முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » களிவாதல் முதல் - கற்குளித்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - களிவாதல் முதல் - கற்குளித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கற்கசம் | கடினம் ; கடும்பற்றுள்ளம் ; வேலிப்பருத்தி ; கரும்பு . |
| கற்கசன் | வன்னெஞ்சன் . |
| கற்கட்டு | கல்லாலாகிய கட்டடம் . |
| கற்கட்டுதல் | கிணறு முதலியவற்றைக் கருங்கல் அல்லது செங்கல்லால் கட்டுதல் ; அணிகலனில் மணிகளைப் பதித்தல் . |
| கற்கட்டுமோதிரம் | மணிபதித்த மோதிரம் . |
| கற்கடகசிங்கி | கடுக்காய்ப்பூ . |
| கற்கடகம் | ஓரிராசி ; நண்டு பிணைந்துவரும் இணைக்கைவகை . |
| கற்கடகவைரி | குரங்கு . |
| கற்கண்டம் | அகில் . |
| கற்கண்டு | கருப்பஞ்சாற்றுக் கட்டி ; அணிகலவகையுள் ஒன்று . |
| கற்கந்து | கற்றூண் . |
| கற்கம் | இலுப்பைப்பூ ; தாமரை ; ஒரு மருந்துச்சரக்கு ; கழாயம் முதலியவற்றின் கசடு ; எண்ணெய் முதலியவற்றின் கசடு ; பாவம் ; பெருமை ; விட்டை ; இரும்புக்கிட்டம் ; நீர்க்குடம் ; வெள்ளைக்குதிரை ; தீ ; கண்ணாடி ; காடு . |
| கற்கரம் | மத்து . |
| கற்கரி | ஒருவகை நிலக்கரி . |
| கற்கரிகை | சதங்கை . |
| கற்கலை | காவிவேட்டி . |
| கற்கவி | கதவுநிலையின்மேலே இடப்பட்டிருக்கும் பாவுகல் . |
| கற்கவுதாரி | காட்டுக்கோழிவகை . |
| கற்காண்டல் | போரிட்ட வீரனது உருவம் அமைப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்துகொள்வதைக் கூறும் புறத்துறை . |
| கற்காணம் | கல்லால் அமைந்தசெக்கு ; கருஞ்சீரகம் . |
| கற்காப்பு | போர்க்காலத்தில் கோயில் கருவறையைக் காப்பதற்காக அதன் வாயிலை அடைத்தெழுப்பும் கற்சுவர் . |
| கற்காரம் | கல்வேலை ; காரக்கல் . |
| கற்காரு | அகில்மரம் ; சாம்பற்பூசணி . |
| கற்கி | கோயில் ; திருமாலின் பத்துப் பிறப்புள் ஒன்று ; குதிரை . |
| கற்கிடை | செங்கற்சூளை . |
| கற்குடல் | பேதிமருந்துக்கு எளிதில் மலம் கழியாத குடல் . |
| கற்குரு | கருப்பூரச் சிலாசத்து . |
| கற்குளித்தல் | முத்து , மணி முதலியவை எடுப்பதற்காகக் கடலில் மூழ்குதல் . |
| களைவாரி | களைபறிக்குங் கருவி , களைக்கொட்டு . |
| களைவு | களைதல் , நீக்குதல் . |
| களிவாதல் | மகிழ்வடைதல் . |
| களிவாய்நிலம் | காண்க : களித்தரை . |
| களிற்றரசு | ஐராவதம் என்னும் யானை . |
| களிற்றியானை | ஆண்யானை . |
| களிற்றினம்பு | யானைத்திப்பிலி . |
| களிற்றுடனிலை | வீரனொருவன் யானையை வேலால் எறிந்து அதன்கீழ் இறந்துபட்டதைக் குறிக்கும் புறத்துறை . |
| களிற்றுத்தானை | நால்வகைத் தானையுள் ஒன்றான யானைப்படை . |
| களிற்றுப்பன்றி | ஆண்பன்றி . |
| களிற்றுப்பொறி | பகைவரை அழித்தற்குக் கோட்டை மதிலில் வைக்கப்பெறும் யானை வடிவான எந்திரம் . |
| களிறு | ஆண்யானை ; ஆண்பன்றி ; ஆண்சுறா ; அத்தநாள் . |
| களிறுதருபுணர்ச்சி | தலைவன் தலைவியை யானையினின்று காத்தமைபற்றி அவ்விருவருக்கும் உண்டான சேர்க்கை . |
| களுக்குக்களுக்கெனல் | ஒலிக்குறிப்பு . |
| களுசி | சீந்திற்கொடி . |
| களேபரம் | உடம்பு ; எலும்பு ; பிணம் ; குழப்பம் . |
| களேவரம் | உடம்பு ; எலும்பு ; பிணம் ; குழப்பம் . |
| களை | பயிருடன் வளரும் புல்பூண்டுகள் ; குற்றம் ; அயர்வு ; சந்திரகலை ; அழகு . |
| களைக்கட்டுதல் | இசைக்கருவிகளின் ஓசை அடக்கமான இடத்தில் நன்கு ஒலித்தல் . |
| களைக்கொட்டு | களைஎடுத்தல் ; களைபறிக்குங் கருவி . |
| களைக்கொத்து | களைஎடுத்தல் ; களைபறிக்குங் கருவி . |
| களைகட்டல் | களைபிடுங்கல் , களைபறித்தல் . |
| களைகட்டி | காண்க : களைவாரி . |
| களைகண் | பற்றுக்கோடு , ஆதரவு , ஆதாரம் ; காப்பவன் . |
| களைஞன் | சண்டாளன் ; களைபறிப்போன் . |
| களைத்தல் | இளைப்புறுதல் , சோர்வடைதல் . |
| களைதல் | பிடுங்கியெறிதல் ; நீக்குதல் ; ஆடையணி கழற்றல் ; அழித்தல் ; குழைதல் ; அரிசி கழுவுதல் ; கூட்டி முடித்தல் . |
| களைப்பு | சோர்வு . |
| களைப்புல் | பயிருடன் களையாக முளைக்கும் புல் . |
| களைபறித்தல் | களைபிடுங்குதல் , களைபறித்தல் ; இடையூற்றைப் போக்குதல் . |
| களையறுத்தல் | களைபிடுங்குதல் , களைபறித்தல் ; இடையூற்றைப் போக்குதல் . |
| களையாற்றுதல் | இளைப்பாற்றுதல் . |
| களையேறுதல் | களைகொள்ளுதல் , ஒளிமிகுதல் ; விக்கிரகத்தில் தெய்வ ஆற்றல் மிகுதல் ; சந்திரகலை மிகுதல் . |
| களைவாங்குதல் | அழகு குறைதல் ; விக்கிரகத்தில் தெய்வ ஆற்றல் நீங்குதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 293 | 294 | 295 | 296 | 297 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களிவாதல் முதல் - கற்குளித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், களைபறித்தல், களைபறிக்குங், கருவி, அழகு, களைஎடுத்தல், சந்திரகலை, பயிருடன், குழப்பம், மிகுதல், களைபிடுங்குதல், போக்குதல், விக்கிரகத்தில், ஆற்றல், பிணம், இடையூற்றைப், தெய்வ, உடம்பு, களைவாரி, களைக்கொட்டு, கோயில், புறத்துறை, முதலியவற்றின், கசடு, களைதல், நீக்குதல், ஆண்பன்றி, ஒன்று, ஆண்யானை, யானை, காண்க, எலும்பு

