முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சவிதா முதல் - சளக்குப்புளக்கெனல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சவிதா முதல் - சளக்குப்புளக்கெனல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சவுரி | திருமால் ; திருடன் ; சனி ; யமன் ; குறட்டைப் பூண்டு . |
சவுரிகயிறு | தென்னைநார்க் கயிறு . |
சவுரியம் | களவு ; சூரத்தனம் . |
சவுளம் | முடிவாங்குகை . |
சவுளி | சீலை , வேட்டி முதலிய துணிச்சரக்கு . |
சவை | சபை ; ஆடவர் கூட்டம் ; கற்றறிந்தோர் கூட்டம் ; புலவர் ; மிதுனராசி . |
சவைக்கக்கொடுத்தல் | முலையூட்டுதல் . |
சவைத்தல் | மெல்லுதல் ; முலையுண்ணுதல் . |
சவைமகள் | மிதுனராசி . |
சவையல் | பொழுதுபோக்கு . |
சவையார் | சபையோர் ; பார்ப்பனருள் ஒரு பிரிவினர் . |
சழக்கன் | தீயவன் . |
சழக்கு | குற்றம் ; தீமை ; பயனின்மை ; தளர்ச்சி ; பொய் . |
சழங்கு | முதுமைத்தளர்ச்சி . |
சழங்குதல் | சோர்தல் ; நெகிழ்தல் ; தொங்கியசைத்தல் . |
சழிதல் | சப்பளித்தல் ; தளர்தல் ; நெருங்கிக் கிடத்தல் ; ஊழற்சதை வைத்தல் . |
சழிவுநெளிவு | கோணல்மாணல் . |
சழுக்கம் | நெகிழ்ச்சி ; மனமழிதல் . |
சழுங்குதல் | நெகிழ்தல் ; தளர்தல் ; பிதுங்குதல் ; தொங்கியசைதல் . |
சள்ளட்டியெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
சள்ளல் | சேறு ; அபானவாயு பறிதல் ; இளகல் ; பிஞ்சு ; சிக்கல் ; சாரமற்றது . |
சள்ளிடுதல் | குரைத்தல் . |
சள்ளு | முற்றாத இளங்காய் ; தொந்தரவு . |
சள்ளுக்காய் | முற்றாத இளங்காய் . |
சள்ளுச்சள்ளெனல் | நாய் குரைக்கும் ஒலிக்குறிப்பு ; கோபங்காட்டிப் பேசுங்குறிப்பு . |
சள்ளுதல் | இளகுதல் ; சிக்குதல் ; அபானவாயு விடுதல் . |
சள்ளுப்படுதல் | தொல்லைக்குள்ளாதல் . |
சள்ளுப்புள்ளு | சண்டை ; தொல்லை . |
சள்ளுவாயன் | ஓயாது பேசுபவன் . |
சள்ளை | துன்பம் ; தொந்தரவு ; ஒரு மீன்வகை ; இருப்பு . |
சளக்குப்புளக்கெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
சவிதா | சூரியன் . |
சவியம் | ஆனைத்திப்பிலி . |
சவிர்சங்கி | சிறு பீரங்கி . |
சவுக்கடி | சாட்டையடி ; கடுக்கனில் உள்ள தொங்கல் . |
சவுக்கடிக்கூடு | அணிகலனில் மணி பதிக்கும் நகைக் கட்டடம் . |
சவுக்கம் | சதுரம் ; துணித்துண்டு ; இலிங்கப் பெட்டகம் ; தாளத்தின் விளம்பம் ; கல்தச்சன் உளி . |
சவுக்கவர்ணம் | நடனத்திற்குரிய இசைப்பாட்டு வகை . |
சவுக்களி | காதணிவகை ; கடுக்கனோடு சேர்க்கும் தங்கத்தகடு ; ஒருவகைப் புடைவை . |
சவுக்களித்தல் | காண்க : சவக்களித்தல் . |
சவுக்காரம் | காண்க : சவர்க்காரம் . |
சவுக்கியம் | நலம் ; வசதி ; மலிவு ; மலங்கழிக்கை . |
சவுக்கு | குதிரைச்சாட்டை ; ஒரு மரவகை ; சதுரத்திண்ணைக் கொட்டகை . |
சவுக்கை | சதுரத்திண்ணைக் கொட்டகை ; இளைப்பாறுமிடம் ; காவற்கூடம் ; விலை மலிவு ; சுங்கச்சாவடி ; ஒரு மரவகை . |
சவுகதன் | புத்தன் . |
சவுகந்தி | வசம்பு . |
சவுகரியம் | ஏந்து , வசதி ; மலிவு . |
சவுங்கல் | வலியற்றவன் ; மானமிழந்தவன் . |
சவுங்கல் | வலியற்றவள் ; மானமிழந்தவள் . |
சவுங்குதல் | மனம் தளர்தல் ; மானம் மழுங்கிப்போதல் ; உடல் மெலிதல் ; வீக்கம் வற்றுதல் ; மூர்ச்சைபோதல் . |
சவுசம் | தூய்மையாக்குதல் ; மலங் கழுவுதல் . |
சவுசயம் | முருக்கமரம் . |
சவுசன்னியம் | அன்னியோன்னியம் ; இனிய குணம் . |
சவுடால் | காண்க : சவடால் . |
சவுடு | வண்டல் ; உவர்மண் ; நெரிவு . |
சவுண்டம் | திப்பிலி . |
சவுண்டி | திப்பிலி . |
சவுண்டிகன் | கள் விற்போன் . |
சவுத்தல் | விலைநயத்தல் ; விலைபடாமலிருத்தல் ; அலுத்துப்போதல் ; மெலிதல் ; விளைவு குன்றிப்போதல் ; சுவையற்றுப்போதல் ; முறுமுறுப்பு அற்றுப்போதல் . |
சவுத்து | மாதிரி ; முன்மாதிரி . |
சவுதம் | விலைமலிவு ; விற்பனையாகாமல் இருக்கும் பொருள் ; சோர்வு ; இளைப்பு ; நாட்டியவகை ; வைதிகச்சடங்கு ; தாளத்தின் விளம்பம் . |
சவுதரித்தல் | ஒத்துநடத்தல் ; பொருளீட்டுதல் . |
சவுந்தரம் | அழகு . |
சவுந்தரி | அழகுடையவள் ; பார்வதி . |
சவுந்தரியம் | காண்க : சவுந்தரம் . |
சவுபாக்கியம் | செல்வம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
சவுபானம் | படிக்கட்டு ; தாழ்வாரம் . |
சவுரர் | சூரியனை வழிபடும் மதத்தார் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 437 | 438 | 439 | 440 | 441 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சவிதா முதல் - சளக்குப்புளக்கெனல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒலிக்குறிப்பு, தளர்தல், மலிவு, சதுரத்திண்ணைக், மரவகை, கொட்டகை, மெலிதல், சவுந்தரம், திப்பிலி, வசதி, சவுங்கல், விளம்பம், அபானவாயு, நெகிழ்தல், மிதுனராசி, முற்றாத, இளங்காய், தாளத்தின், தொந்தரவு, கூட்டம்