தமிழ் - தமிழ் அகரமுதலி - அபிதேயம் முதல் - அம்பாள் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அபின்னம் | வேறுபடாதது ; சிதைவின்மை . |
| அபின்னாசக்தி | சிவத்தினின்றும் வேறுபடாத சக்தி . |
| அபினி | காண்க : அபின் . |
| அபீட்டம் | மிகுவிருப்பம் . |
| அபுத்திபூருவம் | அறியாமல் நிகழ்ந்தது . |
| அபுதன் | மூடன் . |
| அபூதம் | இல்பொருள் . |
| அபூதவுவமை | இல்பொருளுவமை . |
| அபூபம் | அப்பவகை . |
| அபூர்வம் | புதியது ; அரியது ; அருமை . |
| அபூருவம் | புதியது ; அரியது ; அருமை . |
| அபேட்சகர் | காண்க : வேட்பாளர் . |
| அபேட்சித்தல் | விரும்புதல் . |
| அபேட்சிதம் | விரும்பப்பட்டது . |
| அபேட்சை | விருப்பம் , வேட்பு . |
| அபேதம் | வேற்றுமையின்மை . |
| அபோச்சியம் | உண்ணத்தகாதது . |
| அபோதம் | அறியாமை . |
| அம் | அழகு ; நீர் ; மேகம் ; விகுதி ; சாரியை . |
| அம்சம் | கூறு ; உரிமைப்பங்கு ; அன்னப்பறவை . |
| அம்பகம் | கண் ; எழச்சி ; கட்டளை ; செம்பு ; நடிப்புக் கூலி . |
| அம்பட்டச்சி | நாவிதப்பெண் . |
| அம்பட்டத்தி | நாவிதப்பெண் . |
| அம்பட்டன் | நாவிதன் . |
| அம்படம் | புழுக்கொல்லிச் செடி ; ஆடுதின்னாப்பாளை . |
| அம்படலம் | அம்மி ; தேர் ; ஈயம் ; வெள்ளி ; மரக்கால் ; ஓடம் . |
| அம்பணத்தி | துர்க்கை . |
| அம்பணம் | நீர் ; மரக்கலம் ; பவளம் ; யாழ்வகை ; மரக்கால் ; துலாக்கோல் ; வாழைத்தண்டு . |
| அம்பணவர் | பாணர் . |
| அம்பர் | அவ்விடம் ; ஓர் ஊர் ; ஒருவகைப் பிசின் ; ஓர்க்கோலை . |
| அம்பரம் | ஆடை ; வானம் ; கடல் ; துயிலிடம் ; திசை ; சித்திரை நாள் ; மஞ்சள் . |
| அம்பரவாணம் | எட்டுக்கால் பறவை . |
| அம்பரைநாதம் | அப்பிரகம் என்னும் கனிப் பொருள் . |
| அம்பல் | சிலர் அறிந்து தம்முட் புறங்கூறல் ; பழிச்சொல் ; பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை . |
| அம்பலக்கூத்தன் | சிவபிரான் . |
| அம்பலகாரன் | ஊர்த்தலைவன் ; ஊர்ச் சபைத் தலைவன் ; கள்ளர் , வலையர் பட்டப்பெயர் . |
| அம்பலச்சாவடி | ஊர்ப் பஞ்சாயத்து மண்டபம் . |
| அம்பலத்தாடி | சிவபிரான் . |
| அம்பலத்தி | தான்றி ; தில்லைமரம் . |
| அம்பலம் | பலர்கூடும் வெளியிடம் ; ஊர்ச்சபை ; கழகம் ; தில்லையம்பலம் ; அமபலகாரன் . |
| அம்பலவாணன் | சிதம்பரத்தில் கோயில்கொண்டிருக்கும் சிவபிரான் . |
| அம்பலவிருட்சம் | தில்லைமரம் . |
| அம்பலி | களி ; முட்டைவெள்ளை ; ஒரு வாச்சியம் . |
| அம்பறாத்தூணி | அம்புக்கூடு . |
| அம்பாயம் | மகப்பேற்றுவலி , பிரசவவேதனை . |
| அம்பா ஆடல் | தைந் நீராடல் . |
| அம்பாள் | தாய் ; பார்வதி . |
| அபிதேயம் | செஞ்சொல்லால் சொல்லத்தக்கது . |
| அபிநயம் | நடிப்பு . |
| அபிநயன் | கூத்தன் . |
| அபிநயித்தல் | நடித்தல் . |
| அபிநவம் | புதியது . |
| அபிநிவேசம் | கிளர்ச்சி ; உள்ளார்வம் ; விருப்பம் . |
| அபிப்பிராயம் | நோக்கம் , கருத்து . |
| அபிமதம் | விருப்பம் ; இணக்கம் . |
| அபிமந்திரித்தல் | மந்திரங்களை உருவேற்றி நிலைக்கச் செய்தல் . |
| அபிமானபுத்திரன் | வளர்ப்பு மகன் ; வைப்பாட்டி மகன் . |
| அபிமானம் | தன்மதிப்பு ; உள்ளக்களிப்பு ; பற்று ; அறிவு ; கொலை . |
| அபிமானி | பற்றுடையோன் . |
| அபிமானித்தல் | மதித்தல் ; ஆதரித்தல் . |
| அபிமுகம் | நேர்முகம் ; சன்னிதி . |
| அபிமுகி | எதிர்நோக்கிய முகமுடையது ; நேர்முகமாயிருப்பது . |
| அபியுக்தன் | அறிஞன் . |
| அபியோகம் | இடித்துரை ; போருக்கழைக்கை ; முறையீடு . |
| அபியோகி | ஊறுசெய்ய ஊக்குவோன் ; குறை கூறுவோன் ; முறையீடு செய்வோன் ; வாதி . |
| அபிரட்சை | முழுப் பாதுகாப்பு ; நிறைவான பாதுகாப்பு . |
| அபிராமம் | அழகு . |
| அபிராமன் | மனத்துக்கு இனியவன் . |
| அபிராமி | அழகுள்ளவள் ; பார்வதி . |
| அபிருசி | பெருவிருப்பம் . |
| அபிரூபன் | மிக்க அழகுள்ளவன் . |
| அபிலாசம் | விருப்பம் . |
| அபிலாசை | விருப்பம் . |
| அபிவாதனம் | பெரியோரிடம் தன்னை அறிவித்துத் தொழுகை . |
| அபிவியத்தி | வெளிப்படுதல் . |
| அபிவிருத்தி | மிகுதியாய்ப் பெருகுதல் , வளர்ச்சி . |
| அபின் | கசகசாச் செடியின் பால் ; ஒரு மருந்து ; ஒரு போதைப் பொருள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அபிதேயம் முதல் - அம்பாள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், விருப்பம், புதியது, சிவபிரான், பார்வதி, தில்லைமரம், மகன், பாதுகாப்பு, முறையீடு, பொருள், நாவிதப்பெண், அரியது, அபின், அருமை, அழகு, காண்க, நீர், மரக்கால்

