முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சமயத்தறுவாய் முதல் - சமாதானம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சமயத்தறுவாய் முதல் - சமாதானம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சமவேதம் | மற்றவற்றோடு நீக்கமின்றி இருக்கும் பொருள் . |
| சமழ்த்தல் | வருந்துதல் ; நாணுதல் ; தாழ்தல் . |
| சமழ்ப்பு | வருத்தம் ; இழிவு ; வெட்கம் . |
| சமழ்மை | இழிவு . |
| சமற்காரம் | பேச்சுத்திறம் ; செய்யுள் நயம் ; தோற்றம் . |
| சமன் | ஏற்றத்தாழ்வின்மை ; இசை நூலில் வரும் தானநிலை மூன்றனுள் ஒன்று ; ஆண்மை ; யமன் ; நீதிமன்ற அதிகாரியின் அழைப்புக்கட்டளை . |
| சமனம் | தணியச் செய்கை ; ஆடுதின்னாப்பாளை ; வசம்பு ; ஐந்து செயல்களுள் ஒன்றாய் ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலகானுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல் . |
| சமனாகத்தாக்குதல் | யாழில் பண்களை வலியவும் மெலியவும் தாக்காது அளவொத்த ஓசையெழும்படி செய்தல் . |
| சமனாதம் | உவர்மண் . |
| சமனிகை | இடுதிரை . |
| சமனிசை | ஒத்த இசை ; அமைதி என்னும் சுவை . |
| சமனியகரணி | புண்ணையும் , தழும்புகளையும் போக்கும் மருந்து . |
| சமனியம் | பொதுவானது ; முழுமை ; சாதி என்னும் பொருள் ; பெறுதற்கு எளியது . |
| சமாசம் | சபை ; தொகைமொழி ; இலிங்கபாடாணம் . |
| சமாசாரம் | செய்தி . |
| சமாதானம் | அமைதி ; இன்பதுன்பங்களைப் பொருட்படுத்தாத மனநிலை ; சம்மதம் ; இணக்கம் ; மனவொருமைப்பாடு . |
| சமயத்தறுவாய் | தக்க காலம் . |
| சமயத்தார் | ஒரு மதத்தைச் சார்ந்தவர் . |
| சமயதத்துவம் | மதத்தின் அடிப்படையான உண்மைகள் . |
| சமயதருமம் | மதத்தின் அடிப்படையான உண்மைகள் . |
| சமயதீட்சை | தீட்சை மூன்றனுள் சைவ சமயாசாரத்தை அனுட்டிக்கும்படி முதலாவதாகச் செய்யப்படுவது . |
| சமயநிந்தை | மதப்பூசல் . |
| சமயநிலை | மதக்கொள்கை ; மத அனுட்டானம் . |
| சமயப்பற்று | மத அபிமானம் . |
| சமயப்போர் | மதச் சண்டை . |
| சமயபேதம் | மத வேறுபாடு ; பொருத்தமற்ற காலம் ; துன்பக் காலம் . |
| சமயபோதனை | மதக்கொள்கைகளை உணர்த்துகை ; மதக்கொள்கை . |
| சமயம் | மதம் ; காலம் , தருணம் , அவகாசம் ; நூல் ; உடன்படிக்கை ; மரபு ; சமயதீட்சை . |
| சமயம்பார்த்தல் | தக்க காலத்தை எதிர்பார்த்து இருத்தல் . |
| சமயமிருத்தல் | ஓலக்கமிருத்தல் . |
| சமயமுதல்வி | சக்திமதத்தின் இறைவியாகிய உமை . |
| சமயலகனம் | மதக்கோட்பாட்டை மீறுகை . |
| சமயவாதம் | மதம் பற்றிய தருக்கம் . |
| சமயவாதி | தன் சமயமே உயர்ந்ததென வாதிப்பவன் . |
| சமயவாற்றல் | சொல்லாற்றல் . |
| சமயவிகற்பம் | மதவேறுபாடு . |
| சமயாசமயம் | தக்கதும் தகாததுமான காலங்கள் ; உரிய காலம் . |
| சமயாசாரம் | மத ஒழுக்கம் . |
| சமயி | மதத்தைச் சார்ந்தோன் ; சமயவாதி ; சமயதீட்சை பெற்றவன் . |
| சமயோசிதம் | தருணத்திற்குரிய பொருத்தம் . |
| சமர் | போர் ; முள்ளம்பன்றி . |
| சமர்ச்சனம் | வழிபடுதல் . |
| சமர்த்தல் | பொருதல் . |
| சமர்த்தன் | வல்லவன் . |
| சமர்த்தாளி | வல்லவன் . |
| சமர்த்தி | நிறைவு ; வல்லவள் ; பக்குவமடைந்த பெண் . |
| சமர்த்து | திறமை ; திறமையுள்ளவர் . |
| சமர்ப்பணம் | கடவுள் , பெரியோர்களுக்குக் காணிக்கை முதலியன அளிக்கை . |
| சமர்ப்பணை | கடவுள் , பெரியோர்களுக்குக் காணிக்கை முதலியன அளிக்கை . |
| சமர்ப்பித்தல் | கடவுள் , பெரியோர்களுக்குக் காணிக்கை முதலியன அளிக்கை . |
| சமரகேசரி | போரில் அரியேறு போன்ற பெருவீரன் . |
| சமரகோலாகலன் | போரில் விருப்பமுடையவன் . |
| சமரங்கம் | போர்க்களம் . |
| சமரசம் | ஒற்றுமை நடுநிலைமை . |
| சமரதன் | வேறு போர்வீரனோடு சமமாய்ப் போரிட வல்ல தேர்வீரன் . |
| சமரம் | போர் ; முள்ளம்பன்றி ; கவரிமா ; சாமரை . |
| சமரி | போருக்குரிய தெய்வமான கொற்றவை ; பாம்பு . |
| சமரேகை | நிலநடுக்கோடு . |
| சமலம் | மலம் ; அழுக்கு . |
| சமலன் | மலத்தோடுகூடிய ஆன்மா . |
| சமவாசம் | நட்பு . |
| சமவாதசைவம் | முத்தி நிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்கும் எனக் கொள்ளும் சைவமதவகை . |
| சமவாயம் | தற்கிழமை . |
| சமவிலை | ஏற்றமில்லாத நடுத்தர விலை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 427 | 428 | 429 | 430 | 431 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சமயத்தறுவாய் முதல் - சமாதானம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காலம், கடவுள், பெரியோர்களுக்குக், முதலியன, அளிக்கை, காணிக்கை, சமயதீட்சை, என்னும், வல்லவன், முள்ளம்பன்றி, அமைதி, ஆன்மா, போரில், இழிவு, மூன்றனுள், போர், சமயவாதி, அடிப்படையான, மதத்தின், மதத்தைச், உண்மைகள், பொருள், மதம், மதக்கொள்கை, தக்க

