தமிழ் - தமிழ் அகரமுதலி - சராசரம் முதல் - சரீரப்போக்கு வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சரிப்பித்தல் | நடப்பித்தல் . |
சரிபங்கு | சமமான பங்கு ; பாதிப்பங்கு . |
சரிபம் | அசோகமரம் . |
சரிபாதி | பேர்பாதி . |
சரிபார்த்தல் | ஒத்துப்பார்த்தல் ; கேடு சூழ்தல் . |
சரிபோதல் | நேர்நடத்தல் ; சமாதானமாதல் ; விருப்பப்படி நடத்தல் ; ஒத்தல் . |
சரிமணி | மகளிர் இடையிலணியும் ஓர் அணிவகை . |
சரிமணிக்கோவை | மகளிர் இடையிலணியும் ஓர் அணிவகை . |
சரிமேரை | குடிகளின் உரிமை . |
சரியம் | சிறுநன்னாரிப் பூண்டு . |
சரியாக்குதல் | சமனாக்குதல் ; செய்துமுடித்தல் ; ஒத்திருக்கச் செய்தல் ; ஒழுங்காக்குதல் . |
சரியாதல் | சமமாதல் ; ஒத்துவருதல் ; முடிவுறுதல் ; நேர்வருதல் . |
சரியாபாதம் | சிவாகமப்பகுதி நான்கனுள் ஒன்று . |
சரியாவான் | சரியை நிலையில் ஒழுகுபவன் . |
சரியிடுதல் | படி முதலியவற்றை மூலத்தோடு ஒப்பிடுதல் . |
சரியை | ஒழுக்கம் ; பயிற்சி ; சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுகை ; பிச்சை ; சரிகை . |
சரியையில்ஞானம் | சிவபெருமானைக் குறித்த தியானபாவனையில் உறைப்பான ஓரனுபவ உணர்ச்சி . |
சரிவர | முறையாய் ; முழுதும் ; திட்டமாய் . |
சரிவருதல் | நேர்வருதல் ; சமமாதல் ; ஒத்துவருதல் ; தீர்தல் . |
சரிவாரம் | நில உரிமையாளனும் பயிர்செய்பவனும் விளைவைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுதல் . |
சரிவு | சரிந்துவிழுகை ; சாய்வு ; நகரம் , ஆறு முதலியவற்றின் ஓரம் ; மகளிர் முன்கை வளையல் . |
சரிளப்பா | வெண்கடுகு . |
சரீரக்கட்டு | உடலுறுதி . |
சரீரக்கூறு | உடலின் பகுதி ; உடல்நிலை . |
சரீரசம்பந்தம் | உறவு ; புணர்ச்சி . |
சரீரசரீரிபாவம் | உடலுக்கும் உடலுடையவனுக்குமுள்ள தொடர்பு . |
சரீரத்திரயம் | தூல சூக்கும காரண சரீரங்கள் , பருவுடல் நுண்ணுடல் காரண உடல்கள் என்னும் மூவகை உடலங்கள் . |
சரீரப்போக்கு | உடம்பின் தன்மை . |
சராசரம் | இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் ; அசையும் பொருள் அசையாப் பொருள்கள் ; உலகம் . |
சராசரி | சரிவீதம் . |
சராசரிமேரை | ஊர்ச் சிப்பந்திக்குப் பிரித்துக் கொடுக்கும் பாகம் . |
சராசனம் | வில் ; அரசமரம் . |
சராத்திரயம் | அம்புக்கூடு . |
சராப்பு | நாணய நோட்டக்காரன் ; காசுக் கடைக்காரன் ; கருவூல வேலைக்காரன் . |
சராயு | கருப்பப் பை . |
சராயுசம் | கருப்பையிற் பிறப்பது . |
சராவம் | அகல் ; இரும்புக்கம்பி . |
சராளம் | எளிமை ; தடையின்மை ; ஒழுங்கு . |
சராளித்தல் | பேதியாதல் , கழிதல் . |
சரி | ஒப்பு ; சம்மதக்குறிப்பு ; மலைச்சாரல் ; வழி ; கூட்டம் ; கைவளை ; பொருத்தம் ; நடத்தை ; ஒழுங்கு ; சரியளவு . |
சரிக்கட்டுதல் | ஒப்பிடுதல் ; ஒப்பச்செய்தல் ; நேர்படுத்துதல் ; இணங்குதல் ; கடனைத் தீர்த்தல் ; ஈடுசெய்தல் ; முடிவுபடுத்துதல் ; கொல்லுதல் ; பழிவாங்குதல் ; இணக்கமாகச் செய்தல் ; உண்மையாதல் . |
சரிக்குச்சரி | பதிலுக்குப்பதில் ; பழிக்குப்பழி . |
சரிகமபதநி | ஏழு சுரங்கள் . |
சரிகாணுதல் | நேரொத்தல் ; சரிபார்த்தல் , ஒத்திடுதல் ; பூர்த்திசெய்தல் ; கொலைசெய்தல் . |
சரிகை | கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று ; சரியை ; ஆடைக்கரையிலுள்ள பொன் வெள்ளி இழைகள் . |
சரிசமம் | நேரான ஒப்பு . |
சரிசமானம் | நேரான ஒப்பு . |
சரிசு | கைவளை . |
சரிசொல்லுதல் | ஒப்புக்கொள்ளுதல் ; பொறுப்பேற்றல் . |
சரித்தல் | சரியச்செய்தல் ; வெட்டித்தள்ளுதல் ; ஒரு பக்கஞ் சாயச்செய்தல் ; சஞ்சரித்தல் ; மேற்கொண்டொழுகுதல் ; வசித்தல் ; செரித்தல் ; அசைத்தல் . |
சரித்திரகாரன் | வரலாற்று ஆசிரியன் . |
சரித்திரம் | வரலாறு ; ஒழுக்கம் . |
சரித்திரை | புளியமரம் . |
சரித்து | ஆறு . |
சரிதம் | காண்க : சரித்திரம் . |
சரிதல் | நழுவுதல் ; கீழே விழுதல் ; குலைதல் ; பின்னிடுதல் ; சாதல் ; சாய்தல் ; சரிவாயிருத்தல் ; கூட்டமாய்ச் செல்லுதல் . |
சரிதன் | செயலிற் சிறந்தவன் . |
சரிதி | செயலிற் சிறந்தவன் . |
சரிதை | காண்க : சரித்திரம் ; சரியை ; பிச்சை . |
சரிப்படுத்துதல் | நேர்படுத்துதல் ; ஈடுசெய்தல் ; ஒப்பிடுதல் ; ஒப்பச்செய்தல் ; இணக்குதல் ; கடனைத்தீர்த்தல் ; முடிவுபடுத்துதல் ; கொல்லுதல் ; பழிவாங்குதல் . |
சரிப்பிடித்தல் | பிறருடன் ஒத்துச்செல்லுதல் ; கேடு சூழ்தல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 432 | 433 | 434 | 435 | 436 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சராசரம் முதல் - சரீரப்போக்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சரியை, சரித்திரம், ஒப்பிடுதல், மகளிர், ஒப்பு, நேர்படுத்துதல், ஒப்பச்செய்தல், கைவளை, ஈடுசெய்தல், கொல்லுதல், செயலிற், சிறந்தவன், காண்க, நேரான, ஒழுங்கு, பழிவாங்குதல், முடிவுபடுத்துதல், சரிகை, செய்தல், சமமாதல், அணிவகை, இடையிலணியும், கேடு, சூழ்தல், ஒத்துவருதல், நேர்வருதல், சரிபார்த்தல், காரண, பிச்சை, ஒழுக்கம், ஒன்று, பொருள்கள்