முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சளகந்தம் முதல் - சன்னல்பின்னல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சளகந்தம் முதல் - சன்னல்பின்னல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சற்பாத்திரம் | கொடை பெறுதற்குத் தகுந்தவன் ; ஒழுக்கமுடையோன் . |
| சற்பாவம் | உளதாந் தன்மை ; சற்குருவைப் பிரம சொரூபமாகப் பாவிக்கை . |
| சற்பிரசாதம் | நல்லருள் . |
| சற்புத்தி | நல்லறிவு . |
| சற்புத்திரன் | நற்குண நற்செய்கை உள்ள புதல்வன் . |
| சற்புருடன் | நல்லவன் , உத்தமன் . |
| சற்று | கொஞ்சம் ; அற்பம் ; எளிது . |
| சறாம்புதல் | பேணாதிருத்தல் . |
| சறுக்கல் | வழுக்கல் ; வழுக்கலிடம் ; கலிங்கு . |
| சறுக்கு | வழுக்குகை ; காண்க : சறுக்குக்கட்டை ; நழுவுகை ; நெம்புதடி ; சாக்குப்போக்கு ; தடை . |
| சறுக்குக்கட்டை | தேர்ச்செலவை வழிப்படுத்தும் முட்டுக்கட்டை ; ஆப்பு . |
| சறுக்குதல் | வழுக்குதல் ; வழுவுதல் ; செயல் நழுவுதல் ; உராய்ந்து செல்லுதல் . |
| சறுக்கை | மதகு . |
| சறுகுதல் | நழுவுதல் . |
| சறுதாசம் | வேங்கைமரம் . |
| சறை | தாழ்வு ; சறைமணி . |
| சறைமணி | இடையர் அரையில் கட்டி ஒலிப்பிக்கும் மணி . |
| சறையினான் | உடம்பைப் பேணாதவன் . |
| சன்மப்பகை | பிறவிப்பகை ; தீராப்பகை . |
| சன்மபூமி | பிறந்த ஊர் . |
| சன்மம் | பிறப்பு ; தோல் . |
| சன்மராசி | சாதகன் பிறந்த காலத்திற் சந்திரனிருந்த இராசி . |
| சன்மலி | காண்க : இலவு ; ஒருவகை நரகவிசேடம் . |
| சன்மாந்தரம் | வேறு பிறவி . |
| சன்மார்க்கம் | நன்னெறி ; ஞானநெறி . |
| சன்மானம் | உபசாரச்சொல் ; வெகுமதி ; இறையிலியாக விடப்பட்ட நிலம் . |
| சன்மினி | துர்க்கைக்குத் தொண்டுசெய்யும் பெண்பேய் . |
| சன்னக்காரை | நன்கு அரைக்கப்பட்ட சுண்ணாம்பு . |
| சன்னசாலம் | வெண்கடுகு . |
| சன்னசாலை | வெண்கடுகு . |
| சன்னஞ்சன்னமாக | சிறிதுசிறிதாக . |
| சன்னத்தம் | அணியம் , ஆயத்தம் . |
| சன்னத்தன் | கவசம் பூண்டவன் ; போர் முதலியவற்றிற்குத் தயாராக இருப்பவன் . |
| சன்னதம் | ஆவேசம் ; தெய்வங்கூறல் ; மிகு கோபம் ; வீறாப்பு . |
| சன்னதி | காண்க : சன்னிதி . |
| சன்னபின்னம் | கண்டதுண்டம் . |
| சன்னம் | நுண்மை ; நுண்ணிய பொடி ; பொடிரத்தினம் ; நேர்மை ; ரவைக்குண்டு ; மறைபொருள் ; குரல் இழைவு . |
| சன்னம்வைத்தல் | வெள்ளைவைத்தல் ; சிறிய மணிகளைப் பதித்தல் ; அழகாய்ப் பேசுதல் ; பேச்சில் தந்திரம் காட்டுதல் . |
| சன்னல் | சாளரம் . |
| சன்னல்பின்னல் | கொடி முதலியவை ஒன்றோடொன்று பின்னியிருத்தல் ; சிக்கல் . |
| சளகந்தம் | வசம்பு . |
| சளகன் | நிலையற்ற மனமுடையவன் . |
| சளசண்டி | பெருமூடன் . |
| சளசளத்தல் | சேறாயிருத்தல் ; அலப்புதல் ; மழை முதலியவற்றின் வீழிச்சியால் அருவியில் உண்டாகும் ஒலி ; ஓர் ஒலிக்குறிப்பு ; தர்க்கம் முதலியவற்றில் தளர்ச்சியடைதல் . |
| சளசளவெனல் | நீர்பாயும் ஒலி ; அலப்புதற் குறிப்பு . |
| சளசளெனல் | நீர்பாயும் ஒலி ; அலப்புதற் குறிப்பு . |
| சளப்புதல் | அலப்புதல் , குழப்புதல் . |
| சளபுளத்தல் | ஒலித்தல் ; மனங்கலங்குதல் ; குழப்பமாயிருத்தல் ; ஆற்றல் முதலியன குறைதல் . |
| சளம் | மூர்க்கம் ; துன்பம் ; வஞ்சனை . |
| சளவட்டை | கீழ்த்தரமானது . |
| சளன் | வஞ்சகன் . |
| சளாரெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சளி | குளிர்ச்சி ; மூக்குச்சளி ; கபம் ; பிசின் . |
| சளித்தல் | சளிநோய் கொள்ளுதல் ; புளித்தல் ; தளர்தல் ; பதனழிதல் . |
| சளிப்பு | பதனழிதல் ; ஊழற்சதைபிடித்தல் ; சளிகொள்ளுதல் . |
| சளுக்கன் | சாளுக்கிய வேந்தன் . |
| சளுக்கி | அகந்தைக்காரி ; சாளுக்கிய வேந்தன் . |
| சளுக்கு | செருக்கு ; திரிகையின் ஓர் உறுப்பு ; பகட்டு . |
| சளுகம் | அட்டை . |
| சளுகன் | அட்டை . |
| சளைத்தல் | சோர்தல் . |
| சற்கரித்தல் | போற்றுதல் . |
| சற்கருமம் | நற்செய்வகை . |
| சற்காரம் | உபசாரம் . |
| சற்காரியவாதம் | தோற்றத்திற்கு முன்னும் காரியப்பொருள் , காரணப் பொருள்களில் உள்ளது என்னும் கொள்கை . |
| சற்குணம் | நற்குணம் . |
| சற்குரு | ஞானாசிரியன் . |
| சற்சங்கம் | நல்லோர் கூட்டுறவு . |
| சற்சனர் | நல்லோர் . |
| சற்சுகாதி | பெருமருந்துக்கொடி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 438 | 439 | 440 | 441 | 442 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சளகந்தம் முதல் - சன்னல்பின்னல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பதனழிதல், குறிப்பு, சாளுக்கிய, வேந்தன், நல்லோர், அட்டை, அலப்புதற், ஒலிக்குறிப்பு, நழுவுதல், சறுக்குக்கட்டை, சறைமணி, பிறந்த, அலப்புதல், வெண்கடுகு, நீர்பாயும்

