தமிழ் - தமிழ் அகரமுதலி - சரீரபதனம் முதல் - சல்லித்தரை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சருவக்கியத்துவம் | காண்க : சர்வஞ்ஞத்துவம் . |
| சருவக்கியன் | காண்க : சர்வஞ்ஞன் . |
| சருவக்கியன் | காண்க : சருவஞ்ஞன் . |
| சருவசித்து | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தோராம் ஆண்டு ; எல்லாவற்றையும் வென்றவன் . |
| சருவந்து | தலைக்கவசம் . |
| சருவரி | இரவு ; இருள் . |
| சருவல் | நேயப்பான்மை ; கொஞ்சுதல் ; தொந்தரவு ; சரிவான நிலம் . |
| சருவு | சரிவு ; கிட்டுகை ; சருகு . |
| சருவுதல் | பழகுதல் ; கொஞ்சிக் குலாவுதல் ; தொந்தரவுசெய்தல் ; போராடுதல் ; கிட்டுதல் ; நழுவுதல் . |
| சரேந்திரன் | வில் வல்லவன் . |
| சரேரெனல் | விரைவுக்குறிப்பு . |
| சரேலெனல் | விரைவுக்குறிப்பு . |
| சரை | நரைமயிர் ; கிழத்தன்மை ; வைக்கோல் முதலியவற்றாற் செய்யும் மூடிவகை . |
| சரைத்தல் | கிழத்தனமடைதல் ; நரைத்தல் . |
| சரைமலம் | வயிரக்குற்றங்களுள் ஒன்று . |
| சரையாப்பித்தல் | உள்ளே செலுத்துதல் . |
| சரோசம் | தாமரை . |
| சரோசனம் | கோபத்தோடு கூடியிருக்கை . |
| சரோருகம் | தாமரை ; நரகவகை . |
| சரோருகன் | தாமரையினின்று தோன்றிய பிரமன் . |
| சரோவரம் | சிறந்த பொய்கை . |
| சல்லகண்டம் | புறா . |
| சல்லகம் | முள்ளம்பன்றி ; நார் ; கைத்தாளம் . |
| சல்லகி | ஆத்திமரம் ; வெள்ளைக்குங்கிலியம் ; தேட்கொடுக்கிச்செடி ; இலவுவகை ; தளிர் ; முள்ளம்பன்றி . |
| சல்லடம் | குறுகிய காற்சட்டை . |
| சல்லடை | தானியம் முதலியவற்றைச் சலிக்கும் கருவி . |
| சல்லடைக்கண் | சல்லடையிலுள்ள துளை . |
| சல்லபம் | முள்ளம்பன்றி . |
| சல்லம் | பன்றியினது முள் ; நார் . |
| சல்லரி | பறைப்பொது ; திமிலைப்பறை ; கைத்தாளம் ; பூடுவகை . |
| சல்லரிதல் | துண்டுதுண்டாக நறுக்குதல் . |
| சல்லவட்டம் | கேடயம் . |
| சல்லா | மெல்லிய துணி ; இழைநெருக்கம் இல்லாத துணி . |
| சல்லாபம் | சரசப்பேச்சு ; உரையாடல் ; வினாவிடை . |
| சல்லாபன் | சரசன் . |
| சல்லாரி | இழைநெருக்கமில்லாத துணி , அலசற்சீலை ; பயனற்றவன் ; வேடக்காரன் ; கைத்தாளம் ; ஒரு மரவகை . |
| சல்லி | கல் முதலியவற்றின் உடைந்த துண்டு ; சிறு கல் ; கிளிஞ்சில் ; சிற்றோடு ; சிறுகாசு ; சல்லிக்காசு ; மெலிந்தவன் ; துளை ; போக்கிரி ; பொய் ; ஆபரணத் தொங்கல் ; பறைவகை ; கெண்டைமீன்வகை ; அதிமதுரம் . |
| சல்லிக்கட்டு | ஏறு தழுவும் விழா , முரட்டு எருதுகளைக் கொட்டு முழக்குடன் வெளியில் விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு விழா . |
| சல்லிக்கரண்டி | துளையுள்ள ஒரு கரண்டிவகை . |
| சல்லிக்காசு | சிறுகாசு . |
| சல்லிகை | ஒருவகைப் பெரும்பறை . |
| சல்லிசு | எளிதானது . |
| சல்லித்தரை | கரடுமுரடான தரை ; கப்பியடித்ததரை . |
| சரீரபதனம் | உடம்பு விழுகையாகிய இறப்பு . |
| சரீரம் | உடல் ; ஆள் . |
| சரீரி | உடலையுடைய உயிர் . |
| சரு | சோறு ; தேவர் ; பிதிரர் உணவு . |
| சருக்கம் | நூற்பிரிவு ; அத்தியாயம்: இலக்கியச் செய்யுட் கூறுபாடு ; படலம் ; படைப்பு . |
| சருக்கரை | கருப்பஞ்சாற்றிலிருந்து உருவாக்கப் படும் ஓர் இனிப்புப்பொருள்வகை . |
| சருக்கரைமாமணி | கற்கண்டு . |
| சருக்கரைவள்ளி | வள்ளிக்கிழங்குவகை . |
| சருகட்டை | மரவட்டைப்பூச்சி . |
| சருகாதல் | உடல் முதலியன வற்றி மெலிதல் ; சருகுபோல் ஆதல் . |
| சருகு | உலர்ந்து வற்றிய இலை ; வெற்றிலை ; கைவளை ; கூட்டம் . |
| சருகுதிர்தல் | உலர்ந்த இலை கீழே விழுதல் ; தோல் உதிர்தல் . |
| சருகொட்டி | ஒரு பறவைவகை . |
| சருச்சரை | சுரசுரப்பு . |
| சருத்தி | தேர்க்கொடி ; விருதுக்கொடி . |
| சருப்பகுண்டலன் | பாம்பைக் குண்டலமாகக் கொண்ட சிவன் . |
| சருப்பதோபத்திரம் | மிறைக்கவியில் ஒன்று ; பல நிறப் பொடிகொண்டு இடும் கோலம் ; எல்லாப்பக்கங்களிலும் போர்புரியுமாறு அமைக்கப்பட்ட படைவகுப்பு முறை . |
| சருப்பம் | பாம்பு . |
| சருப்பராச்சியம் | சங்கங்குப்பிச்செடி . |
| சருப்பராசி | நாணல் . |
| சருமகன் | காண்க : சக்கிலியன் . |
| சருமகாரன் | காண்க : சக்கிலியன் . |
| சருமபந்தம் | மிளகு . |
| சருமம் | தோல் ; தோலாலாகிய பாய் ; கேடகம் ; மரப்பட்டை . |
| சருமன் | காண்க : சருமகன் ; பார்ப்பனர் பட்டப் பெயர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 433 | 434 | 435 | 436 | 437 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சரீரபதனம் முதல் - சல்லித்தரை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, துணி, முள்ளம்பன்றி, கைத்தாளம், விழா, சல்லிக்காசு, உடல், தோல், சக்கிலியன், சருமகன், சிறுகாசு, சருவக்கியன், விரைவுக்குறிப்பு, தாமரை, நார், சருகு, துளை, ஒன்று

