தமிழ் - தமிழ் அகரமுதலி - சிண் முதல் - சித்தி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சிண் | சூதாட்டத்திற் கூட்டாளி ; கூட்டாளி ; விளையாட்டில் பின்னும் ஒரு முறை ஆடுகை . |
| சிண்டு | குடுமி ; ஒரு சிற்றளவு ; சிறு பாத்திரவகை . |
| சிண்டுதல் | சருவுதல் ; தொடுதல் ; நெருங்குதல் . |
| சிண்டுமுடிதல் | சண்டைமூட்டுதல் . |
| சிணாட்டால் | பிடித்தல் . |
| சிணாட்டிப்பார்த்தல் | சண்டைக்கிழுத்தல் . |
| சிணாட்டு | அடர்ந்த சிறு கிளைகள் . |
| சிணாட்டுதல் | நோய் திரும்பப் பற்றுதல் . |
| சிணாற்றைக்கழித்தல் | சிறு கிளைகளை வெட்டியெறிதல் ; வழக்குத் தீர்த்தல் . |
| சிணாறு | அடர்ந்த மரக்கிளைகள் . |
| சிணி | கெட்ட நாற்றம் . |
| சிணுக்கம் | மூக்கால் அழுதல் ; சுருக்கம் விழுகை ; உடன்பாடன்மையைக் குறிக்கும் முகக்குறி . |
| சிணுக்கன் | பயன்றறவன் . |
| சிணுக்கு | சீண்டுகை ; சிக்கு ; அழுகை ; உழலை மரம் ; விரல் முதலியவற்றின் நொடிப்பு . |
| சிணுக்குச்சிணுக்கெனல் | சிறிது சிறிதாக வெளிவருதல் ; சிடுசிடுப்புக் குறிப்பு ; அடிக்கடி அழுது தொந்தரவுசெய்தற் குறிப்பு . |
| சிணுக்குதல் | சிக்குப்படுத்துதல் ; சிறிதுசிறிதாகத் தருதல் ; விட்டு விட்டு வருதல் ; துளித்தல் ; உடன்படாமையை உணர்த்த முகத்தைக் கோட்டுதல் ; சீண்டுதல் ; பிள்ளையைத் திருடுதல் . |
| சிணுக்குவாரி | சிக்கல் எடுக்குங் கருவி . |
| சிணுங்குதல் | மூக்கால் அழுதல் ; மழை தூறுதல் ; கொஞ்சுதல் . |
| சிணுசிணுத்தல் | காண்க : சிணுங்குதல் . |
| சித்தக்கல் | குறுஞ்சிலைக்கல் . |
| சித்தகங்கை | ஆகாயகங்கை . |
| சித்தகம் | தலைச்சீரா ; மெழுகு . |
| சித்தசமாதானம் | மன அமைதி . |
| சித்தசமுன்னதி | செருக்கு . |
| சித்தசலனம் | மனக்குழப்பம் . |
| சித்தசன் | மனத்தில் தோன்றுபவனாகிய மன்மதன் . |
| சித்தசாதனம் | வெண்கடுகு ; முன்பே சாதித்த தொன்றைப் பின்னும் சாதிக்கை . |
| சித்தசாந்தி | மன அமைதி . |
| சித்தசுத்தி | மனத்தூய்மை . |
| சித்தசுவாதீனம் | மனம் வயப்பட்டிருக்கை . |
| சித்தஞ்செய்தல் | காண்க : சித்தப்படுத்துதல் . |
| சித்தநெறி | முடிவான வழி . |
| சித்தப்படுத்துதல் | ஆயத்தம் செய்தல் . |
| சித்தப்பிரமை | மனமயக்கம் ; பைத்தியம் ; சன்னிவகை . |
| சித்தம் | மனம் ; முடிவான மனக்கொள்கை ; திண்ணம் ; ஆயத்தமானது ; சிவாகமத்துள் ஒன்று ; யோகத்துள் ஒன்று ; மூலப்பகுதி ; முருங்கைமரம் . |
| சித்தமன் | ஆமணக்கஞ்செடி . |
| சித்தமுகம் | கிலுகிலுப்பைச்செடி . |
| சித்தயோகம் | நட்சத்திர யோகம் ஆறனுள் ஒன்று ; நல்வேளை . |
| சித்தர் | ஞானசித்தி யடைந்தோர் ; சித்திபெற்றவர் ; தேவகணத்துள் ஒரு சாரார் . |
| சித்தரி | சிறுகுளம் . |
| சித்தல் | சீலை . |
| சித்தலயம் | பரம்பொருளுடன் மனம் ஒன்றுகை . |
| சித்தவிகாரம் | மனவேறுபாடு . |
| சித்தவிலாசம் | உலகப்பற்றில் ஈடுபடுதல் . |
| சித்தவைத்தியம் | சித்தர்கள் கையாண்டதாகக் கருதும் தமிழ் மருத்துவமுறை . |
| சித்தன் | சித்திபெற்றோன் ; முருகக்கடவுள் ; அருகன் ; சிவன் ; வைரவன் ; வியாழன் ; உண்மையுள்ளவன் ; மாயவித்தை செய்பவன் ; இலவமரம் ; காந்தக்கல் . |
| சித்தன்வாழ்வு | முருகக்கடவுளின் வாழ்விடமான திருவாவினன்குடி . |
| சித்தாகாரம் | உருவமின்மை , அருவம் . |
| சித்தாதிகள் | சித்தர் ; இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவந்தவர் எனக் கருதப்படும் யோகிகள் . |
| சித்தாந்தசாத்திரம் | சைவ சித்தாந்தத்தைக் கூறுவனாகிய மெய்கண்ட சாத்திரம் முதலியன . |
| சித்தாந்தசைவம் | சுத்தாத்துவித சைவ சமயம் . |
| சித்தாந்தம் | முடிந்த முடிவு ; சைவ சித்தாந்தம் ; வானசாத்திரம் கூறும் நூல் ; சிவாகமங்கள் ; பிடிவாதம் . |
| சித்தாந்தன் | சிவன் ; நிச்சயிக்கப்பட்டவன் . |
| சித்தாந்தி | சித்தாந்த சமயி ; கணிதன் ; தன் கொள்கையை நாட்டுபவன் ; சைவ சித்தாந்தத்தைச் சார்ந்தவன் . |
| சித்தாமோகம் | பேரோசனை என்னும் உலோகவகை . |
| சித்தார்த்தம் | வெண்கடுகு ; மெய்யறிவு . |
| சித்தார்த்தன் | புத்தன் . |
| சித்தார்த்தி | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்து மூன்றாம் ஆண்டு . |
| சித்தி | கைகூடுகை ; வீடுபேறு ; எண்வகைச் சித்தி ; அறிவு ; சிவஞானசித்தியார் ; ஊறுசெய்தல் ; சித்தித்தல் ; அற்புதவன்மை ; சவர்க்காரம் ; நிலப்பனை ; எட்டிமரம் ; பொன்னாங்காணி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 453 | 454 | 455 | 456 | 457 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிண் முதல் - சித்தி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, சிறு, மனம், முடிவான, சித்தப்படுத்துதல், சிவன், சித்தி, சித்தாந்தம், வெண்கடுகு, சித்தர், காண்க, மூக்கால், அடர்ந்த, பின்னும், அழுதல், குறிப்பு, கூட்டாளி, சிணுங்குதல், விட்டு, அமைதி

