தமிழ் - தமிழ் அகரமுதலி - அம்மாச்சன் முதல் - அமரகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அமர்த்துதல் | அமைதியாய் இருக்கச் செய்தல் ; அடக்குதல் ; திட்டப்படுத்துதல் ; நிலைநிறுத்துதல் ; பெருமிதம்பட நடித்தல் . |
| அமர்தல் | உட்காருதல் ; இளைப்பாறல் ; அடங்குதல் ; பொருந்தல் ; விரும்புதல் . |
| அமர்வு | இருப்பிடம் . |
| அமரகம் | போர்க்களம் . |
| அம்மாமி | அம்மான் மனைவி . |
| அம்மாய் | காண்க : அம்மாச்சி . |
| அம்மாயி | காண்க : அம்மாச்சி . |
| அம்மார் | கப்பல் கயிறு . |
| அமார் | கப்பல் கயிறு . |
| அம்மாள் | தாய் . |
| அம்மாறு | பெருங்கயிறு , வடம் . |
| அம்மான் | தாயுடன் பிறந்தவன் ; அத்தை கணவன் ; பெண் கொடுத்தவன் ; தந்தை ; கடவுள் . |
| அம்மான்பச்சரிசி | செங்கழுநீர் ; செடிவகை . |
| அம்மானார் | அம்மானை ஆட்டம் ; அம்மானை நூல் . |
| அம்மானை | ஒருவித மகளிர் விளையாட்டு ; அம்மனை ; ஒருவகைப் பாடல் ; அம்மானைப் பருவம் ; கலம்பகவுறுப்புள் ஒன்று . |
| அம்மானைப்பருவம் | பெண்பால் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ஒன்று ; சிறுமியர் கூடி அம்மானை விளையாடும் நிலை . |
| அம்மானை வரி | மகளிர் அம்மானையாடும்போது பாடும் பாட்டு . |
| அம்மி | அரைகல் . |
| அம்மிக்கல் | அரைகல் ; அம்மிக்குழவி . |
| அம்மிக்குழவி | அம்மியில் அரைக்கப் பயன்படும் நீண்ட திரள்கல் . |
| அம்மிமிதித்தல் | திருமணத்தில் மணமகள் அம்மிமேல் கால்வைத்தல் . |
| அம்மியம் | கள் ; காளம் என்னும் சிறு சின்னம் . |
| அம்மிரம் | மாமரம் . |
| அம்மிலம் | புளிப்பு ; புளியமரம் ; புளிவஞ்சி . |
| அம்மிலிகை | புளி . |
| அம்முக்கள்ளன் | வஞ்சகன் . |
| அம்முதல் | வெளிக்காட்டாது ஒளித்தல் ; அமுக்குதல் ; மேகம் மந்தாரமாதல் . |
| அம்மெனல் | நீர்ததும்பல் குறிப்பு ; ஓர் ஒலிக் குறிப்பு . |
| அம்மேயோ | ஒரு துன்பக் குறிப்பு . |
| அம்மை | தாய் ; பாட்டி ; பார்வதி ; தருமதேவதை ; சமணசமயத் தவப்பெண் ; நோய்வகை ; அழகு ; அமைதி ; வருபிறப்பு ; கடுக்காய் ; நூல்வனப்புள் ஒன்று ; மேலுலகம் . |
| அம்மைகுத்தல் | அம்மைநோய் வாராது தடுக்கும் அம்மைப்பாலை உடலில் குத்திச் சேர்க்கை . |
| அம்மைப்பால் | அம்மை குத்துதற்குரிய பால் . |
| அம்மைமுத்து | வைசூரிக் கொப்புளம் . |
| அம்மையப்பன் | தாயும் தந்தையும் ; சிவனும் சக்தியும் இணைந்த வடிவம் , உமாபதி . |
| அம்மையார் | முதியவள் ; பெண்களைக் குறிக்கும் மரியாதைச் சொல் . |
| அம்மையார் கூந்தல் | பூண்டுவகை . |
| அம்மையோ | ஒரு வியப்புச் சொல் . |
| அம்மைவடு | அம்மைத் தழும்பு . |
| அம்மைவார்த்தல் | அம்மை போடுதல் . |
| அம்மைவிளையாடுதல் | அம்மை போடுதல் . |
| அம்மோ | இரக்கக் குறிப்புச்சொல் . |
| அமங்கலம் | மங்கலம் அல்லாதது , இழவு . |
| அமங்கலி | கைம்பெண் . |
| அமங்கலை | கைம்பெண் . |
| அமஞ்சி | கூலியில்லா வேலை . |
| அமிஞ்சி | கூலியில்லா வேலை . |
| அமஞ்சியாள் | கூலியில்லாமல் வேலைசெய்பவன் . |
| அமட்டு | அதட்டு ; ஏய்ப்பு . |
| அமட்டுதல் | சிக்கவைத்தல் ; அச்சுறுத்தல் ; மயக்குதல் . |
| அமடு | சிக்குதல் . |
| அமண் | சமணசமயம் ; சமணர் ; அரையில் ஆடையின்மை ; வரிக்கூத்து வகை . |
| அமண்டம் | காண்க : ஆமணக்கு . |
| அமண்பாழி | சமணர் பள்ளி . |
| அமணம் | சமணசமயம் ; அரையில் ஆடையின்மை ; இருபதினாயிரம் கொட்டைப்பாக்கு . |
| அமணர் | சமணர் . |
| அமணானைப்படுதல் | காமவேறுபாடு அடைதல் . |
| அமதி | அமிழ்து ; காலம் ; சந்திரன் . |
| அமந்தி | நாட்டுவாதுமை . |
| அமயம் | பொழுது ; ஏற்ற சமயம் ; உரிய காலம் . |
| அமையம் | பொழுது ; ஏற்ற சமயம் ; உரிய காலம் . |
| அமர் | விருப்பம் ; கோட்டை ; போர் ; போர்க்களம் ; மூர்க்கம் . |
| அமர் | (வி) பொருந்து ; போராடு ; மாறுபடு . |
| அமர்க்களம் | போர்க்களம் ; ஆரவாரம் . |
| அமர்த்தல் | அமரச்செய்தல் ; ஏற்படுத்தல் ; மாறுபடுதல் ; பொருதல் . |
| அமர்த்தன் | திறமையற்றவன் . |
| அம்மாச்சன் | தாய்மாமன் . |
| அம்மாச்சி | தாயைப் பெற்ற பாட்டி . |
| அம்மாஞ்சி | அம்மான் சேய் என்பதன் மரூஉ ; அம்மான் மகன் ; மூடன் . |
| அம்மாஞ்சிமதனி | அம்மான் மகனின் மனைவி . |
| அம்மாட்டி | கொட்டிக்கிழங்கு . |
| அம்மாடி | வியப்பு இரக்க இளைப்பாறுதற் குறிப்பு . |
| அம்மாத்தாள் | காண்க : அம்மாச்சி . |
| அம்மாத்திரம் | அவ்வளவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அம்மாச்சன் முதல் - அமரகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அம்மானை, அம்மான், குறிப்பு, அம்மாச்சி, அம்மை, காண்க, போர்க்களம், சொல், சமணர், ஒன்று, காலம், உரிய, அமர், சமணசமயம், அரையில், சமயம், வேலை, ஆடையின்மை, ஏற்ற, பொழுது, போடுதல், மனைவி, தாய், கயிறு, கப்பல், மகளிர், அரைகல், கைம்பெண், அம்மையார், பாட்டி, அம்மிக்குழவி, கூலியில்லா

