முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சரடுமுறுக்குதல் முதல் - சராங்கம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சரடுமுறுக்குதல் முதல் - சராங்கம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சரவிளக்கு | ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கித் தொங்கவிடும் கோயில்விளக்கு . |
| சரவீணை | வீணைவகை ; வீணைபோல் ஒலி செய்யும் கருவண்டு . |
| சரவை | மேல்வரிச் சட்டம் ; தெளிவற்ற எழுத்து ; எழுத்துப்பிழை ; மூலத்தோடு ஒத்திடாத படி ; தொந்தரவு . |
| சரவையிடுதல் | எழுத்துப்பிழை திருத்துதல் . |
| சரவையெழுத்து | திருத்தப்படாத முதற் படி ; படியெழுதுகை . |
| சரளம் | எளிது ; தடையின்மை ; ஒழுங்கு ; சீமைத் தேவதாரு ; சிவதைக்கொடி . |
| சரளி | சுரவரிசை ; கோழை . |
| சரளிக்கட்டு | சளிக்கட்டு . |
| சரளியாடுதல் | எழு சுரங்களையும் பாடிப் பழகுதல் . |
| சரளை | சிறுமணல் சேர்ந்து கெட்டித்த கல்வகை . |
| சரளைகட்டித்தல் | சரற்கல் இடுவித்துப் பாதையைச் செம்மையாக்குதல் . |
| சரற்காலம் | ஐப்பசியும் கார்த்திகையுமாகிய கூதிர்காலம் ; கார்காலம் . |
| சரன் | தூதன் ; ஒற்றன் . |
| சராகம் | நேர்வழி ; நாட்டின் பகுதி . |
| சராகை | வட்டில் . |
| சராங்கம் | தடையின்மை ; நிறைவு ; நேர்மை . |
| சரடுமுறுக்குதல் | தீயன செய்யத் தூண்டுதல் ; ஒரு செய்தியைப் பொய்யாகக் கற்பித்து வெளியிடுதல் . |
| சரடுவிடுதல் | மற்றவர் மூலமாகத் தன் கருத்தை வெளியிடுதல் ; தந்திரமாகப் பேசிப் பிறர் கருத்தை அறிய முயலுதல் ; காண்க : சரடு முறுக்குதல் . |
| சரண் | அடைக்கலம் ; பாதம் ; காண்க : அம்மையார்கூந்தல் . |
| சரண்டம் | பல்லி ; பறவைப்பொது . |
| சரண்புகுதல் | அடைக்கலமடைதல் . |
| சரணம் | அடைக்கலம் ; பாதம் ; மருதநிலத்தூர் ; வீடு ; அரசமரம் ; மயிற்றோகை ; மயில் ; பெருங்காயம் ; யானைத்தோட்டி ; வேதப்பகுதி ; கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு . |
| சரணம்புகுதல் | காண்க : சரண்புகுதல் . |
| சரணர் | வீரசைவப் பெரியோர் . |
| சரணாகதம் | அடைக்கலம் , தஞ்சமடைதல் . |
| சரணாகதன் | அடைக்கலம் புகுந்தோன் . |
| சரணாகதி | அடைக்கலம் புகுகை . |
| சரணாயுதம் | காலை ஆயுதமாக உடைய கோழி . |
| சரணார்த்தி | அடைக்கலம் தேடுபவன் . |
| சரணி | வழி . |
| சரணியன் | காப்பவன் . |
| சரதம் | உண்மை . |
| சரதலம் | கோள்நிலை முதலியவற்றை உணரும் கணக்கு . |
| சரந்தொடுத்தல் | அம்பெய்தல் , மிகுதியாக வைதல் . |
| சரநட்சத்திரம் | புனர்பூசம் , சுவாதி , திருவோணம் , அவிட்டம் , சதயம் என்னும் நல்ல நட்சத்திரங்கள் . |
| சரப்பணி | வயிரம் பதித்த கழுத்தணி . |
| சரப்பலகை | கடைகளின் அடைப்புப் பலகை ; தூண்களுக்கு நடுவில் செல்லும் பலகை . |
| சரப்பளி | காண்க : சரப்பணி . |
| சரபடி | மரபுவழி . |
| சரபம் | சிங்கத்தைக் கொல்லவல்ல எண்காற் பறவை ; ஒட்டகம் ; மலையாடு ; குறும்பாடு ; விட்டில்பூச்சி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| சரம் | அசைவு ; அசையும் பொருள் ; உயிர் ; நடை ; இயங்குதிணை ; மூச்சு ; காண்க : சரராசி ; சஞ்சலம் ; அம்பு ; ஐந்து ; திப்பிலி ; காண்க : நாணல் ; மணிவிடம் ; மாலை ; கொத்து ; நீர் ; கூரைச்சரம் ; நீர்நிலை ; இசைச்சுரம் ; போர் ; தனிமை ; காண்க :கொறுக்கச்சி கூதிர்காலம் ; அம்புக்கூடு . |
| சரம்பார்த்தல் | மூச்சுப்போக்குப் பார்த்தல் . |
| சரமகவி | இறந்தவரைப்பற்றி இரங்கிப் பாடும் பாட்டு , கையறுநிலை . |
| சரமண் | சுண்ணச்சாந்துமண் . |
| சரமணி | சிறுமணிகள் கட்டிய அரைப்பட்டிகை . |
| சரமதசை | இறக்குந்தறுவாய் . |
| சரமம் | முடிவு ; மேற்கு . |
| சரமழை | அம்புமழை . |
| சரமாரி | அம்புமழை . |
| சரராசி | மங்கலமாகக் கருதப்படும் மேழம் , கடகம் , துலை , சுறவம் என்னும் இராசிகளுள் ஒன்று . |
| சரலாந்தல் | கிளைவிளக்குவகை . |
| சரவட்டை | கீழ்த் தரமானது . |
| சரவடி | காண்க : சரபடி . |
| சரவணப்பொய்கை | இமயமலைச்சாரலில் உள்ளதும் முருகக்கடவுள் பிறந்ததுமான ஒரு நீர்நிலை . |
| சரவணபவன் | சரவணப்பொய்கையில் பிறந்த முருகக்கடவுள் . |
| சரவணம் | கொறுக்கைப்புல் ; நாணற்புல் ; காண்க : சரவணப்பொய்கை . |
| சரவணோற்பவன் | காண்க : சரவணபவன் . |
| சரவருடம் | அம்புமாரி . |
| சரவன் | அம்பெய்வோன் . |
| சரவாச்சம் | கறியுப்பு . |
| சரவாணி | காண்க : சரவன் . |
| சரவியம் | அம்பினால் எய்யும் இலக்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 431 | 432 | 433 | 434 | 435 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சரடுமுறுக்குதல் முதல் - சராங்கம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அடைக்கலம், அம்புமழை, நீர்நிலை, சரராசி, ஒன்று, சரபடி, சரவணபவன், முருகக்கடவுள், சரவணப்பொய்கை, சரவன், சரப்பணி, வெளியிடுதல், கூதிர்காலம், தடையின்மை, கருத்தை, பாதம், எழுத்துப்பிழை, என்னும், சரண்புகுதல், பலகை

