தமிழ் - தமிழ் அகரமுதலி - கன்மாடன் முதல் - கன்னான் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கன்னம் | கதுப்பு ; காது ; யானைச்செவி ; கோள்வீதியளவு ; கன்னக்கோல் ; கன்னக் கருவியால் தோண்டிய துளை ; களவு ; பொற்கொல்லனின் சிறு தராசு தட்டு ; வேண்டுதலாகச் செய்து கொடுக்கும் சிறு படிமம் ; பெருமை ; தாடை ; சதுரத்தின் ஒரு மூலையினின்று அதற்கு நேர் மூலைவரையுள்ள குறுக்கு ; நேர்கோண முக்கோணத்தில் நேர்கோணத்திற்கு எதிரிலுள்ள கை ; பொற்கொல்லன் ; பொன் . |
| கன்னமதம் | யானைக் காதில் தோன்றும் மதநீர் . |
| கன்னமிடுதல் | சுவரைத் துளை செய்தல் ; கொள்ளையிடல் . |
| கன்னமூலம் | காதினடி . |
| கன்னல் | கரகம் ; நாழிகைவட்டில் ; நாழிகை ; கரும்பு ; சருக்கரை ; கற்கண்டு ; மணற்பாகு ; ஒருவகைச் சிறு குருவி . |
| கன்னலமுது | பாயசம் . |
| கன்னவகம் | சிறுகீரை . |
| கன்னவேதம் | காதுகுத்துஞ் சடங்கு . |
| கன்னவேதை | காதுகுத்துஞ் சடங்கு . |
| கன்னற்கட்டி | கருப்புக்கட்டி ; கற்கண்டு . |
| கன்னன்மணி | கண்டசருக்கரைத் தேறு . |
| கன்னா | ஒரு வாச்சியம் . |
| கன்னாடர் | கருநாடர் . |
| கன்னாபின்னாவெனல் | பொருளின்றிக் குழறுதற் குறிப்பு , வாயில் வந்தவாறு உளறுதல் . |
| கன்னார் | கல்நார் ; பாத்திரவேலை செய்பவர் . |
| கன்னாருரித்தல் | இல்லாத பொருளைப் பெற முயலுதல் ; ஒரு பொருளைப் பாடுபட்டு முயன்று பெறுதல் . |
| கன்னாவதஞ்சம் | செவிமலர்ப்பூ என்னும் ஓர் அணி . |
| கன்னான் | பாத்திரவேலை செய்பவன் . |
| கன்மாடன் | களங்கமுடையவன் . |
| கன்மாதிகன் | பிதிர் கருமஞ் செய்வோன் . |
| கன்மி | பாவி ; கருமங்களைச் சரியாகச் செய்பவன் ; தொழிலாளி ; ஊழியன் . |
| கன்மிட்டன் | செயல் செய்வதில் வல்லவன் ; எல்லாச் செயல்களையும் அக்கறையுடன் செய்பவன் . |
| கன்முகை | காண்க : கன்முழை . |
| கன்முரசு | பெருவாகை . |
| கன்முலை | இறுகிய பசுமடி . |
| கன்முழை | மலைக்குகை . |
| கன்மேந்திரியம் | காண்க : கருமேந்திரியம் . |
| கன்மேய்வு | மாடப்புறா . |
| கன்மேலெழுத்து | கல்லெழுத்து , அழிவில்லாச் சாசனம் . |
| கன்மொந்தன் | வாழைகளில் ஒருவகை . |
| கன்றல் | சினக்குறிப்பு ; எழுச்சியின் மிகுதி ; கன்றிப்போன புண் . |
| கன்றினகாயம் | கன்றிப்போன புண் ; ஆறிப்போன புண் . |
| கன்று | விலங்கின் கன்று ; மரக்கன்று , இளமரம் ; சிறுமை ; கை வளையல் . |
| கன்றுக்குட்டி | பசு எருமைகளின் இளங்கன்று . |
| கன்றுகாலி | கன்றுகளுடன் கூடிய மாட்டுமந்தை . |
| கன்றுதல் | முதிர்தல் ; அடிபடுதல் ; சினக்குறிப்புக் கொள்ளுதல் ; வெயிலாற் கருகுதல் ; மனமுருகுதல் ; வருந்துதல் , நோதல் ; வாடுதல் ; பதனழிதல் . |
| கன்றுதாய்ச்சி | சினைப்பசு . |
| கன்றுப்பொங்கல் | மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் , காணும்பொங்கல் . |
| கன்றுபோடுதல் | பசு முதலியன கன்று ஈனுதல் . |
| கன்றுவிடுதல் | பால் சுரக்கும்படி கன்றை ஊட்டவிடுதல் ; பால் கறத்தல் . |
| கன்னக்களவு | சுவரில் கன்னம் வைத்துச் செய்யும் திருட்டு . |
| கன்னக்காரன் | கன்னமிடுந் திருடன் . |
| கன்னக்கிரந்தி | கன்னத்தில் வரும் ஒரு நோய் . |
| கன்னக்கோல் | சுவரைத் துளைத்தற்குத் திருடர் கையாளும் கருவி . |
| கன்னகடூரம் | கர்ணகடோரம் , காதால் கேட்கப்படாத கொடியது . |
| கன்னகம் | கன்னக்கோல் . |
| கன்னங்கரிய | மிகக் கறுப்பான . |
| கன்னங்கறேலெனல் | மிகக் கறுப்பாயிருத்தல் . |
| கன்னசாமரை | குதிரையின் காதில் அலங்காரமாய்த் தொங்கவிடும் சாமரை . |
| கன்னசாலை | மேல்மாளிகைப் பக்கங்களில் முன் புறம் நீண்டுள்ள பரண்கூடு . |
| கன்னஞ்செய்தல் | கேட்டல் . |
| கன்னடகௌளம் | ஒரு பண்வகை . |
| கன்னடம் | திராவிட மொழிகளுள் ஒன்று ; கன்னடமொழி பேசும் கருநாடக மாநிலம் ; ஒரு பண்வகை . |
| கன்னத்தட்டு | சிறு தராசு தட்டு . |
| கன்னப்பரிசை | கதுப்புமயிர் . |
| கன்னப்பூ | மகளிர் காதணியினுள் ஒன்று . |
| கன்னப்பொறி | கன்னத்தின் பொட்டு . |
| கன்னபரம்பரை | கேள்விவழியாக வந்த செய்தி . |
| கன்னபாரம்பரியம் | கேள்விவழியாக வந்த செய்தி . |
| கன்னபூரம் | அசோகு ; மாதர் காதணியினுள் ஒன்று . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 297 | 298 | 299 | 300 | 301 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்மாடன் முதல் - கன்னான் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிறு, கன்று, ஒன்று, புண், செய்பவன், கன்னக்கோல், மிகக், பால், துளை, தராசு, பண்வகை, கன்றிப்போன, வந்த, கேள்விவழியாக, காதணியினுள், செய்தி, கன்முழை, காதுகுத்துஞ், கற்கண்டு, சுவரைத், காதில், சடங்கு, பாத்திரவேலை, காண்க, கன்னம், பொருளைப், தட்டு

