தமிழ் - தமிழ் அகரமுதலி - கறாளி முதல் - கன்மழை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கன்மபாதகன் | மிகக் கொடியன் . |
| கன்மபூமி | காண்க : கருமபூமி . |
| கன்மம் | கருமம் , செயல் ; வினைப்பயன் ; செய்தொழில் ; பாவம் ; தீவினை . |
| கன்மம்புசித்தல் | வினைப்பயனை நுகர்தல் . |
| கன்மலி | ஏலக்காய்ச்செடி . |
| கன்மலை | பெரும் பாறையாலான மலை ; படிக்காரம் . |
| கன்மழை | ஆலங்கட்டி மழை . |
| கன்மபந்தம் | புதுமை ; கருமத்தால் வரும் பிறப்புகளில் பயனைக் கொடுக்கும்படி தோன்றுவது . |
| கறி | மிளகு ; மரக்கறி , இறைச்சி ; கடித்துத்தின்னுகை ; ஒரு நாழிகை . |
| கறிக்கருணை | காறாக்கருணை . |
| கறிக்குடலை | கறியைக் கொண்டுசெல்லுதற் குறிய இலைக்கலம் . |
| கறித்தல் | கடித்துத் தின்னுதல் ; உப்புச்சுவை மிகுதல் ; |
| கறித்தூள் | கறிக்குறிய கூட்டுப்பொடி , கறிமசாலை . |
| கறிப்பலா | ஈரப்பலா . |
| கறிப்புடல் | ஒருவகை வண்டு ; கறிக்குரிய காய்காய்க்கும் ஒருவகைக் கொடி . |
| கறிப்புடோல் | புடல் . |
| கறிமசாலை | கறிக்கிடும் சரக்கு . |
| கறியமுது | சமைத்த கறியாகச் சாமிக்குப் படைக்கும் உணவு ; கறியாகிய உணவு . |
| கறியமுதுவடகம் | காண்க : கறிவடகம் . |
| கறியாமணக்கு | பப்பாளி . |
| கறிவடகம் | கறியிற் சேர்க்கும் வடகவகை . |
| கறிவேப்பிலை | கறி தாளிக்கும்போது சேர்க்கும் இலை ; கறிவேம்பு . |
| கறிவேம்பு | கறிவேப்பிலைமரம் . |
| கறு | மனவைரம் . |
| கறுக்கட்டுதல் | தீராப் பகை கொள்ளுதல் . |
| கறுக்கல் | கருமையாதல் ; விடிவதற்கு முன்னுள்ள இருட்டு . |
| கறுக்கன்வெள்ளி | மட்ட வெள்ளி . |
| கறுக்காய் | இளநீரின் கண்பக்கத்துள்ள பகுதி ; பதர் . |
| கறுத்தகார் | நெல்வகை . |
| கறுத்தவன் | கருநிறமுடையவன் ; பகைவன் . |
| கறுத்தோர் | பகைவர் . |
| கறுப்பன் | கரியவன் ; ஒரு தேவதை ; ஒருவகை நெல் . |
| கறுப்பி | கருநிறமுடையவள் ; கருவண்டு ; பேய்த்தும்பை . |
| கறுப்பு | கருமை ; வெகுளி ; குற்றம் ; கறை ; கறுப்புப்புள்ளி ; தழும்பு ; இராகு ; பேய் பிசாசுகள் ; அபின் . |
| கறுப்புக்கட்டுதல் | பயிர் முதிர்நது கருநிறங்கொள்ளுதல் ; மழைக்கோலங் கொள்ளல் . |
| கறுப்புச்சருக்கரை | தூய்மை செய்யப்படாத சருக்கரை . |
| கறுப்புப்படர்தல் | கருமேகநோய் உடலில் பரவுதல் . |
| கறுப்புமரம் | தும்பிலி . |
| கறுப்புவீரம் | விளக்குக்கரி . |
| கறும்புதல் | துன்புறுத்துதல் ; சிறிதுசிறிதாகக் கடித்துண்ணுதல் . |
| கறுமுதல் | சினத்தல் . |
| கறுமுறெனல் | சினக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு . |
| கறுமொறெனல் | சினக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு . |
| கறுவம் | வெகுளி . |
| கறுவல் | கரியன் ; கருநிறம் ; சினக்குறிப்பு . |
| கறுவியம் | தீராப்பகை . |
| கறுவு | சினம் ; மனவைரம் . |
| கறுவுதல் | சினக்குறிப்புக் காட்டுதல் ; மனவைரங்கொள்ளுதல் ; பல்லால் துருவுதல் . |
| கறுவைத்தல் | மனவைரங் கொள்ளுதல் . |
| கறுழ் | கடிவாளம் . |
| கறேரெனல் | கருமைநிறக் குறிப்பு . |
| கறேலெனல் | கருமைநிறக் குறிப்பு . |
| கறை | மாசு ; குற்றம் ; கறுப்புநிறம் ; நிறம் ; இருள் ; இரத்தம் ; மாதவிடாய் ; உரல் ; கருங்காலி ; குடிவரி ; நஞ்சு . |
| கறைக்கண்டன் | கழுத்தில் கறையையுடைய சிவபெருமான் . |
| கறைக்கணித்தல் | குறைநீங்க வேண்டித் துதித்தல் . |
| கறைப்பல் | மாசு படிந்த பல் . |
| கறைமிடற்றண்ணல் | காண்க : கறைக்கண்டன் . |
| கறைமிடற்றோன் | காண்க : கறைக்கண்டன் . |
| கறையடி | உரல் போன்ற அடியையுடைய யானை . |
| கறையான் | செல்லு , சிதல் . |
| கறையான்மேய்தல் | செல்லுப்பிடித்தல் . |
| கறையோர் | வரிசெலுத்துவோர் . |
| கன் | கல் ; சிறு தராசு ; கன்னார்தொழில் ; வேலைப்பாடு ; செம்பு ; உறுதிப்பாடு . |
| கன்சருக்கரை | கற்கண்டு . |
| கன்மசாந்தி | முற்பிறப்புகளின் தீவினை யொழியச் செய்யும் சடங்கு . |
| கன்மடம் | பாவம் ; அழுக்கு ; கறை . |
| கன்மதம் | ஒரு மருந்துச் சரக்கு . |
| கன்மநிவர்த்தி | பாவக் கழுவாய் . |
| கறாளி | அடங்காமை . |
| கறாளை | கறளை , வளர்ச்சியற்றவன் ; வளர்ச்சியற்றது . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 296 | 297 | 298 | 299 | 300 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கறாளி முதல் - கன்மழை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குறிப்பு, காண்க, கறைக்கண்டன், சினக், வெகுளி, குற்றம், ஒலிக்குறிப்பு, உரல், மாசு, கருமைநிறக், கொள்ளுதல், மனவைரம், கறிமசாலை, தீவினை, பாவம், ஒருவகை, சரக்கு, சேர்க்கும், கறிவடகம், உணவு, கறிவேம்பு

