தமிழ் - தமிழ் அகரமுதலி - கன்னி முதல் - கனகசபை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கன்னிப்பொங்கல் | தைமாதப் பிறப்புக்கு அடுத்த நாளில் கன்னிகைகளால் கொண்டாடப் பெறும் ஒரு விழா . |
| கன்னிப்போர் | வீரனது முதற்போர் . |
| கன்னிமடம் | காண்க : கன்னியாமடம் . |
| கன்னிமதில் | அழியாத கோட்டை . |
| கன்னிமாடம் | காண்க : கன்னியாமாடம் . |
| கன்னிமாதம் | புரட்டாசி மாதம் . |
| கன்னிமார் | மணமாகாப் பெண்டிர் ; நற்கதியடைந்த கற்புடைக் கன்னியர் ; ஏழு கன்னியர் என்னும் தேவதைகள் . |
| கன்னிமுத்திரை | காண்க : கன்னிச்சவ்வு . |
| கன்னிமை | கன்னிப்பருவம் . |
| கன்னியழித்தல் | ஆடவன் முதன்முதல் ஒரு பெண்ணுடன் கூடிக் கன்னித் தன்மையை நீக்குஞ் சடங்கு ; கன்னிமை கெடுதல் . |
| கன்னியழிதல் | கன்னிமை கெடுத்தல் . |
| கன்னியன்னம் | கற்றாழஞ்சோறு . |
| கன்னியாதானம் | காண்க : கன்னிகாதானம் . |
| கன்னியாமடம் | கன்னியர் வசிக்கும் இடம் ; கிறித்தவப் பெண்துறவியர் வசிக்கும் இடம் . |
| கன்னியாமாடம் | அரசமகளிர் வசிக்கும் இடம் . |
| கன்னியிருட்டு | வைகறைக்குமுன் தோன்றும் இருள் . |
| கன்னியீற்று | பசுவின் தலையீற்று . |
| கன்னியூஞ்சல் | திருமணச் சடங்கின் தொடக்கத்தில் மணமக்கள் ஆடும் ஊஞ்சல் ஆட்டம் . |
| கன்னிவிடியல் | வைகறை . |
| கன்னிவேட்டை | முதல்வேட்டை . |
| கன்னிறம் | சங்கஞ்செடி . |
| கன்னீர்ப்படுத்தல் | போரிலிறந்த வீரனது நடுகல்லை நீராட்டும் புறத்துறை ; போர் செய்து இறந்த வீரனது வீரச் செயலை வரைந்த கற்களைப் போர்களத்திலே மறவர் நிரைத்தலைக் கூறும் புறத்துறை . |
| கன்னுவர் | கன்னார் . |
| கன்னுறுகம் | சிறுகீரை . |
| கன்னெஞ்சன் | கொடிய மனமுடையவன் . |
| கன்னெஞ்சு | வன்மனம் . |
| கன்னை | கட்சி , பக்கம் . |
| கன்னைக்கொற்றி | விளையாட்டில் இரு கட்சிக்கும் உதவி செய்வோன் . |
| கன்னைக்கோல் | நெய்வோர் கருவியுள் ஒன்று . |
| கன | கனா , கனவு . |
| கனக்குறைவு | இலேசான தன்மை ; பெருமைக்கேடு . |
| கனகச்சம்பா | உயர்ந்த சம்பாநெல்வகை . |
| கனகச்சுற்றம் | அரசர்க்குரிய எண்பெருந் துணைவருள் ஒருவகையாராகிய பொருட்காப்பு அதிகாரி . |
| கனகசபை | பொன்னம்பலம் , சிதம்பரத்தில் நடராசமூர்த்தி எழுந்தருளியிருக்கும் திருச்சபை . |
| கன்னி | குமாரி , மணம் ஆகாத பெண் ; இளமை ; அழிவில்லாள் ; புதுமை ; முதனிகழ்ச்சி ; அழிவின்மை ; பெண் ; தவப்பெண் ; தெய்வப்பெண் ; இளமைகுன்றாப் பெண் ; துர்க்கை ; பார்வதி ; குமரியாறு ; கன்னிராசி ; புரட்டாசி ; அத்தநாள் ; காக்கணங்கொடி ; கற்றாழைச் செடி ; கரந்தை . |
| கன்னிக்காய் | முதன்முதலில் காய்க்கும் காய் . |
| கன்னிக்காய்ச்சல் | புரட்டாசி மாதத்தில் காயும் வெயில் மிகுதி . |
| கன்னிக்கால் | கலியாண முகூர்த்தக்கால் ; புதுவீட்டின் மதிலில் தென்முகமாக முதலில் நடும் சீலை சுற்றிய கம்பம் . |
| கன்னிக்காவல் | கன்னிப் பருவத்துக் காக்குங்கற்பு . |
| கன்னிக்குட்டி | முதலில் போடும் ஆட்டுக்குட்டி . |
| கன்னிக்குடம் | பன்னீர்க்குடம் , கருப்பையின் ஒருபகுதி . |
| கன்னிக்குடமுடைதல் | பேறுகாலத்தில் முதலில் வெளிப்பட்டு வரும் நீர் . |
| கன்னிகம் | மணித்தக்காளி . |
| கன்னிகழிதல் | மணம்புரியப் பெறுதல் . |
| கன்னிகாதானம் | கன்னியை ஆடவனுக்குக் கொடையாகத் திருமணம் செய்துகொடுக்கும் முறை . |
| கன்னிகாமடம் | கிறித்தவப் பெண்துறவியர் வசிக்கும் இடம் . |
| கன்னிகாரம் | கோங்குமரம் . |
| கன்னிகை | குமரி ; தாமரைக்கொட்டை ; பூ மொட்டு . |
| கன்னிச்சவ்வு | கன்னித்தன்மை நீங்குவதற்குமுன் யோனியை மூடியுள்ள சவ்வு . |
| கன்னித்தமிழ் | அழிவில்லாத தமிழ்மொழி . |
| கன்னித்திங்கள் | காண்க : கன்னிமாதம் . |
| கன்னித்திசை | தென்மேற்கு மூலை . |
| கன்னித்தீட்டு | முதற்பூப்புக்கு உரிய தீட்டு . |
| கன்னித்தேங்காய் | தென்னையின் முதல் தேங்காய் . |
| கன்னிநகர் | கன்னிமாடம் . |
| கன்னிநாகு | கன்றுபோடாத இளம்பசு . |
| கன்னிநாடு | பாண்டிநாடு . |
| கன்னிப்பழி | கன்னியைக் கற்பழித்த பாவம் . |
| கன்னிப்பிள்ளைத்தாய்ச்சி | முதற் கருவுற்றவள் . |
| கன்னிப்பூப்பு | முதற்பூப்பு . |
| கன்னிப்பூமலர்தல் | பெண் பூப்பெய்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 298 | 299 | 300 | 301 | 302 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்னி முதல் - கனகசபை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இடம், பெண், வசிக்கும், வீரனது, கன்னிமை, கன்னியர், புரட்டாசி, முதலில், கிறித்தவப், பெண்துறவியர், புறத்துறை, கன்னிச்சவ்வு, கன்னியாமடம், கன்னிமாடம், கன்னியாமாடம், கன்னிமாதம், கன்னிகாதானம்

