முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அந்திரவசனம் முதல் - அப்பியங்கனம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அந்திரவசனம் முதல் - அப்பியங்கனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அப்பளக்காரம் | உறைப்பும் உவர்ப்பும் கூடிய ஒரு பொருள் . |
| அப்பளம் | அப்பவருக்கத்துள் ஒன்று , ஒருவகைப் பணியாரம் . |
| அப்பன் | தகப்பன் ; பெரிய தகப்பன் ; வள்ளல் ; ஓர் அன்புரை . |
| அப்பாட்டன் | தந்தையின் பாட்டன் , முப்பாட்டன் . |
| அப்பாத்தாள் | தந்தையயைப் பெற்ற பாட்டி . |
| அப்பாத்தை | தமக்கை . |
| அப்பாயி | தந்தையின் தாய் ; பையன் ; பேதை . |
| அப்பால் | அதன்மேல் ; அப்பக்கம் . |
| அப்பாவி | பேதை . |
| அப்பி | தமக்கை ; தலைவி ; அருமை குறித்தற்கு வழங்கும் சொல் . |
| அப்பிகை | காண்க : ஐப்பசி . |
| அப்பிச்சன் | தகப்பன் . |
| அப்பியங்கம் | எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் . |
| அப்பியங்கனம் | எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் . |
| அந்திரவசனம் | கொட்டைப்பாக்கு . |
| அந்திரன் | தேவன் ; வேடன் ; கடவுள் . |
| அந்திரி | பார்வதி ; காளி . |
| அந்தில் | இடம் ; அவ்விடம் ; ஓர் அசைச்சொல் ; இரண்டு ; வெண்கடுகு . |
| அந்திவண்ணன் | மாலைவானம் போன்ற நிறமுடையவன் , சிவன் . |
| அந்து | நெற்பூச்சி ; பாதகிண்கிணி ; யானைக்காற் சங்கிலி ; கிணறு ; தொகை ; பூச்சிவகை ; முடிவு ; அப்படி . |
| அந்துக்கண்ணி | பீடை நிரம்பிய கண்ணாள் . |
| அந்துகம் | யானைச்சங்கிலி ; பாதகிண்கிணி . |
| அந்துப்போதிகை | யானையைக் கட்டுங் குறுந்தறி . |
| அந்துவாசம் | கொட்டைப்பாசி . |
| அந்தூல்பல்லக்கு | பல்லக்கு வகை . |
| அந்தேசம் | கதியின்மை . |
| அந்தேசாலம் | தேற்றாமரம் . |
| அந்தேவாசி | மாணாக்கன் . |
| அந்தை | ஒரு நிறைவகை . |
| அந்தோ | அதோ ; வியப்பு , இரக்கக் குறிப்புச்சொல் . |
| அந்தோர் | காண்க : நெல்லி . |
| அநந்தசொரூபி | எண்ணிலா உருவுடையான் , கடவுள் . |
| அநபாயம் | அழிவின்மை . |
| அநபாயன் | அழிவில்லாதவன் ; சிவன் ; ஒரு சோழன் . |
| அநவத்தானம் | தவறான நிலை . |
| அநவத்திதம் | நிலையற்றது . |
| அநாகாலம் | பஞ்சகாலம் . |
| அநாசாரிதம் | பற்றுக்கோடற்றது . |
| அநாசாரியன் | ஆசிரியனல்லாதவன் . |
| அநாத்துமா | அத்துமாவல்லாத பொருள் . |
| அநாதபம் | குளிர்மை ; நிழல் ; வெயிலின்மை . |
| அநாதரட்சகர் | திக்கற்றோரைக் காப்பவர் ; கடவுள் . |
| அநாதன் | கடவுள் ; திக்கற்றவன் . |
| அநாதிமலமுத்தர் | இயல்பாகவே பற்றுகளினின்று நீங்கியவர் . |
| அநாமதேயம் | பெயரில்லாதது . |
| அநாமதேயன் | நன்கு அறியப்படாதவன் . |
| அநாமிகை | மோதிரவிரல் . |
| அநாயகம் | அரசின்மை , தலைமையின்மை . |
| அநிகம் | படை . |
| அநித்தம் | நிலையின்மை ; சிவசத்திபேதம் . |
| அநித்தியம் | நிலையாமை ; நிலையற்றது ; பொய் . |
| அநிதம் | அளவுகடந்தது . |
| அநிமிடன் | இமையா நாட்டத்தவன் , தேவன் . |
| அநியாயம் | நீதியின்மை , முறையின்மை ; வீண் . |
| அநிர்வசனம் | மாயை ; சரியாக மெய்ப்பிக்க முடியாதது . |
| அநிர்வசனீயம் | மாயை ; சரியாக மெய்ப்பிக்க முடியாதது . |
| அநிருத்தம் | மெய்ப்பிக்கப்படாதது . |
| அநிருத்தன் | தடையற்றவன் ; அடங்காதவன் ; மன்மதன் மகன் ; ஒற்றன் . |
| அநிருதம் | மாயை ; பொய் . |
| அநிலாசனம் | காற்றை உண்ணுதல் ; நோன்பு . |
| அநிவாரிதம் | தடுக்கப்படாதது . |
| அநீதம் | நியாயமின்மை . |
| அநீதி | நியாயமின்மை . |
| அப்சரசு | அப்ஸரஸ் , தெய்வப் பெண்டிருள் ஒரு வகையார் . |
| அப்தபூர்த்தி | ஆண்டுநிறைவு . |
| அப்தம் | ஆண்டு . |
| அப்தா | வாரம் . |
| அப்ப | காண்க : அப்படா . |
| அப்பச்சி | தந்தை ; சிற்றப்பன் ; பாட்டன் ; சிற்றுண்டி . |
| அப்பட்டம் | கலப்பற்றது ; வெளிப்படையானது ; உள்ளது உள்ளபடியே . |
| அப்படா | ஒரு வியப்புக் குறிப்புச் சொல் . |
| அப்படி | அவ்வாறு . |
| அப்பணை | கட்டளை ; பிணை ; ஆதாரம் . |
| அப்பத்தாள் | அக்காள் ; தந்தையின் தாய் . |
| அப்பதி | கடல் . |
| அப்பம் | சிற்றுண்டி ; அடை . |
| அப்பர் | ஆண் ஆடு ; ஆண்குரங்கு ; திருநாவுக்கரசு நாயனார் ; வயது முதிர்ந்தோர் ; உயர்ந்தோர் . |
| அப்பல் | காண்க : அப்புதல் . |
| அப்பழுக்கு | தூய்மையின்மை ; குற்றம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்திரவசனம் முதல் - அப்பியங்கனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கடவுள், மாயை, தகப்பன், சொல், தந்தையின், நிலையற்றது, பொய், சரியாக, மெய்ப்பிக்க, சிற்றுண்டி, அப்படா, நியாயமின்மை, முடியாதது, அப்படி, தேவன், தாய், தமக்கை, பாட்டன், பொருள், பேதை, எண்ணெய், சிவன், கொள்ளுதல், தேய்த்துக், பாதகிண்கிணி

