முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சலவாதி முதல் - சவடால்அடித்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சலவாதி முதல் - சவடால்அடித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சவட்டுதல் | வளைவாக்குதல் ; மெல்லுதல் ; விழுங்குதல் ; அழித்தல் ; கொல்லுதல் ; மிதித்தல் ; வெல்லுதல் ; மொத்துதல் . |
| சவட்டுநிலம் | உவர்த்தரை , உப்புநிலம் . |
| சவடன் | பயனற்றவன் . |
| சவடால் | இடம்பம் , பகட்டு . |
| சவடால்அடித்தல் | இடம்பங்காட்டுதல் , வீண்செருக்குப் பாராட்டுதல் . |
| சலவை | ஆடை வெளுத்தல் ; வெளுத்த துணி ; சால்வை ; விதையடிக்கை ; சீதளம் ; வியாபாரப் பிசுக்கு . |
| சலவைக்கல் | ஒருவகை நிறமுடைய கல் ; தாதுப்பொருள்வகை ; சூரியகாந்தக்கல் . |
| சலன் | கால் . |
| சலனம் | அசைவு ; கலக்கம் ; துன்பம் ; சிவலிங்கம் ; கால் ; சஞ்சலம் ; காற்று . |
| சலனன் | காற்று . |
| சலாகு | சிறு நாராசம் , இருப்புக் கம்பி . |
| சலாகை | அம்பு ; ஈட்டி ; காந்தம் ; துப்பாக்கிச் சலாகை ; இருப்புக் கம்பி ; அறுவைக் கருவி ; சிறு நாராசம் ; வரிச்சல் ; நன்மணி ; வாகு வளையம் ; நாணயவகை ; தட்டார் கருவிவகை . |
| சலாங்கு | பொய்யாப்புள் ; கொசு . |
| சலாசயம் | நீர்நிலை ; மூத்திரப் பை . |
| சலாஞ்செய்தல் | வணங்குதல் ; கையை நெற்றியில் வைத்து வந்தித்தல் . |
| சலாத்தி | திரைச்சீலை . |
| சலாத்துதல் | குலுக்குதல் . |
| சலாந்தரு | நாட்டிய உறுப்புவகை . |
| சலாபக்குளி | முத்துக்குளித்தல் ; வருமான முள்ள தொழில் . |
| சலாபம் | முத்துக்குளிக்கை ; முத்துக்குளிக்கும் துறைமுகம் . |
| சலாம் | வணக்கம் . |
| சலாவணி | நாணயம் முதலியன எங்கும் வழங்குகை ; செல்வாக்கு . |
| சலிகை | காண்க : சலுகை . |
| சலித்தல் | ஒலித்தல் ; அசைத்தல் ; மனஞ்சலித்தல் ; சோர்தல் ; வெறுத்தல் ; சல்லடையினால் சலித்தல் ; கோபங்கொள்ளுதல் ; அருவருப்புக்காட்டுதல் . |
| சலிப்பு | அசைவு ; வெறுப்பு ; சோர்வு ; மனச்சலனம் ; கோபம் . |
| சலிலம் | நீர் . |
| சலினி | திப்பிலி . |
| சல¦கம் | போர் . |
| சல¦சு | எளிது ; மலிவு . |
| சலுக்குமொலுக்கெனல் | தவசங்களை உலக்கையால் குற்றும்பொழுது எழும் ஓசைக்குறிப்பு . |
| சலுகை | செல்வாக்கு ; உரிமை ; பழக்கமிகுதி ; ஆதரவு . |
| சலுகைக்காரன் | பெருமைபடைத்தவன் ; பரிபாலிப்போன் ; செல்வம் முதலியவற்றால் செருக்குடையவன் . |
| சலுகைகாட்டுதல் | பெருமையாய் இருத்தல் ; அதிகாரதோரணை கொள்ளுதல் ; பரிவு காட்டுதல் . |
| சலுப்பு | துண்டு ; நுனிக்கொம்பு ; நீர்க்கோவை . |
| சலூகை | அட்டை . |
| சலேந்திரன் | வருணன் . |
| சலோர்க்கம் | குங்கிலியம் . |
| சலோர்ச்சம் | குங்கிலியம் . |
| சவ்வரிசி | சவ்வுமரத்தின் சோற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் ; மரவள்ளிக்கிழங்கிலிருந்து செய்யப்படும் பொருள் . |
| சவ்வாது | ஒருவகைப் பூனையின் மணப்பொருள் ; மரவள்ளி . |
| சவ்வியபலம் | யானைத்திப்பிலி . |
| சவ்வியம் | இடப்பக்கம் ; மிளகு . |
| சவ்வீரம் | ஒரு நாடு ; ஒரு மருந்துப் பொருள் காடி ; பறங்கிப்பாடாணம் . |
| சவ்வு | கண் முதலியவற்றின் மெல்லிய மூடுதோல் ; புண்ணின் மூடுதோல் ; புண்சவ்வு ; பழம் முதலியவற்றை மூடியுள்ள தோல் . |
| சவக்கம் | சோர்வு ; சதுரவடிவான வைரம் . |
| சவக்களித்தல் | சுவையற்றிருத்தல் . |
| சவக்காடு | சுடுகாடு . |
| சவக்காமியம் | நாய் . |
| சவக்காரம் | காண்க : சவர்க்காரம் . |
| சவக்காலை | கல்லறை . |
| சவக்குச்சவக்கெனல் | வளைந்து கொடுத்தற் குறிப்பு ; ஈரப்பசையால் பதங்கெடுதற்குறிப்பு . |
| சவங்கட்டுதல் | சவத்தை ஆடையால் மூடி மூன்று சிறு துணிகளால் கட்டுதல் . |
| சவங்கல் | மழுங்கல் ; வலியற்றவன் ; மானம் ; மழுங்கினவன் . |
| சவங்கல் | மழுங்கல் ; வலியற்றவன் ; மானம் ; மழுங்கினவள் . |
| சவங்குதல் | மனந்தளர்தல் ; மானம் மழுங்கிப் போதல் ; உடல்மெலிதல் ; வீக்கம் வற்றுதல் ; மூர்ச்சை போதல் . |
| சவசவவெனல் | மிகுதிக்குறிப்பு ; பளபளப்புக் குறிப்பு . |
| சலவாதி | தணியாக் கோபமுள்ளவன் ; பிடிவாதக்காரன் ; சாவுக்செய்தி சொல்வோன் ; மலசலவுபாதி . |
| சலவியன் | கோபமுள்ளவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 435 | 436 | 437 | 438 | 439 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சலவாதி முதல் - சவடால்அடித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மானம், சிறு, குறிப்பு, மூடுதோல், செய்யப்படும், சவங்கல், பொருள், வலியற்றவன், கோபமுள்ளவன், போதல், குங்கிலியம், மழுங்கல், சலித்தல், இருப்புக், நாராசம், காற்று, அசைவு, கம்பி, சலாகை, கால், சலுகை, காண்க, செல்வாக்கு, சோர்வு

