தமிழ் - தமிழ் அகரமுதலி - கனகத்தும்பி முதல் - கனிப்பு வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
கனப்பாடு | கனமாயுள்ள தன்மை ; அகற்சி . |
கனப்பு | கனமாயிருக்கை ; பருமை ; பாரம் ; அழுத்தம் ; கொழுப்பு ; இறுமாப்பு |
கனபாடி | வேதத்துக்குக் கனம் சொல்ல வல்லோன் . |
கனம் | மேகம் ; பாரம் ; பருமன் ; பெருமை ; செறிவு ; திரட்சி ; உறுதி ; மிகுதி ; ஒர் எண்ணை அதனாலேயே இருமுறை பெருக்கவரும் இலக்கம் ; வட்டம் ; அகலம் ; பொன் ; கனராகம் ; கூட்டம் . |
கனம்பார்த்தல் | எடைபார்த்தல் ; நிலைதெரிதல் . |
கனம்பொருந்திய | கண்ணியமுள்ள . |
கனமழை | பெருமழை . |
கனமாப்பலகை | சங்கப்பலகை . |
கனமூலம் | கனத்தொகையினின்று அறியும் அதன் மூலம் . |
கனமோசம் | பெருவஞ்சகம் . |
கனருசி | மின்னல் ; மிகுந்த சுவை . |
கனல் | நெருப்பு ; வெப்பம் . |
கனல்வு | சினம் . |
கனலி | சூரியன் ; நெருப்பு ; கொடிவேலி ; பன்றி ; கள்ளி . |
கனலிநாள் | அத்தநாள் . |
கனலுதல் | எரிதல் ; கொதித்தல் ; சினத்தல் ; சிவத்தல் . |
கனலொழுங்கு | சுடர் , சுவாலை . |
கனலோன் | சூரியன் . |
கனவட்டம் | குதிரை ; பாண்டியன் குதிரை . |
கனவல் | கனாக் காணுதல் . |
கனவளவு | அகலம் , நீளம் , உயரம் இவற்றைப் பெருக்குதலால் வரும் எண் . |
கனவளவை | அகலம் , நீளம் , உயரம் இவற்றைப் பெருக்குதலால் வரும் எண் . |
கனவான் | மதிப்புடையோன் . |
கனவிரதம் | நீர் |
கனவீனம் | மதிப்புக்குறைவு . |
கனவு | கனா ; உறக்கம் ; மயக்கம் . |
கனவுதல் | கனாக் காணுதல் . |
கனற்கூர்மை | வளையலுப்பு . |
கனற்சி | உள்ளக்கொதிப்பு ; சினம் ; வெப்பம் . |
கனற்சிலை | ஒருவகைக் கருங்கல் |
கனற்பு | அடுப்பு . |
கனற்றுதல் | எரியச்செய்தல் ; சுடச்செய்தல் ; வெதுப்புதல் ; மிக்கு விளங்குதல் . |
கனறல் | கனலுதல் ; சினம் . |
கனனிறக்கல் | மணி , மாணிக்கம் . |
கனா | கனவு , உறக்கத்தில் தோன்றும் தோற்றங்கள் , சொப்பனம் |
கனாக்காணுதல் | தூக்கத்தில் சில தோற்றங்களைக் காணுதல் ; கிடைத்தற்கரியதைப் பெற அவாவுதல் . |
கனி | பழம் ; கனிவு ; சாரம் ; இனிமை ; கனிச்சீர் , மூவகைச் சீரில் இறுதியிலுள்ள நிரையசை ; பொன் முதலியன எடுக்கும் சுரங்கம் . |
கனிக்காழ் | பழத்தின் விதை . |
கனிகரம் | அன்பு ; அக்கறை . |
கனிகாலம் | பழுக்குங் காலம் . |
கனிச்சீர் | கனி என்னும் வாய்பாடுகொண்ட அசையை இறுதியிலுடைய வஞ்சியுரிச்சீர் . |
கனிட்டன் | கடைசிப்பிள்ளை ; பின்னவன் , தம்பி ; கீழ்மகன் . |
கனிட்டிகை | கனிட்டை , சிறுவிரல் |
கனிட்டை | கடைசியாகப் பிறந்த மகள் ; தங்கை ; சிறுவிரல் . |
கனித்தல் | கனிவாதல் , இளகச் செய்தல் . |
கனிதல் | பழுத்தல் , முதிர்தல் ; மனமிளகுதல் ; நெகிழ்தல் ; தழல் மிகுதல் ; புதைத்தல் . |
கனிந்தபாடம் | தெளிந்த பாடம் . |
கனிப்பு | இனிமை . |
கனகத்தும்பி | பொன்வண்டு . |
கனகதண்டி | பொற்சிவிகை . |
கனகதண்டிகை | பொற்சிவிகை . |
கனகதம் | ஒட்டகம் . |
கனகதர் | சண்டாளர் , புலையர் . |
கனகம் | பொன் ; மீன்கொத்தி . |
கனகமலை | மேருமலை , பொன்மலை . |
கனகமாரி | பொன்மழை . |
கனகமாரிபொழிதல் | பொன்னைச் சிறப்பாகக்கொடுத்தல் . |
கனகமாழை | பொற்கட்டி . |
கனகமிளகு | வால்மிளகு . |
கனகன் | இரணியன் ; நாணயக் குற்றவகை . |
கனகாங்கி | முதல் மேளகர்த்தா . |
கனகாபிடேகம் | பொன் திருமஞ்சனம் . |
கனகாமிர்தம் | வெள்ளி . |
கனகாரியம் | முக்கியமான அலுவல் ; ஊமத்தை . |
கனகி | ஊமத்தை . |
கனங்காய் | மனோரஞ்சிதம் . |
கனங்கொள்ளுதல் | பாரமாதல் ; பெருமையுடையதாதல் . |
கனசங்கலிதம் | அடுத்தடுத்துவரும் எண்களின் கனத்தைக் கூட்டுகை . |
கனசாரம் | பச்சைக் கருப்பூரம் . |
கனசாரி | மிகுதி . |
கனத்தநாள் | கோள்நிலையால் நோயினைப் பெருகச் செய்யும் நாள் |
கனத்தல் | பாரமாதல் ; மிகுதியாதல் ; பருத்தல் ; கம்மிய குரலாதல் ; பெருமையுறுதல் . |
கனதண்டி | கனமும் பெருமையுமுள்ளது . |
கனதி | பாரம் ; இறுமாப்பு . |
கனதை | மதிப்பு , சிறப்பு , கௌரவம் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 299 | 300 | 301 | 302 | 303 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனகத்தும்பி முதல் - கனிப்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொன், சினம், பாரம், அகலம், காணுதல், இனிமை, கனவு, வரும், பெருக்குதலால், கனிச்சீர், கனிட்டை, பாரமாதல், ஊமத்தை, பொற்சிவிகை, சிறுவிரல், இவற்றைப், உயரம், சூரியன், கனம், வெப்பம், நெருப்பு, கனலுதல், குதிரை, நீளம், இறுமாப்பு, கனாக், மிகுதி