முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சர்ப்பசயனம் முதல் - சரடுதிரித்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சர்ப்பசயனம் முதல் - சரடுதிரித்தல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சரட்டெனல் | விரைவுக்குறிப்பு . |
சரடம் | ஓந்தி ; பச்சோந்தி ; குசும்பாமரம் |
சரடு | முறுக்குநூல் ; பொன் ; வெள்ளிக் கம்பியினாற் செய்த கழுத்தணிவகை ; தந்திரம் ; மூக்கணாங் கயிறு . |
சரடுதிரித்தல் | கயிறுதிரித்தல் ; காண்க : சரடு முறுக்குதல் . |
சரட்டுத்தாலி | பொன்கயிற்றில் கோத்தணியும் தாலிவகை . |
சர்வஞ்ஞத்துவம் | முற்றும் உணர்ந்தவனாய் இருக்கும் தன்மை . |
சர்வஞ்ஞன் | எல்லாமறிந்தவன் ; கடவுள் . |
சருவஞ்ஞன் | எல்லாமறிந்தவன் ; கடவுள் . |
சர்வத்தியாகம் | முற்றுந் துறக்கை . |
சர்வதா | எப்போதும் . |
சர்வதாரி | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்திரண்டாம் ஆண்டு . |
சருவதாரி | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்திரண்டாம் ஆண்டு . |
சர்வம் | முழுவதும் . |
சருவம் | முழுவதும் . |
சர்வமானியம் | வரியின்றி விடப்படும் நிலம் . |
சர்வமானியம் | வரியின்றி விடப்படும் நிலம் . |
சருவமுகூர்த்தம் | எல்லா நற்செயல்களுக்கும் உரிய நல்ல வேளை . |
சர்வவல்லமை | எல்லாம் வல்லனாய் இருக்குந் தன்மை . |
சர்வவியாபி | எங்கும் நிறைந்தவன் , கடவுள் . |
சர்வன் | சிவன் . |
சர்வாதிகாரி | எல்லாச் செயல்களையும் கவனிக்கும் அதிகாரி . |
சர்வேசன் | எல்லா உயிர்க்கும் தலைவனாகிய கடவுள் . |
சரக்கறை | பண்டங்கள் வைக்கும் அறை ; பொன் அறை ; அணிகலன்கள் வைக்கும் அறை . |
சரக்கு | வாணிகப்பொருள் ; பொன் ; கல்வியறிவு முதலியவற்றால் ஏற்படும் தகுதி அல்லது திறமை ; கறிச்சரக்கு ; மருந்துபண்டம்' சாராயம் ; முண்டைரோகம் . |
சரக்குப்பறித்தல் | பண்டங்களைக் கப்பலினின்று இறக்குதல் . |
சரக்குப்பிடித்தல் | வாணிகத்துக்குப் பண்டங்களை மொத்தமாக வாங்குதல் . |
சரக்கொன்றை | சரஞ்சரமாகப் பூக்கும் கொன்றைமரம் . |
சரகதி | அம்புபோல் செல்லும் குதிரையின் நடை . |
சரகம் | தேனீ ; வண்டு ; எல்லை ; நாட்டின் பகுதி . |
சரகாண்டம் | அம்புக்கூடு . |
சரகு | உலர்ந்து வற்றிய இலை . |
சரகூடம் | எதிரிகளின் ஆயுதம் தாக்காதவாறு அம்பினாற் கட்டும் பந்தல் . |
சரங்கட்டல் | பூவால் மாலை கட்டுதல் . |
சரச்சிறு | குறிஞ்சாக்கொடி . |
சரச்சுவதி | காண்க : சரசுவதி ; ஓர் ஆறு . |
சரசக்காரன் | இனிய குணமுடையவன் ; விகடன் . |
சரசங்காட்டுதல் | உறுப்புகளைத் தொட்டுப் பரிகசித்தல் . |
சரசசல்லாபம் | காதற்பேச்சு ; வேடிக்கைச் சொல் . |
சரசப்பேச்சு | காதற்பேச்சு ; வேடிக்கைச் சொல் . |
சரசம் | இனிய குணம் ; பரிகாசம் ; காம விளையாட்டு ; மலிவு ; தேக்கமரம் ; வெண்ணெய் ; உண்மை ; இனிமை . |
சரசரத்தல் | சருகு முதலியவை ஒலித்தல் ; தொடுதற்குச் சரசரவென்றிருத்தல் . |
சரசரப்பு | ஒலிக்கை ; சுரசுரப்பு ; மொருமொரு வென்றிருக்கை . |
சரசரெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; விரைந்து எளிதிற் செல்கைக் குறிப்பு ; சுரசுரப்புக் குறிப்பு . |
சரசல¦லை | சுரத விளையாட்டு , புணர்ச்சி . |
சரசாங்கி | இருபத்தேழாவது மேளகர்த்தா . |
சரசி | பரிகாசக்காரன் ; இனிய குணமுள்ளவன்(ள்) . |
சரசிசம் | குளத்தில் தோன்றுவதாகிய தாமரை . |
சரசு | குளம் , நீர்நிலை . |
சரசுவதி | பிரமன் தேவியாகிய கலைமகள் ; ஓர் ஆறு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
சரசுவதிபண்டாரம் | கலைமகளின் செல்வமாகிய நூல்நிலையம் . |
சரசுவதிபீடம் | கல்வி விளங்கும் இடம் ; கல்வி நிரம்பியவன் ; காண்க : சிக்குப்பலகை ; கலைமகள் தங்குமிடம் . |
சரசுவதியூர்தி | பூரான் . |
சரசுவதிவாக்கு | கலைமகள் அருளால் இயற்கையாகவே அமைந்த நினைவாற்றல் . |
சரசோதி | பிரமன் தேவியாகிய கலைமகள் . |
சரட்டட்டிகை | பொற்கயிற்றில் பதக்கங் கட்டிய கழுத்தணிவகை . |
சரட்டடைப்பன் | கால்நடை நோய்களுள் ஒன்று . |
சர்ப்பசயனம் | திருமாலின் பாம்பணை . |
சர்ப்பம் | பாம்பு ; பகற்பொழுது பதினைந்தனுள் இரண்டாவது . |
சர்ப்பராசி | நாணல்புல் . |
சர்ப்பனை | வஞ்சனை . |
சர்மம் | காண்க : சருமம் . |
சர்வசக்தி | அனைத்து வல்லமையுமுடையவன் . |
சர்வசங்கநிவர்த்தி | எல்லாப் பொருளிலும் பற்றுவிடுகை . |
சர்வசித்து | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தொன்றாம் ஆண்டு . |
சர்வசுதந்தரம் | முழு உரிமை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 430 | 431 | 432 | 433 | 434 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சர்ப்பசயனம் முதல் - சரடுதிரித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கலைமகள், காண்க, கடவுள், கணக்கில், ஆண்டு, இனிய, சொல், அறுபதாண்டுக், பொன், வேடிக்கைச், காதற்பேச்சு, கல்வி, விளையாட்டு, குறிப்பு, தேவியாகிய, பிரமன், ஒன்று, சரசுவதி, வரியின்றி, எல்லாமறிந்தவன், தன்மை, கழுத்தணிவகை, சரடு, இருபத்திரண்டாம், முழுவதும், எல்லா, நிலம், விடப்படும், சர்வமானியம், வைக்கும்