முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கற்குளிமாக்கள் முதல் - கற்பூரக்கொடி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கற்குளிமாக்கள் முதல் - கற்பூரக்கொடி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கற்படை | கோட்டையிற் கள்ள வழி ; கற்பதித்த இடம் ; நீர் செல்லக் கல்லால் கட்டிய சாக்கடை . |
| கற்பணம் | கைவேல் . |
| கற்பதித்தல் | கல் பரப்புதல் ; மணி பதித்தல் ; கல்வெட்டு வரைதல் . |
| கற்பம் | இருத்தற்கு அமைந்த இடம் ; 432 கோடி ஆண்டுகொண்ட பிரமனது ஒருநாள் ; பிரமனதுவாழ்நாள் ; தேவர்க்குரிய வாழ்நாளளவு ; ஆயுளை நீட்டிக்கும் மருந்து ; திருநீறு ; இலட்சங்கோடி ; தேவருலகம் ; கற்பகம் . |
| கற்பரன் | வெள்ளைநஞ்சு . |
| கற்பலகை | எழுதும் பலகை ; தட்டையான கல் . |
| கற்பலங்காரி | கற்புடையவள் . |
| கற்பனாகௌரவம் | கற்பனை மிகுவதால் ஆன குற்றம் . |
| கற்பனாசக்தி | புனைந்துரைக்கும் திறமை . |
| கற்பனை | புனைந்துரை ; வருணனை ; கட்டளை ; சங்கற்பம் ; காரிய ஏற்பாடு ; இல்லாததைக் கட்டிச்சொல்லுதல் ; கபடம் ; பொய்த்தோற்றம் ; கல்வி ; போதனை . |
| கற்பா | கோட்டை உள்மதிலின் வாரியுள் உயர்ந்த நிலம் . |
| கற்பாசி | கல்லில் பற்றியுள்ள பாசிவகை . |
| கற்பாஞ்சான் | பெருங்காயம் . |
| கற்பாட்டி | கற்புடையவள் . |
| கற்பாடு | கல்லுள்ள நிலம் . |
| கற்பாந்தம் | மிக்க உறுதி ; ஊழிமுடிவு . |
| கற்பாலவணம் | கடலுப்பு . |
| கற்பாவுதல் | கல்லால் தளம் போடுதல் ; கற்கள் பரவியிருத்தல் . |
| கற்பாழி | மலைக்குகை . |
| கற்பாள் | மனைவி ; கற்புடையவள் ; படிப்பவள் . |
| கற்பாறை | கல்லாக அமைந்த பாறை . |
| கற்பிடிப்புவேலை | கற்களைப் பொருத்தும் வேலை . |
| கற்பித்தல் | கற்றுக்கொடுத்தல் , அறிவுறுத்தல் ; உண்டாக்குதல் ; கட்டளையிடல் ; விதித்தல் ; ஏற்பாடு செய்தல் ; கற்பனை செய்தல் . |
| கற்பிதம் | அலங்கரிப்பு ; கற்பிக்கப்பட்டது ; செய்யப்பட்டது ; புனைந்துரை ; பொய் ; கட்டளை . |
| கற்பியல் | கற்பைப்பற்றிக் கூறும் அகப்பொருட்பகுதி . |
| கற்பு | மகளிர் கற்பு ; களவுக்கூட்டத்துக்குப்பின் தலைவன் தலைவியை முறைப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம் ; கற்பின் அடையாளமான முல்லை ; கல்வி ; தியானம் ; ஆணை ; கதி ; உறுதி ; புரிசை ; மதிலுண்மேடை ; நீதிநெறி ; கற்பனை . |
| கற்புமுல்லை | தலைவி தன் கணவன் நலத்தைப் பெருகச் சொல்லும் புறத்துறை ; கணவன் அருளத் தலைவி விருந்தோம்பும் செல்வத்தை வாழ்த்தும் புறத்துறை ; கணவனைப் பிரிந்த தலைவி தனியிருந்து தன் நிறைகாத்தலின் சிறப்பைக் கூறும் புறத்துறை . |
| கற்புரம் | பொன் . |
| கற்புரை | சாம்பிராணி . |
| கற்புழை | மலைக்குகை . |
| கற்பூ | பரவ மகளிரணியும் காதணி ; கல்லாரை ; கல்தாமரை . |
| கற்பூரக்கொடி | வெற்றிலைவகை . |
| கற்படி | கல்லாலான படிகட்டு . |
| கற்படுத்தல் | செங்கற்பதித்தல் . |
| கற்குளிமாக்கள் | முத்துக்குளிப்போர் . |
| கற்கேணி | பாறையை வெட்டி உண்டாக்கப்படும் கிணறு . |
| கற்கை | படித்தல் . |
| கற்கொத்தி | கல்லைப் பிளந்து வேலை செய்பவன் ; கல்லுப் பொறுக்கும் புறா . |
| கற்கோணிலை | போரிற்பட்ட வீரனது சிலையைக் கைக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை . |
| கற்கோவை | கருடன்கிழங்கு . |
| கற்சட்டி | மாக்கல்லால் அமைத்த சட்டி . |
| கற்சத்து | கல்நார் ; கருப்பூரச் சிலாசத்து . |
| கற்சரீரம் | வலிய உடல் . |
| கற்சவளை | கல்நார் . |
| கற்சாகம் | மரகதம் . |
| கற்சாலர்வேலை | தேன்கூடுபோல் செய்யப்பட்ட செங்கற் கட்டட வேலை . |
| கற்சிலை | உருவம் அமைந்த கல் . |
| கற்சிற்பர் | கல்தச்சர் ; சிற்பி . |
| கற்சிறை | கல்லணை , கல்லால் கட்டின கரை . |
| கற்சுண்ணாம்பு | ஒருவகைக் கல்லை நீற்றி எடுக்கும் சுண்ணாம்பு . |
| கற்சூரம் | கழற்கொடி ; பேரீந்து . |
| கற்சூலை | வலிப்புநோய்வகை . |
| கற்பகக்கரம் | கோழித்தலைக் கந்தகம் . |
| கற்பகச்சோலை | இந்திரன் நந்தவனம் . |
| கற்பகநாடு | தேவருலகம் . |
| கற்பகம் | தேவருலகத்து ஐந்து தருக்களுள் ஒன்று , வேண்டியதை எல்லாம் தரும் மரம் ; கற்பகதரு வடிவான கோயில் வாகனம் ; தென்னை ; பனை ; புளியாரை . |
| கற்பகவல்லி | காமவல்லிக்கொடி . |
| கற்பகன் | நாவிதன் . |
| கற்பசு | பயனற்றது . |
| கற்பஞ்சாப்பிடுதல் | உடல் நீடித்திருப்பதற்காகக் கற்பமருந்து உண்ணுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 294 | 295 | 296 | 297 | 298 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கற்குளிமாக்கள் முதல் - கற்பூரக்கொடி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், புறத்துறை, கற்பனை, அமைந்த, தலைவி, கூறும், வேலை, கல்லால், கற்புடையவள், செய்தல், உடல், கல்நார், கணவன், கற்பு, நிலம், புனைந்துரை, கற்பகம், தேவருலகம், கட்டளை, ஏற்பாடு, உறுதி, இடம், கல்வி, மலைக்குகை

