தமிழ் - தமிழ் அகரமுதலி - சவடி முதல் - சவித்தாரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சவாது | ஒருவகை மணப்பொருள் . |
| சவாய் | கப்பலிற் பாய்மரந் தாங்கும் கயிறு . |
| சவாரி | ஊர்தியேறிச் செல்லுதல் ; சுற்றுப் பயணம் ; ஊர்தி . |
| சவாரிசெய்தல் | ஊர்திகளில் ஏறிச் செல்லுதல் . |
| சவாரிபோதல் | சுற்றுப்பயணம் போதல் ; சவாரி செய்தல் . |
| சவால் | வினா ; ஒருவகைப் பாட்டு ; அறை கூவுகை . |
| சவி | ஒளி ; அழகு ; நேர்மை ; வலிமை ; சுவை ; செல்வி ; சரமணிக்கோவை ; திருவிழா ; பலன் ; மிளகு . |
| சவிக்கை | சுங்கச்சாவடி . |
| சவிகற்பக்காட்சி | ஒரு பொருளின் பெயர் , சாதி , குணம் முதலிய எல்லாக் கூறுகளும் புலப்படும் அறிவு . |
| சவிகற்பசமாதி | ஞேயம் , ஞாதுரு , ஞானம் என்ற வேறுபாட்டுணர்ச்சியோடு விளங்கும் ஐக்கிய பாவனையாகிய யோகநிலை . |
| சவிகற்பம் | காண்க : சவிகற்பக்காட்சி . |
| சவிகி | சதுரத்திண்ணைக் கொட்டகை . |
| சவிகை | சதுரத்திண்ணைக் கொட்டகை . |
| சவிசங்கம் | ஒரு வாதநோய் . |
| சவித்தல் | சபித்தல , சாபமிடுதல் ; திட்டுதல் ; மந்திரத்தை உச்சாரணம் செய்தல் ; வேண்டுதல் . |
| சவித்தாரம் | விரிவுடையது ; முக்கிய காரியம் . |
| சவடி | பொற்சரடுகளில் கொத்தாக அமைந்த கழுத்தணிவகை ; காறையெலும்பு ; பெண்கள் காதணிவகை ; ஒரு பாம்புவகை ; கடலாத்தி . |
| சவடிஎலும்பு | காறையெலும்பு . |
| சவடிப்பொட்டு | தாலிப்பொட்டு . |
| சவடு | உவர்மண் ; வண்டல் ; நெரிவு . |
| சவணம் | கேள்வி . |
| சவத்தி | சக்களத்தி . |
| சவதம் | காண்க : சபதம் ; விலைமலிவு . |
| சவதரித்தல் | சம்பாதித்தல் ; ஒத்துப்போதல் . |
| சவதலை | காண்க : சமதலை . |
| சவம் | பிணம் ; விரைவு ; மூங்கில் ; பிசாசம் . |
| சவர் | விளையாநிலம் ; உவர் . |
| சவர்க்கம் | கல்லுப்பு . |
| சவர்க்காரம் | அழுக்கைப் போக்கும் ஒரு பொருள் , சலவைக்கட்டி , காண்க : வழலை . |
| சவர்க்குந்தா | கப்பலின் மேலிடத்துள்ள மூன்றாம் பாய்மரம் . |
| சவரக்கத்தி | மழித்தற்குதவுங் கத்தி . |
| சவரகன் | அம்பட்டன் . |
| சவரட்சணை | காப்பாற்றுதல் . |
| சவரணை | காப்பாற்றுகை ; நேர்த்தி ; ஆயத்தம் ; செல்வநிலை . |
| சவரம் | வெண்சாமரம் ; மயிர்கழிக்கை ; பவுன் நாணயம் . |
| சவரன் | வேடன் ; பாலைநில மாக்கள் ; பாலை நிலத் தலைவன் ; ஒரு பொற்காசு . |
| சவரி | கவரிமான் ; சாமரம் ; மயிர்க்கற்றை ; தென்னைநார் ; வேடகுலப்பெண் ; குறட்டைப் பூடு . |
| சவரிமான் | காண்க : கவரிமான் . |
| சவரிலோத்திரம் | குறட்டைப்பழம் . |
| சவலம் | பயனுடையது ; அரைக்கால் வராகன் . |
| சவலை | மனக்குழப்பம் ; வருத்தம் ; காண்க : சவலைக்குழந்தை ; இளமை ; மின்னல் ; அடி குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு ; இசைப்பா வகை . |
| சவலைக்கன்று | இளங்கன்று . |
| சவலைக்குழந்தை | தாய்ப்பாலின்றி மெலிந்த குழந்தை . |
| சவலைநெஞ்சம் | உறுதியற்ற மனம் . |
| சவலைப்பிள்ளை | காண்க : சவலைக்குழந்தை . |
| சவலைப்புத்தி | காண்க : சவலைநெஞ்சம் . |
| சவலைபாய்தல் | தாய்ப்பாலின்றிக் குழந்தை மெலிதல் . |
| சவலைமதி | இளம்பிறை . |
| சவலைவெண்பா | முதலடியும் மூன்றாமடியும் நாற்சீராய்க் கடையடியும் இரண்டாம் அடியும் முச்சீராய்த் தனிச்சொல் அற்று வரும் வெண்பாவகை . |
| சவள் | துவளுந் தடி ; தோணியோட்டுங் கோல் . |
| சவள்தடி | துவளுந் தடி ; தோணியோட்டுங் கோல் . |
| சவளக்காரர் | செம்படவர் ; மீனவருள் ஓரினம் ; ஓடம் விடுபவன் ; ஈட்டிபிடிக்கும் வீரர்கள் . |
| சவளச்சி | காந்தாரியுப்பு . |
| சவளசோழியம் | நாகரிகம் நிரம்பிய கல்வியறிவு . |
| சவளம் | குந்தாயுதம் ; ஒரு மீன்வகை ; புளியின் முற்றிய பழச்சுளை . |
| சவளமரம் | படகு தள்ளுதற்குரிய தண்டுக்கொல் . |
| சவளி | சீலை , வேட்டி முதலிய துணிச்சரக்கு ; மகளிர் அணியும் கழுத்தணி . |
| சவளுதல் | வளைதல் ; துவளுதல் . |
| சவளை | வங்கமணல் , ஈயமணல் . |
| சவற்சவம் | கல்லுப்பு . |
| சவறு | குப்பை ; பயனற்றவன் . |
| சவறுவிழுதல் | கருப்பம் நிரம்பாது வெளிப்படுகை . |
| சவனம் | வேகம் ; வேள்வி ; பிருட்டபாகம் . |
| சவனன் | வேகமுடையவன் . |
| சவனிக்கை | திரை ; இளைப்பாறு மண்டபம் . |
| சவனிக்கைமண்டபம் | உற்சவமூர்த்தி வீதிப்புறப்பாட்டிற்குப்பின் இளைப்பாறு மண்டபம் . |
| சவாசு | சபாஷ் என்னும் வியப்பிடைச் சொல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 436 | 437 | 438 | 439 | 440 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சவடி முதல் - சவித்தாரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சவலைக்குழந்தை, குழந்தை, வரும், சவலைநெஞ்சம், துவளுந், மண்டபம், இளைப்பாறு, கோல், தோணியோட்டுங், கவரிமான், காறையெலும்பு, பாட்டு, செய்தல், செல்லுதல், சவாரி, சவிகற்பக்காட்சி, முதலிய, சொல், கொட்டகை, சதுரத்திண்ணைக், கல்லுப்பு

