தமிழ் - தமிழ் அகரமுதலி - சமுதாயசோபை முதல் - சர்த்தி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சமைதல் | ஆயத்தமாதல் ; அமைதல் ; பொருத்தமாதல் ; தொடங்குதல் ; நிரம்புதல் ; புழுங்குதல் ; அழிதல் ; முடித்தல் ; பூப்படைதல் . |
| சமைப்பு | முயற்சி . |
| சமையல் | உணவு ஆக்குதல் ; ஆக்கிய உணவு . |
| சமையற்கட்டு | சமையலறை . |
| சமையற்கூடம் | சமையலறை . |
| சமைவு | நிலைமை ; அழிவு ; மனஅமைதி . |
| சய | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு . |
| சயகண்டி | கோல்கொண்டு அடிக்கும் ஒரு வட்ட மணிவகை . |
| சயகண்டை | கோல்கொண்டு அடிக்கும் ஒரு வட்ட மணிவகை . |
| சயகம் | பூவரும்பு . |
| சயசய | போற்றிபோற்றி , வெற்றி குறித்த வாழ்த்துமொழி . |
| சயசீலன் | வெற்றியாளன் . |
| சயத்தம்பம் | வெற்றித்தூண் . |
| சயதாளம் | தாளம் ஒன்பதனுள் ஒன்று . |
| சயந்தன் | இந்திரன் மகன் . |
| சயந்தனம் | தேர் . |
| சயந்தி | பிறந்தநாள் விழா ; காண்க : வாதமடக்கி ; சிற்றகத்தி ; இந்திரன் மகள் . |
| சயபாளம் | நேர்வாளமரம் . |
| சயபேரிகை | வெற்றிமுரசு . |
| சயம் | வெற்றி ; சூரியன் ; காண்க : காசநோய் ; சிதைவு ; சருக்கரை ; ஆம்பல் . |
| சயம்பு | தானே உண்டானது ; சிவன் ; பிரமன் ; அருகன் . |
| சயமகள் | வெற்றிக்குரிய கொற்றவை ; மிதுனராசி . |
| சயமடந்தை | வெற்றிக்குரிய கொற்றவை ; மிதுனராசி . |
| சயமரம் | காண்க : சுயம்வரம் ; வெற்றிக்குறியான தோரணம் . |
| சயனக்கிருகம் | படுக்கையறை , பள்ளியறை . |
| சயனம் | படுக்கை ; படுத்திருக்கை ; உறங்குதல் ; புணர்ச்சி . |
| சயனித்தல் | உறங்குதல் ; படுத்தல் ; புணர்தல் . |
| சயா | வாதமடக்கிமரம் ; கடுக்காய் . |
| சயிக்கம் | மென்மை . |
| சயிக்கர் | அரசமரம் . |
| சயிக்கினை | காண்க : சைகை . |
| சயிகை | காண்க : சைகை . |
| சயித்தம் | புத்தர்கோயில் . |
| சயித்தல் | வெல்லுதல் . |
| சயித்தான் | பிசாசு . |
| சயித்தி | அரசமரம் . |
| சயித்தியம் | குளிர்ச்சி ; குளிர்காலம் ; ஒரு நோய் . |
| சயிந்தர் | சிந்து நாட்டினர் . |
| சயிந்தவம் | குதிரை ; இந்துப்பு ; தலை . |
| சயிந்தவ லவணம் | இந்துப்பு . |
| சயிந்தவி | ஒரு பண்வகை . |
| சயிப்பு | பொறுமை ; வெற்றி . |
| சயிரோகம் | மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றி மரம் |
| சயிலகோபன் | மலைகளின்மீது கோபமுடைய இந்திரன் . |
| சயிலங்கமாலை | வெட்டிவேர் . |
| சயிலம் | மலை . |
| சயிலாதி | மலைகளுள் முதன்மையான கைலாச மலை ; சிலாதனுக்கு மகனான நந்தி . |
| சயிலேகம் | ஒரு மணப்பண்டம் . |
| சயினி | திப்பிலி . |
| சயை | துர்க்கை ; திருதியை , அட்டமி , திரயோதசி என்னும் திதிகள் ; முன்னைமரம் . |
| சர்க்கம் | சருக்கம் , நூற்பிரிவு ; படைப்பு . |
| சர்க்கரை | காண்க : சருக்கரை . |
| சர்க்கரைக்கிழங்கு | சர்க்கரைவள்ளிக்கிழங்கு . |
| சர்க்கரைப்பூசணி | பறங்கிக்காய் . |
| சர்க்கரைப்பொங்கல் | சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சமைக்கப்படும் உணவுவகை . |
| சர்ச்சரை | சுரசுரப்பு ; சச்சரவு . |
| சர்ச்சை | ஆராய்ச்சி ; சொற்போர் . |
| சர்த்தி | கக்கல் , வாந்தி . |
| சமுதாயசோபை | உறுப்புகள் தனித்தனியாக வன்றி ஒருங்குகூடுதலால் தோன்றும் அழகு . |
| சமுதாயநிலம் | ஊர்ப் பொதுவாக இருந்து அனுபவிக்கப்படும் நிலம் . |
| சமுதாயம் | மன்பதை , மக்களின் திரள் ; பொருளின் திரள் ; கோயில் நிருவாக அதிகாரிகளின் கூட்டம் ; பொதுவானது ; உடன்படிக்கை ; ஊர்ப் பொதுச்சொத்து . |
| சமுதாயவாதி | மக்கள் நலனுக்காக உழைப்பவன் ; மனம் புத்தி முதலிய அகச் சமுதாயத்தாலும் , நிலம் நீர் முதலிய புறச் சமுதாயத்தாலும் உலகம் தோன்றுமென வாதிக்கும் பௌத்த மதப் பிரிவினனாகிய சௌத்திராந்திகனும் வைபாடிகனும் . |
| சமுதாய விண்ணப்பம் | பலர் ஒன்றுகூடிச் செய்து கொள்ளும் மனு . |
| சமுதாயிகம் | ஒன்றுகூடுவது . |
| சமுப்பவம் | தைவேளைப்பூண்டு . |
| சமுன்னதி | அகந்தை . |
| சமூகம் | காண்க : சமுகம் . |
| சமூலம் | வேர்முதல் இலையீறாகவுள்ள எல்லாம் ; முழுவதும் . |
| சமேதம் | உடனிருத்தல் , கூடியிருத்தல் . |
| சமேதன் | கூடியயிருப்பவன் . |
| சமை | ஆண்டு ; மன அமைதி ; பொறுமை . |
| சமைகடை | முடிவு . |
| சமைத்தல் | படைத்தல் ; செய்தல் ; சித்தம் செய்தல் ; அழித்தல் ; உணவு ஆக்குதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 429 | 430 | 431 | 432 | 433 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சமுதாயசோபை முதல் - சர்த்தி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வெற்றி, இந்திரன், உணவு, இந்துப்பு, சைகை, பொறுமை, சர்க்கரை, சமுதாயத்தாலும், செய்தல், முதலிய, திரள், ஊர்ப், நிலம், அரசமரம், கொற்றவை, கோல்கொண்டு, ஆண்டு, சமையலறை, ஆக்குதல், அடிக்கும், வட்ட, மிதுனராசி, வெற்றிக்குரிய, சருக்கரை, மணிவகை, உறங்குதல்

