தமிழ் - தமிழ் அகரமுதலி - கற்பூரணி முதல் - கறார் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
கற்றடம் | கல்லடர்ந்த காடு ; மலைவழி . |
கற்றம் | பாறை . |
கற்றவன் | கற்றறிந்தவன் ; ஞானி . |
கற்றளம் | கற்கள் பதித்த தரை . |
கற்றளி | கற்கோயில் . |
கற்றளிப்புறம் | கோயிலுக்கு விடப்பட்ட இறையிலி நிலம் . |
கற்றறிமூடன் | கற்றும் மூடனாயிருப்பவன் . |
கற்றறிமோழை | கற்றும் மூடனாயிருப்பவன் . |
கற்றறிவு | கற்றதனாலாகிய அறிவு . |
கற்றா | கன்றையுடைய பசு . |
கற்றாமரை | மலைப்பூடுவகை . |
கற்றார் | அறிஞர் , புலவர் , படித்தோர் , கல்வியறிவுடையோர்கள் . |
கற்றாழஞ்சோறு | கற்றாழையின் உள்ளீடான பகுதி . |
கற்றாழை | ஒரு பூடு ; சிவப்புக் கற்றாழை ; கற்றாழைவகை . |
கற்றானை | காவித்துணி . |
கற்றிருத்துதல் | காண்க : கற்பொளிதல் . |
கற்றிருப்பணி | கற்களால் செய்யும் கோயில் வேலை . |
கற்றுக்குட்டி | கற்குஞ் சிறுவன் ; அறிவில் தேர்ச்சி பெறாதவன் . |
கற்றுக்கொடுத்தல் | சொல்லிக் கொடுத்தல் , போதித்தல் . |
கற்றுக்கொள்ளுதல் | பயிலுதல் . |
கற்றுச்சொல்லி | புலவனொருவனிடம் கற்று அவனுக்குத் துணையாயிருப்பவன் . |
கற்றுச்கொலவோன் | புலவனொருவனிடம் கற்று அவனுக்குத் துணையாயிருப்பவன் . |
கற்றுளசி | மலைத்துளசி . |
கற்றேக்கு | ஒருவகைத் தேக்குமரம் ; கும்பிமரம் . |
கற்றை | திரள் ; கட்டு ; தொகுதி ; தென்னோலைக் கற்றை . |
கற்றைபிடித்தல் | கூரை நிரைச்சல் வேய்தல் ; தென்னோலை பின்னுதல் . |
கற்றைபோடுதல் | கூரை வேய்தல் . |
கற்றைவைத்துக்கட்டுதல் | புல்கற்றை வைத்துக் கூரை வேய்தல் ; மண்திரள் வைத்துக் கட்டுதல் . |
கற்றொட்டி | கருங்கல்லாலான தொட்டி . |
கற்றொழிலோர் | சிற்பாசாரிகள் , கல்தச்சர் . |
கற்றோர்நவிற்சியணி | குணமிகுதிக்குக் காரணமில்லாததைக் காரணமாக்கிச் சொல்லும் அணி . |
கறக்குதல் | நூல் முறுக்கேற்றுதல் ; நிமிண்டுதல் . |
கறகறத்தல் | ஒலித்தல் ; தொண்டையறுத்தல் ; கடித்தற்கு நறுமுறுவென்றிருத்தல் . |
கறகறப்பு | ஓர் ஒலிக்குறிப்பு ; நறுமுறுவென்றிருக்கை ; தொண்டையறுப்பு ; மனத்தாபம் ; தொந்தரவு செய்கை . |
கறங்கல் | ஒலித்தல் ; சுழற்சி ; வளைதடி ; பேய் . |
கறங்குதல் | ஒலித்தல் ; சுழலுதல் ; சூழ்தல் . |
கறங்கோலை | ஓலைக் காற்றாடி . |
கறடு | தாழ்ந்த முத்துவகை ; குள்ளமானது ; பொன் . |
கறண்டிகை | முடி உறுப்புள் ஒன்று . |
கறண்டிகைச்செப்பு | சுண்ணாம்புக் கரண்டகம் . |
கறத்தல் | பால் கறத்தல் ; பால் கொடுத்தல் ; கவருதல் . |
கறந்தமேனியாய் | வேறு கலப்பின்றித் தூய்மையாய் . |
கறப்பற்று | துருப்பிடிக்கை . |
கறப்பு | கறக்கை . |
கறம் | கொடுமை , தீவினை ; வன்செய்கை . |
கறமண் | காய்ந்து வறண்டது . |
கறல் | விறகு . |
கறவாத்தேனு | உதைகாற்பசு . |
கறவு | கப்பம் ; கறவைப்பசு . |
கற்றச்சன் | கல்வேலை செய்யும் சிற்பி . |
கறவை | பால் கறக்கும் பசு ; கறக்கை . |
கறவைக்கலம் | பால் கறக்கும் ஏனம் . |
கறவையான் | பாற்பசு . |
கறள் | கறை , துரு . |
கறளுதல் | வளர்ச்சியறுதல் ; விளக்குத்திரி மங்கி எரிதல் . |
கறளை | குள்ளன் ; வளர்ச்சியின்மை ; வளர்ச்சியற்றது ; பருக்காத காய் ; ஒருவகைக் கட்டி . |
கறா | காடைக்குரல் . |
கறார் | வரையறை ; உறுதி . |
கற்பூரணி | கற்றாழை . |
கற்பூரத்தட்டு | கோயிலில் தீபம் காட்டப் பயன் படுத்தும் தட்டு . |
கற்பூரம் | கருப்பூரம் ; பொன்னாங்காணி . |
கற்பூரவிலை | மிகக் குறைந்த விலை . |
கற்பூரவிளக்கு | கருப்பூரதீபம் . |
கற்பை | எடைகல் , தராசு , உரைகல் வைப்பதற்கான பை . |
கற்பொடி | கல்தூள் ; உடைந்த துண்டு ; சுண்ணாம்புக்கல் முதலியவற்றின் பொடி ; அன்னபேதி . |
கற்பொழுக்கம் | கற்பியல் . |
கற்பொளிதல் | உறியாற்கல்லைச் செப்பனிடுதல் . |
கற்பொறி | பற்றிரும்பு ; கோட்டைமதிலில் வைக்கப்பெறும் கல்வடிவுள்ள இடங்கணி முதலிய பொறிகள் . |
கற்பொறுக்கி | புறாவகை . |
கற்போடுதல் | செயலைக் கெடுத்தல் . |
கற்போன் | மாணாக்கன் , படிப்போன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 295 | 296 | 297 | 298 | 299 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கற்பூரணி முதல் - கறார் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பால், வேய்தல், ஒலித்தல், கூரை, கற்றாழை, வைத்துக், கறத்தல், கறக்கை, கற்றை, கறக்கும், துணையாயிருப்பவன், செய்யும், கற்பொளிதல், மூடனாயிருப்பவன், கொடுத்தல், புலவனொருவனிடம், அவனுக்குத், கற்று, கற்றும்