரப்பா | சித்திரகவிவகை . |
| சித்திரப்பாலாடை | அம்மான் பச்சரிசிப்பூண்டு . |
| சித்திரப்பூமி | விசித்திரமான சோலை , செய்குன்று முதலிய இடங்கள் . |
| சித்திரப்பேச்சு | அலங்காரப் பேச்சு ; தந்திரப் பேச்சு . |
| சித்திரபானு | அறுபதாண்டுக் கணக்கில் பதினாறாம் ஆண்டு ; நெருப்பு ; சூரியன் . |
| சித்திரபுண்டரம் | வைணவர்கள் நெற்றியில் தரித்துக்கொள்ளும் திருமண்காப்பு . |
| சித்திரம் | ஓவியம் ; சிறப்பு ; அழகு ; அலங்காரம் ; வியப்புடையது ; சித்திரகவி ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; ஓட்டை ; குறைவு ; வெளி ; பொய் ; இரகசியம் ; உட்கலகம் ; சித்திரப்பேச்சு ; தந்திரப்பேச்சு ; சிறுகுறிஞ்சா ; கொடிவேலி ; ஆமணக்கஞ்செடி . |
| சித்திரம்வெட்டுதல் | கல்லில் சித்திரவேலை செய்தல் . |
| சித்திரமண்டபம் | ஓவியச்சாலை ; ஓலக்க மண்டபம் . |
| சித்திரமாடம் | சிங்காரமாளிகை . |
| சித்திரமிருகம் | மான் . |
| சித்திரமூலம் | கொடிவேலி ; செங்கொடிவேலி . |
| சித்திரமேகலை | மயில் . |
| சித்திரரதன் | சூரியன் . |
| சித்திரரேகை | உள்ளங்கைக் கோடுகளுள் ஒன்று . |
| சித்திரவண்ணம் | நெடிலும் குறிலும் ஒப்ப விரவிய சந்தம் . |
| சித்திரவதம் | வேதனைப்படுத்திக் கொல்லுகை . |
| சித்திரவதை | வேதனைப்படுத்திக் கொல்லுகை . |
| சித்திரவல்லாரி | சேங்கொட்டை . |
| சித்திரவேளாகொல்லி | யாழ்த்திறவகை . |
| சித்திரவோடாவி | ஓவியன் . |
| சித்திரன் | ஓவியன் ; தச்சன் . |
| சித்திராக்கினை | காண்க : சித்திரவதை . |
| சித்தராங்கி | தந்திரக்காரி ; கொடுநீலி . |
| சித்திரான்னம் | புளி , எள் , சர்க்கரை முதலியவற்றைத் தனித்தனியே கலந்தட்ட சோறு . |
| சித்திரிகை | வீணைவகை ; நல்லாடைவகை . |
| சித்திரிணி | காண்க : சித்தினி . |
| சித்திரித்தல் | அலங்காரமாய்ப் பேசுதல் ; ஓவியந்தீட்டல் ; அலங்கரித்தல் ; கற்பனைசெய்தல் . |
| சித்திரை | ஒரு நட்சத்திரம் ; தமிழாண்டின் முதல் மாதம் ; அம்மான்பச்சரிசிப்பூண்டு ; நாகணவாய்ப்புள் . |
| சித்திரைக்கருந்தலை | சாகுபடி முற்றுப் பெற்றதும் பின்ஏற்பாடுகளை நடத்தற்குரிய சித்திரைமாத முடிவு . |
| சித்திரோடாவி | கல்லில் உருவம் சமைக்கும் சிற்பி . |
| சித்திலி | சிற்றெறும்பு . |
| சித்திலிகை | வேலைப்பாடுள்ள ஆடைவகை . |
| சித்தின்பம் | ஞானத்தால் உண்டாகும் பேரின்பம் . |
| சித்தினி | நால்வகைப் பெண்டிருள் ஒருத்தி , பதுமினி வகைக்கு அடுத்த தரத்தவள் . |
| சித்து | அறிவு ; அறிவுப்பொருள் ; ஆன்மா ; அட்டமாசித்தி ; கலம்பக உறுப்பு ; வேள்வி ; வெற்றி ; ஒரு வரிக்கூத்து வகை ; எழுத்தடிப்பு ; கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 454 | 455 | 456 | 457 | 458 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சித்திக்கல் முதல் - சித்து வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஓவியன், காண்க, சிற்பி, சித்திரகவி, கொடிவேலி, ஓவியம், ஒன்று, பேச்சு, சித்திரப்பேச்சு, சூரியன், வேதனைப்படுத்திக், சித்தினி, சித்திரவதை, கொல்லுகை, பூந்துகில், கல்லில், சித்திரான்னம், அழகிய, ஆடைவகை, வேலைப்பாடு, படம், வரைபவன், வியத்தகு, உள்ள, சித்திரமண்டபம்

