தமிழ் - தமிழ் அகரமுதலி - சல்லிப்பலகை முதல் - சலவன் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சலக்கம் | காண்க : சலகம் . |
சலக்கரணை | ஏந்து , சௌகரியம் ; தணிவு ; உரிமை . |
சலக்கிரீடை | ஆண்கள் பெண்களோடு கூடிப் புரியும் நீர் விளையாட்டு . |
சலக்கு | நவச்சாரம் . |
சலக்கெனல் | முத்து , மணி போன்றவை கீழே உதிரும்போது உண்டாக்கும் ஓசைக்குறிப்பு . |
சலகம் | நீராடல் ; மலங்கழிக்கை ; பொட்டுப் பூச்சி . |
சலகரங்கம் | சங்கு ; தாமரை ; திரை ; தேங்காய் . |
சலகன் | விதையடித்த பன்றி . |
சலகன்பன்றி | விதையடித்த பன்றி . |
சலகு | முத்துச்சிப்பி ; விதையடித்தல் ; பயிற்சி . |
சலகுபிடித்தல் | விதையடித்தல் ; உடற்பயிற்சி செய்தல் . |
சலகை | அறுபது முதல் எண்பது படி வரை அளவுள்ள ஒரு தானிய அளவு ; சலகை விதைப்பாடுள்ள நிலம் ; தோணி ; தெப்பம் ; வெளிப்பாடு ; காணிக்கைப் பொருள் . |
சலங்கு | கட்டுப்படகு ; முத்துச் சலாபம் . |
சலங்கை | சதங்கை என்னும் காலணி . |
சலசந்தி | இரண்டு கடல்களைச் சேர்க்கும் குறுகிய நீர்ப்பகுதி . |
சலசம் | நீரில் உண்டாவன ; தாமரை , முத்து , பாசி . |
சலசயனம் | நீரிடமாகிய படுக்கை . |
சலசர்ப்பிணி | நீரில் செல்வதாகிய அட்டை . |
சலசரம் | மீன் ; மீனராசி ; தோணி முதலியவை . |
சலசல | நீர் பாயும் ஒலி ; ஓர் ஒலிக்குறிப்பு . |
சலசலத்தல் | ஓர் ஒலிக்குறிப்பு ; ஓயாமற்பேசுதல் . |
சலசலெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
சலசலோசனன் | தாமரைக் கண்ணனாகிய திருமால் . |
சலசாதி | நீர்வாழ்வன . |
சலசூகரம் | கடற்பன்றி . |
சலசூசி | நீரட்டை . |
சலசை | திருமகள் . |
சலஞ்சலம் | வலம்புரி ஆயிரம் சூழ்ந்த சங்கு . |
சலணி | வால்மிளகு . |
சலத்தம்பனம் | நீரின் ஆற்றலை மாற்றும் வித்தை . |
சலதம் | நீரைத் தரும் மேகம் . |
சலதரங்கம் | நீரலை ; பல கிண்ணங்களில் வெவ்வேறு அளவில் நீர் ஊற்றிச் சிறு குச்சியால் தட்டிவாசிக்கும் ஒரு வாத்தியவகை . |
சலதரம் | நீரைத் தாங்கும் மேகம் ; நீர்நிலை ; குளம் ; கடல் . |
சலதளம் | அரசமரம் . |
சலதாரி | கங்கைநீரைத் தரித்த சிவன் . |
சலதாரை | நீரோட்டம் ; சாக்கடை ; நீர்க்கால் ; மதகு . |
சலதி | கடல் ; பொய்பேசுபவன் . |
சலநிதி | கடல் . |
சலப்பிரவாகம் | வெள்ளப்பெருக்கு . |
சலப்பிரளயம் | பெருவெள்ளம் . |
சலபத்திரம் | அரசமரம் . |
சலபதி | கடல் அரசனான வருணன் . |
சலபம் | விட்டிற்பூச்சி . |
சலம் | அசைவு ; நீர் ; சீழ்நீர் ; மூத்திரம் ; நடுக்கம் ; அசையும் அம்புக்குறி ; இயங்குதிணை ; சுழற்சி ; தணியாக் கோபம் ; கோபம் ; பொய்ம்மை ; வஞ்சனை ; பட்சபாதம் ; தீச்செயல் ; மாறுபாடு ; போட்டி ; முள்ளம்பன்றியின் முள் இலாமிச்சை ; பிடிவாதம் . |
சலம்பிடித்தல் | சீழ்கொள்ளல் ; பிடிவாதஞ் செய்தல் . |
சலம்புரி | சங்கு . |
சலமலம் | நீரும் மலமும் ; கடற்பஞ்சு . |
சலரசம் | உப்பு . |
சலராசி | கடல்நீரோடு தொடர்புடைய நண்டு , மீன் முதலியவற்றின் கூட்டம் . |
சல்லுதல் | நீர்தெளித்தல் ; சல்லடையாற் சலித்தல் . |
சலக்கப்புரை | கழிப்பறை ; குளிக்கும் அறை . |
சலருகம் | தாமரை . |
சலரோகம் | நீரழிவுநோய் . |
சலலம் | முள்ளம்பன்றியின் முள் . |
சலலிங்கம் | மார்பிலணியும் அங்க இலிங்கம் . |
சலவர் | நெய்தல்நில மாக்கள் . |
சலவன் | வஞ்சகன் ; பகைவன் ; கோபமுள்ளவன் ; விதையடித்த பன்றி . |
சல்லிப்பலகை | கப்பலின் முகப்புப் பலகை . |
சல்லிப்பொடி | உடைந்த துண்டு ; சிறு மீன் . |
சல்லிமாடு | சல்லிக்கட்டுக்குரிய காளை ; பட்டி மாடு . |
சல்லிமாலை | பொங்கல் முதலிய நாளில் மாடுகளுக்குக் கட்டும் மாலை . |
சல்லியகரணி | ஆயுதத்தாற் பட்ட காயம் ஆற்றும் மருந்து ; எருக்கு . |
சல்லியம் | அம்பு ; முள்ளம்பன்றி ; எலும்பு ; மாயவித்தை ; ஆணி ; இருப்புக்கோல் ; ஆயுத நுனி ; ஈட்டி ; தொல்லை ; பூமிக்குள் இருப்பதை அறியும் ஆருடம் ; செஞ்சந்தனம் ; கருநூலுள் ஒன்று . |
சல்லியன் | நகுல சகாதேவருக்கு அம்மானாகிய ஒரு மன்னன் ; சுக்கிரன் . |
சல்லிவேர் | ஆணிவேரின் பக்கத்திற் செல்லும் சிறுவேர் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 434 | 435 | 436 | 437 | 438 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சல்லிப்பலகை முதல் - சலவன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கடல், நீர், மீன், ஒலிக்குறிப்பு, விதையடித்த, பன்றி, சங்கு, தாமரை, சிறு, முள், அரசமரம், முள்ளம்பன்றியின், கோபம், மேகம், தோணி, விதையடித்தல், முத்து, செய்தல், சலகை, நீரில், சலகம், நீரைத்