முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சமாதி முதல் - சமுதாயச்சீர்திருத்தம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சமாதி முதல் - சமுதாயச்சீர்திருத்தம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சமிதை | அத்தி , அரசு , ஆல் , இத்தி , கருங்காலி , நாயுருவி , பலாசு , மா ,வன்னி என ஒன்பதுவிதம் கூடிய வேள்விக்குரிய சுள்ளிவிறகு , ஓமவிறகு . |
| சமிப்பாகம் | கொன்றைமரம் . |
| சமிபாகம் | கொன்றைமரம் . |
| சமிபாடு | செரிக்குங்காலம் ; செரித்தல் . |
| சமிர்த்தி | நிறைவு . |
| சமிரணன் | வாயு . |
| சமிலாகி | திப்பிலி . |
| சமீகம் | போர் . |
| சமீபம் | அண்மை . |
| சமீபித்தல் | கிட்டுதல் , அணுகுதல் . |
| சமீரணம் | கிடாரைமரம் ; எலுமிச்சை . |
| சமீரணன் | காற்று . |
| சமீரணி | வீமன் . |
| சமீரன் | காற்று , வாயுதேவன் . |
| சமு | 729 தேரும் , 729 யானையும் , 2187 குதிரையும் , 3685 காலாளுங் கொண்ட படை . |
| சமுக்கா | தொலைநோக்காடி ; திசையறிகருவி . |
| சமுக்காளம் | காண்க : சமக்காளம் . |
| சமுகம் | சன்னிதானம் ; நேர்காணல் ; முன்னிலை ; திரள் ; மரியாதைச்சொல் . |
| சமுச்சயம் | தொகுதி ; ஐயம் . |
| சமுசயம் | ஐயம் . |
| சமுசாரக்காரன் | பெரிய குடும்பத்தை உடையவன் . |
| சமுசாரம் | காண்க : சம்சாரம் ; செய்தி . |
| சமுசாரி | திருமணமானவன் ; குடியானவன் ; குடும்பி ; வினைத்தொடர்பு உடையவன் . |
| சமுசாரித்தொழில் | வேளாண்மைத்தொழில் . |
| சமுசாரிமகன் | நல்ல குடும்பத்தில் பிறந்தவன் . |
| சமுசு | கலகக் கூட்டம் ; தீய ஆலோசனை . |
| சமுத்திரசுண்டி | கிளிஞ்சில் . |
| சமுத்திரசோகி | ஒரு மருந்துக்கொடிவகை . |
| சமுத்திரப்பச்சை | ஒரு மருந்துக்கொடிவகை . |
| சமுத்திரபகவான் | கடலுக்குரிய கடவுளான வருணன் . |
| சமுத்திரம் | கடல் ; ஒரு பேரெண் ; படையிலொரு தொகை ; மிகுதி ; முடக்கொற்றான் பூண்டு . |
| சமுத்திரராசன் | காண்க : சமுத்திரபகவான் . |
| சமுத்திரவிலாசம் | பிரிந்திருக்கும் தலைவனைக் குறித்துத் தலைவி கடற்கரையிலிருந்து புலம்புவதாகப் பாடும் நூல் வகை . |
| சமுத்திராந்தம் | சிறுகாஞ்சொறிக்கொடி ; பருத்திச்செடி ; சாதிக்காய் . |
| சமுத்திராப்பழம் | குந்தளப்பழம் . |
| சமுதாயகாரியம் | பொதுச்செயல் . |
| சமுதாயச்சீர்திருத்தம் | மக்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்களை முன்னேற்றத்தின் பொருட்டுத் திருத்துகை . |
| சமாதி | மனத்தைப் பரம்பொருளோடு ஒன்று படுத்தி நிறுத்துகை ; சங்கற்பம் ; ஓர் அணி வகை ; கல்லறை . |
| சமாதிக்கல் | கல்லறையை மூடுங்கல் . |
| சமாதிக்குழி | நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்தவர்களைப் புதைக்குங்குழி ; கல்லறை . |
| சமாதியடைதல் | யோகநிலையில் அமர்தல் ; சித்தி பெறுதல் . |
| சமாதியில்வைத்தல் | இறந்தவர்களை இருக்க வைத்துப் புதைத்தல் ; நாசஞ்செய்தல் . |
| சமாது | ஊமத்தைச்செடி ; காண்க : சமாதிக்குழி . |
| சமாப்தி | முடிவு . |
| சமாபந்தி | ஆண்டின் நிலவரித் தணிக்கை . |
| சமாராதனை | அந்தணருக்கு உணவளித்தல் . |
| சமாலம் | மயிற்றோகை விசிறி . |
| சமாலி | பூச்செண்டு . |
| சமாலுகம் | குறிஞ்சாக்கொடி . |
| சமாலேபனம் | சாணத்தால் மெழுகுகை . |
| சமாவர்த்தனம் | பிரமசரியவிரதம் நீங்குவதற்குச் செய்யும் சடங்கு . |
| சமாவருத்தனம் | பிரமசரியவிரதம் நீங்குவதற்குச் செய்யும் சடங்கு . |
| சமாளம் | களிப்பு . |
| சமாளித்தல் | சரிக்கட்டி நடத்துதல் ; பெரும் முயற்சியோடு ஒன்றை நிறைவேற்றுதல் . |
| சமானகரணி | காண்க : சமனியகரணி . |
| சமானதை | ஒப்பு . |
| சமானம் | ஒப்பு ; ஒத்துள்ளது . |
| சமானரகிதம் | ஒப்பில்லாதது . |
| சமானன் | பத்து வாயுக்களுள் ஒன்றும் உண்ட உணவைச் செரிக்கச் செய்வதுமான ஒரு வாயு வகை ; ஒத்தவன் . |
| சமானார்த்தபதம் | ஒருபொருட்பன்மொழி . |
| சமானி | ஒப்பானவன் . |
| சமானித்தல் | ஒப்பிடுதல் . |
| சமானோதகன் | பிதிர்களுக்கு நீர் விடுதற்குரியோன் . |
| சமி | அருகன் ; வன்னிமரம் ; தணக்குமரம் ; வாழைமரம் . |
| சமிக்கை | குறி ; செரிக்கை ; சைகை ; சங்கேதப்பெயர் . |
| சமிஞ்ஞை | சைகை ; பெயர் . |
| சமித்தம் | வேள்விமண்டபம் . |
| சமித்தல் | அழிதல் ; செரித்தல் ; சுவறுதல் ; நடத்தல் ; பொறுத்தல் ; அடக்குதல் ; மனங்கலங்கிப் போதல் . |
| சமித்து | காண்க : சமிதை ; கஞ்சாச்செடி . |
| சமிதம் | அமைதி . |
| சமிதி | சபைக்கூட்டம் ; போர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 428 | 429 | 430 | 431 | 432 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சமாதி முதல் - சமுதாயச்சீர்திருத்தம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பிரமசரியவிரதம், சமாதிக்குழி, கல்லறை, நீங்குவதற்குச், செய்யும், சைகை, ஒப்பு, சடங்கு, சமுத்திரபகவான், மருந்துக்கொடிவகை, வாயு, செரித்தல், கொன்றைமரம், போர், காற்று, உடையவன், ஐயம், சமிதை

