தமிழ் - தமிழ் அகரமுதலி - அபத்தம் முதல் - அபிதானம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அபலம் | பயனின்மை ; வலியின்மை ; காய்ப்பு நின்ற மரம் ; இழப்பு ; திமிங்கிலம் ; கொழு . |
| அபலன் | வலியற்றவன் . |
| அபலை | பெண் ; துணையற்றவள் . |
| அபவர்க்கம் | முத்தி , வீடுபேறு . |
| அபவருக்கம் | முத்தி , வீடுபேறு . |
| அபவருத்தனம் | அகற்றுதுல் ; சுருக்குதல் . |
| அபவாதம் | பழிச்சொல் ; வீண்பழி . |
| அபவேட்டிதம் | அபிநயவகை . |
| அபாக்கியம் | பேறின்மை . |
| அபாங்கம் | கடைக்கண் பார்வை ; நெற்றிக் குறி . |
| அபாண்டம் | பொய்க்குற்றம் ; இடுநிந்தை . |
| அபாத்திரம் | தகுதியற்றவன் ; பரிசுபெறத்தகாதவன் . |
| அபாத்திரன் | தகுதியற்றவன் ; பரிசுபெறத்தகாதவன் . |
| அபாம்பதி | கடல் . |
| அபாமார்க்கம் | நாயுருவி என்னும் பூடுவகை . |
| அபாயம் | கேடு , ஆபத்து . |
| அபாரசக்தி | அளவிலா ஆற்றல் . |
| அபாரணை | உண்ணாமை . |
| அபாரம் | அளவற்றது . |
| அபாவம் | இன்மை ; ஓர் அளவை . |
| அபானம் | கடுக்காய் மரம் ; மலவாய் . |
| அபானவாயு | கீழ்நோக்கிச் செல்லும் காற்று . |
| அபானன் | பத்து வாயுக்களுள் ஒன்று . |
| அபானியம் | கடுக்காய் . |
| அபி | அதட்டல் , கண்டித்தல் , கேள்வி , ஐயம் , அதிகம் முதலிய பொருள்களை உணர்த்தும் ஒரு வடமொழி முன்னொட்டு . |
| அபிகதம் | அருகடைதல் . |
| அபிகாதம் | அடித்தல் , வருத்தம் . |
| அபிகாயம் | சூம்புகை ; காசநோய்வகை . |
| அபிசரன் | தோழன் . |
| அபிசாதன் | உயர்குலத்தோன் . |
| அபிசார ஓமம் | இறப்பைக் கருதிச் செய்யும் வேள்வி . |
| அபிசாரகம் | மந்திரத்தால் கொல்லல் . |
| அபிசாரம் | தீங்கு விளையச் செபிக்கும் மந்திரம் ; சூனியம் வைத்தல் . |
| அபிசாரி | வேசி ; விலைமகள் . |
| அபிசித்து | பகல் முகூர்த்தம் பதினைந்தனுள் எட்டாவது . |
| அபிட்டம் | பாதரசம் . |
| அபிடேகம் | திருமுழுக்கு ; பட்டஞ்சூட்டும் சடங்கு ; திருமுடி . |
| அபிதா | ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல் . |
| அபிதானம் | பெயர் ; மறைவு . |
| அபத்தம் | வழு ; பொய் ; நிலையாமை ; மோசம் . |
| அபத்தியசத்துரு | நண்டு . |
| அபத்தியம் | பத்தியத்தவறு ; பிள்ளை ; மனித இனம் . |
| அபதானம் | பெருஞ்செயல் . |
| அபதேசம் | புகழ் ; நிமித்தம் ; சாக்குப்போக்கு ; குறி ; இடம் . |
| அபதேவதை | கேடு விளைக்கும் சிறுதெய்வம் ; பிசாசு . |
| அபநயனம் | கடனிறுக்கை ; கைப்பற்றுதல் ; அழித்தல் ; குருட்டுக்கண் . |
| அபமிருத்தியு | காண்க : அகாலமிருத்து . |
| அபமிருத்து | காண்க : அகாலமிருத்து . |
| அபயதானம் | அடைக்கலம் தருதல் . |
| அபயம் | அடைக்கலம் ; அச்சமின்மை ; அருள் ; ஓலம் . |
| அபயமிடுதல் | அடைக்கலம் தரும்படி கூவுதல் ; முறையீடு . |
| அபயமுத்திரை | அடைக்கலமளித்தலைக் காட்டும் கைக்குறி . |
| அபயர் | வீரர் . |
| அபயவத்தம் | இணைக்கைவகை . |
| அபயவாக்கு | அஞ்சல் என்னும் சொல் , ஆறுதல் உரை . |
| அபயன் | அச்சமற்றவன் ; சோழன் ; அருகன் ; கடுக்காய் வகை . |
| அபயாத்தம் | அடைக்கலம் அருளும் கை ; அச்சந்தீரக் காட்டும் கை . |
| அபரக்கிரியை | பிணச்சடங்கு ; நீத்தார்கடன் . |
| அபரகாத்திரம் | கால் ; பின்கால் . |
| அபரசன் | பின்பிறந்தோன் , இளவல் . |
| அபரஞ்சி | புடமிட்ட பொன் . |
| அபரஞானம் | நூலறிவு . |
| அபரபக்கம் | தேய்பிறை . |
| அபரபட்சம் | தேய்பிறை . |
| அபரம் | பின் , முதுகு ; யானையின் பின்புறம் ; கவசம் ; பொய் ; மேற்கு ; நரகம் ; நீத்தார் கடன் ; அமரம் என்னும் படகைத் திருப்பும் தண்டு . |
| அபராங்கம் | உடலின் பிற்பகுதி . |
| அபராசிதன் | வெல்லப்படாதவன் ; சிவன் ; திருமால் ; ஒரு பல்லவ மன்னன் . |
| அபராணம் | பிற்பகல் . |
| அபராதம் | குற்றம் ; தண்டம் . |
| அபராதி | குற்றவாளி . |
| அபராந்தம் | மேனாடு ; பிற்பகல் . |
| அபராந்தர் | மேனாட்டார் . |
| அபரான்னம் | காண்க : அபராணம் . |
| அபரிச்சின்னம் | பகுக்கப்படாமை ; அளவிட முடியாதது . |
| அபரிமிதம் | அளவின்மை . |
| அபரியந்தம் | மட்டில்லாமை , எல்லையற்றது . |
| அபரூபம் | மூளி . |
| அபரோட்சஞானம் | காட்சி அறிவு . |
| அபரோட்சம் | காட்சி அறிவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அபத்தம் முதல் - அபிதானம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அடைக்கலம், சொல், காண்க, என்னும், கடுக்காய், தேய்பிறை, காட்டும், அபராணம், பிற்பகல், அறிவு, காட்சி, மரம், அகாலமிருத்து, குறி, பரிசுபெறத்தகாதவன், கேடு, வீடுபேறு, முத்தி, பொய், தகுதியற்றவன்

