முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சன்னலவங்கப்பட்டை முதல் - சாக்தம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சன்னலவங்கப்பட்டை முதல் - சாக்தம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சன்னை | சமிக்கை ; எள்ளுதற் சொல் ; குறிப்பு ; பெரிய முரசு ; தேரின் உலுக்குமரம் . |
| சனக்கட்டு | உறவினர்களின் கூட்டம் ; உறவினரது பற்று ; சனங்களின் ஒற்றுமை . |
| சனகந்தம் | வசம்பு . |
| சனகம் | புளியாரைக்கீரை ; சாதிக்குக் காரணசூக்கும வினைவகை . |
| சனஞ்சேர்த்தல் | ஆள் கூட்டுதல் ; படை திரட்டுதல் . |
| சனபதி | அரசன் . |
| சனம் | மக்கள் ; இனத்தார் ; கூட்டம் . |
| சனமாலி | இலவமரம் |
| சனலோகம் | பிதிரர் முதலிய தேவர்கள் வாழும் உலகம் . |
| சனனம் | பிறப்பு . |
| சனனமரணம் | பிறப்பு இறப்பு . |
| சனனி | தாய் . |
| சனனித்தல் | பிறத்தல் . |
| சனாசாரம் | உலகநடை , உலகியல் . |
| சனாதனதர்மம் | பழமையான அறவொழுக்கம் . |
| சனார்த்தனம் | சுக்கு ; திருமால்தலம் . |
| சனார்த்தனன் | திருமால் |
| சனி | ஒரு கோள் ; சனிக்கிழமை ; துன்பம் . |
| சனிக்கிழமை | வாரத்தின் ஏழாம் நாள் . |
| சனித்தல் | பிறத்தல் , உண்டாதல் . |
| சனிதிசை | காண்க : சனிமூலை . |
| சனிபாகம் | காண்க : கொன்றை . |
| சனிபிடித்தல் | கேடு பிடித்தல் ; சனிகோளால் துன்பம் விளைதல் . |
| சனிமூலை | வடகிழக்கு மூலை . |
| சனியன் | ஒரு கோள் ; பீடைதருபவன் ; பீடைதருவது . |
| சனியன் | ஒரு கோள் ; பீடைதருபவள் ; பீடைதருவது . |
| சனீச்சுரன் | சனிக்கோள் . |
| சனு | வேண்டியவன் . |
| சனு | வேண்டியவள் . |
| சனுகம் | மிளகு . |
| சா | ஒர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஆ) ; சாதல் ; தேயிலைச்செடி . |
| சாக்கடை | கழிவுநீர் செல்லும் இடம் , சலதாரை ; சேறு . |
| சாக்காட்டுப்பறை | பிணப்பறை . |
| சாக்காடு | இறப்பு ; கெடுதி . |
| சாக்காத்தல் | இறப்போர்க்கு அருகிலிருந்து உதவுதல் . |
| சாக்காளி | தன் உருவை மறைத்து வாழும் புழு வகை . |
| சாக்கி | சாட்சி ; சக்கிமுக்கிக்கல் . |
| சாக்கிடுதல் | போக்குச் சொல்லுதல் . |
| சாக்கியம் | புத்தமதம் ; சாட்சி . |
| சாக்கியர் | பௌத்தர் ; சமணர் . |
| சாக்கியன் | சாக்கிய வமிசத்தில் தோன்றிய கௌதம புத்தர் ; சாக்கியநாயனார் . |
| சாக்கிரத்தானம் | விழிப்புநிலையில் ஆன்மாவின் இடமாகக் கருதும் புருவநடு |
| சாக்கிரதை | விழிப்பு , எச்சரிக்கை . |
| சாக்கிரம் | ஆன்மாவின் விழிப்புநிலை . |
| சாக்கு | வீண்காரணம் ; பொன் ; சட்டைப்பை கோணிப்பை . |
| சாக்குப்போக்கு | வீண்காரணம் . |
| சாக்குருவி | தீநிமித்தமாகச் சத்தமிடும் என்று கருதப்படும் ஆந்தைவகை . |
| சாக்குறி | இறப்பு அடையாளம் . |
| சாக்கை | புரோகிதன் ; அரசரின் கருமத்தலைவன் ; நிமித்திகன் . |
| சாக்கையன் | கூத்தாடுபவன் ; நிமித்திகன் . |
| சாக்கோட்டி | கருப்பிணிக்கு வரும் மசக்கை |
| சாக்தம் | சக்தியையே தெய்வமாக வழிபடும் சமயம் . |
| சன்னலவங்கப்பட்டை | இலவங்கப்பட்டைவகை . |
| சன்னவீரம் | ஒருவகை வெற்றிமாலை . |
| சன்னாகம் | போர்க்கவசம்: போருக்கு ஆயத்தம் ; விருதுகளுடன் செல்லும் அரசன் ; வெளிப்புறப்பாடு . |
| சன்னாசம் | காண்க : சன்னியாசம் . |
| சன்னாசி | காண்க : சன்னியாசி . |
| சன்னி | ஒரு நோய்வகை ; பேருள்ளது . |
| சன்னிதானம் | மடாதிபதி முதலிய பெரியோரைக் குறிக்கும் மரியாதைச்சொல் ; திருமுன்பு ; தெய்வமேறல் . |
| சன்னிதி | கடவுளின் திருமுன்பு ; கோயிலுள் சுவாமி இருக்குமிடம் ; அண்மை ; சன்னிதானம் |
| சன்னிநரம்பு | காலின் கட்டைவிரல் நரம்பு . |
| சன்னிநாயகம் | கருஞ்சீரகம் ; தும்பைப் பூண்டு |
| சன்னிநாயன் | கருஞ்சீரகம் ; தும்பைப் பூண்டு |
| சன்னிபாதம் | சன்னிநோய் |
| சன்னியம் | காண்க : மரமஞ்சல் ; போர் . |
| சன்னியாசம் | துறவு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| சன்னியாசமுத்திரை | தண்டு , கமண்டலம் முதலிய துறவிகளுக்குரிய அடையாளங்கள் . |
| சன்னியாசி | துறவி . |
| சன்னிவேசம் | அமைப்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 439 | 440 | 441 | 442 | 443 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சன்னலவங்கப்பட்டை முதல் - சாக்தம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முதலிய, கோள், இறப்பு, சன்னியாசம், நிமித்திகன், ஆன்மாவின், வீண்காரணம், சன்னியாசி, சன்னிதானம், பூண்டு, தும்பைப், கருஞ்சீரகம், திருமுன்பு, சாட்சி, சனியன், பிறப்பு, வாழும், அரசன், கூட்டம், பிறத்தல், சனிக்கிழமை, பீடைதருவது, சொல், சனிமூலை, துன்பம், செல்லும்

