தமிழ் - தமிழ் அகரமுதலி - அம்பாரம் முதல் - அம்மா வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அம்புயாதம் | காண்க : தாமரை ; நீர்க்கடம்பு . |
| அம்புசாதன் | பிரமன் . |
| அம்புடம் | ஆடுதின்னாப்பாளை . |
| அம்புதம் | மேகம் ; கோரை ; தாமரை . |
| அம்புதி | கடல் ; கால்வாய் . |
| அம்புநிதி | கடல் . |
| அம்புப்புட்டில் | காண்க : அம்புக்கூடு . |
| அம்புமுது | ஒருவகை முத்து . |
| அம்புமுதுபாடன் | ஒருவகை முத்து . |
| அம்புமுதுவரை | ஒருவகை முத்து . |
| அம்புயன் | காண்க : அம்புசாதன் . |
| அம்புயை | திருமகள் . |
| அம்புரம் | கீழ்வாயிற்படி . |
| அம்புராசி | கடல் ; அம்புத்திரள் . |
| அம்புரோகிணி | தாமரை . |
| அம்புலி | சந்திரன் ; அம்புலிப் பருவம் ; சோளக்கூழ் . |
| அம்புலிப் பருவம் | குழந்தையுடன் விளையாட வருமாறு சந்திரனை அழைக்கும் நிலை ; பிள்ளைத்தமிழ் உறுப்புகளுள் ஒன்று . |
| அம்புலிமணி | காண்க : சந்திரகாந்தக்கல் . |
| அம்புலியம்மான் | சந்திரன் . |
| அம்புவாகம் | மேகம் . |
| அம்புவாசினி | எலுமிச்சை ; பாதிரி . |
| அம்புவி | பூமி . |
| அம்புளி | இனிய புளிப்பு . |
| அம்பேல் | விளையாட்டில் தடை நிகழ்த்தப் பிள்ளைகள் கூறும் சொல் . |
| அம்பை | பார்வதி ; வெட்டிவேர் ; கொக்கு மந்தாரை . |
| அம்போசன் | சந்திரன் . |
| அம்போதரங்கம் | அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா உறுப்புகளுள் ஒன்று ; நீர்த்திரைபோல் நாற்சீரடியும் முச்சீரடியும் இருசீரடியுமாய்க் குறைந்து வருவது ; ஒத்தாழிசைக் கலிப்பா வகை . |
| அம்போதரம் | மேகம் ; கடல் . |
| அம்போதி | கடல் ; பாட்டின் உட்பொருள் . |
| அம்போருகத்தாள் | திருமகள் . |
| அம்போருகம் | தாமரை . |
| அம்போருகன் | பிரமன் . |
| அம்ம | கேட்டல் பொருளைத் தழுவிவரும் ஓர் இடைச்சொல் ; ஒரு வியப்புச் சொல் ; ஓர் உரையசைச் சொல் . |
| அம்மகோ | ஓர் இரக்கக் குறிப்புச் சொல் . |
| அம்மங்கார் | ஆசாரியன் மனைவி ; அம்மான் மகள் . |
| அம்மட்டு | அவ்வளவு . |
| அம்மண்டார் | தாய்மாமன் . |
| அம்மணக்கட்டை | ஆடை கட்டாத ஆள் . |
| அம்மணக்குண்டி | ஆடை கட்டாத ஆள் . |
| அம்மணத்தர் | சமணர் . |
| அம்மணத்தோண்டி | காண்க : அம்மணக்கட்டை . |
| அம்மணம் | ஆடையில்லாமை ; இடை ; விபசாரம் ; தகாத பேச்சு . |
| அம்மணி | பெண்ணைக் குறிக்கும் மரியாதைச் சொல் . |
| அம்மந்தி | அம்மான் மனைவி . |
| அம்மம் | முலை ; குழந்தை உணவு . |
| அம்மன் | அம்மை ; தேவதை . |
| அம்மன்கட்டு | கூகைக்கட்டு . |
| அம்மன்கொடை | அம்மனுக்காகச் செய்யப்படும் ஊர்த் திருவிழா . |
| அம்மன்கொண்டாடி | மாரியம்மன் கோயில் பூசாரி . |
| அம்மனே | ஒரு வியப்புக் குறிப்பு . |
| அம்மனை | தாய் ; தலைவி ; அம்மானை விளையாட்டு ; அம்மானையாடும் கருவி . |
| அம்மனைப்பாட்டு | அம்மானை ஆட்டத்தில் மகளிர் பாடும் பாட்டு . |
| அம்மனைமடக்கு | கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிர் இருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு . |
| அம்மனையோ | ஓர் அவலக் குறிப்பு . |
| அம்மனோ | ஓர் அவலக் குறிப்பு . |
| அம்மா | தாய் ; தாய்போல் மதிக்கப்படுபவள் ; வியப்பு இரக்கக் குறிப்பு ; ஓர் உவப்புக் குறிப்பு ; ஓர் அசைச்சொல் . |
| அம்பாரம் | நெற்குவியல் ; களஞ்சியம் . |
| அம்பாரி | யானைமேல் அமைத்த இருக்கை . |
| அம்பால் | தோட்டம் . |
| அம்பாலிகை | தருமதேவதை ; பாண்டுவின் தாய் . |
| அம்பாவனம் | சரபப் பறவை . |
| அம்பி | தெப்பம் , தோணி ; மரக்கலம் ; தாம்பு ; இறைகூடை ; கள் ; காராம்பி ; ஓர் ஊர் ; தம்பி . |
| அம்பிகாபதி | அம்பிகை கணவனாகிய சிவபிரான் , கம்பர் மகன் . |
| அம்பிகை | பார்வதி ; தருமதேவதை ; துர்க்கை ; திருதராட்டிரன் தாய் ; தாய் ; அத்தை . |
| அம்பிகைதனயன் | விநாயகன் . |
| அம்பிகைபாகன் | சிவபிரான் . |
| அம்பு | நீர் ; கடல் ; மேகம் ; விண் ; உலகம் ; மூங்கில் ; கணை ; எலுமிச்சை ; பாதிரி ; திப்பிலி ; வெட்டிவேர் ; வளையல் ; சரகாண்ட பாடாணம் . |
| அம்புக்கட்டு | அம்புகளின் கட்டிய தொகுதி ; அம்பறாத்தூணி . |
| அம்புக்குதை | அம்பின்நுனி . |
| அம்புக்கூடு | அம்பறாத்தூணி . |
| அம்புசம் | காண்க : தாமரை : நீர்க்கடம்பு . |
| அம்புயம் | காண்க : தாமரை : நீர்க்கடம்பு . |
| அம்புசாதம் | காண்க : தாமரை ; நீர்க்கடம்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அம்பாரம் முதல் - அம்மா வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தாமரை, சொல், கடல், குறிப்பு, தாய், நீர்க்கடம்பு, மேகம், முத்து, சந்திரன், ஒருவகை, அம்மணக்கட்டை, அம்மானை, கட்டாத, அம்மான், தருமதேவதை, சிவபிரான், அம்பறாத்தூணி, அம்பிகை, மனைவி, பாட்டு, அவலக், மகளிர், பாதிரி, அம்புலிப், பருவம், திருமகள், அம்புக்கூடு, அம்புசாதன், பிரமன், உறுப்புகளுள், ஒன்று, ஒத்தாழிசைக், கலிப்பா, வெட்டிவேர், பார்வதி, எலுமிச்சை, இரக்கக்

