தமிழ் - தமிழ் அகரமுதலி - களமாலை முதல் - களியாட்டு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| களிதம் | வழுக்கல் ; பெருங்கல் . |
| களிதின்னல் | களி உண்ணுதல் ; இலஞ்சம் வாங்குதல் . |
| களிதூங்குதல் | மகிழ்ச்சி மிகுதல் . |
| களிந்தை | யமுனையாறு . |
| களிநெஞ்சன் | கொடூரன் ; செருக்கன் . |
| களிப்பாக்கு | அவித்துச் சாயமூட்டிய பாக்கு . |
| களிப்பு | மகிழ்ச்சி ; செருக்கு ; மயக்கம் ; மதவெறி ; மண்ணின் பசை ; சிற்றின்பம் . |
| களிம்பற்றவன் | குற்றமற்றவன் . |
| களிம்பு | செம்பின் மலப்பற்று ; துரு ; மாசு ; பூச்சுமருந்து . |
| களிம்பூறுதல் | களிம்புபிடித்தல் ; தயிர் முதலியன களிம்பாற் கெடுதல் . |
| களிம்பேறுதல் | களிம்புபிடித்தல் ; தயிர் முதலியன களிம்பாற் கெடுதல் . |
| களிமகன் | கட்குடியன் . |
| களிமண் | பசையுள்ள மண்வகை . |
| களிமம் | எலி . |
| களிமுத்தை | கிண்டிய களியுருண்டை . |
| களியடைக்காய் | களிப்பாக்கு . |
| களியம் | தேசிக்கூத்துக்குரிய கால்வகை . |
| களியர்வண்ணம் | குடியர் உண்டு குடித்து மகிழ்வதைச் சிறப்பித்துப் பாடும் வண்ணப்பாட்டு . |
| களியலடி | கும்மியாட்டம் . |
| களியன் | குடியன் . |
| களியாட்டு | கள்ளுண்டு ஆடும் ஆட்டம் . |
| களமாலை | கண்டமாலை நூல் . |
| களமீடு | களத்துமேடு . |
| களர் | உவர்நிலம் , களர்நிலம் ; சேற்றுநிலம் ; கூட்டம் ; கறுப்பு ; கழுத்து . |
| களர்நிலம் | உப்புமண் ; பயிரிட உதவாத நிலம் . |
| களர்பூமி | உப்புமண் ; பயிரிட உதவாத நிலம் . |
| களர்மண் | உப்புமண் ; பயிரிட உதவாத நிலம் . |
| களரவம் | காட்டுப்புறா . |
| களரி | களர்நிலம் ; பால்நிறம் ; காடு ; போர்க்களம் ; வில் , மல் , நாடகம் , கல்வி முதலியன பயிலும் அரங்கு ; நீதிமன்றம் ; தொழில் செய்யும் இடம் . |
| களரிகட்டுதல் | அவையடக்கஞ் செய்தல் , கூத்தரை ஆடல் பாடல் செய்யவொட்டாமல் மந்திரத்தினால் கட்டுதல் ; நாடகசாலை கட்டுதல் ; நீதிமன்ற ஊழியரை வசப்படுத்துதல் . |
| களரிபூட்டுதல் | நாடக அரங்கில் கூத்து நடிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குதல் . |
| களரியமர்த்துதல் | அவையோரை அரங்கில் உட்காரவைத்தல் ; பறையறைந்து அவையைச் சத்தஞ் செய்யாமல் அமரச்செய்தல் . |
| களரிவிடுதல் | அரங்கில் முதன்முறையாக நாடக மாந்தரை ஆடவிடுதல் . |
| களவடித்தல் | திருட்டுத்தனஞ் செய்தல் . |
| களவம் | காண்க : களபம் . |
| களவன் | நண்டு . |
| களவாடுதல் | திருடல் . |
| களவாணி | திருடன் . |
| களவாளி | திருடன் . |
| களவியல் | அகப்பொருள் உறுப்புகளுள் ஒன்று ; இறையனார் அகப்பொருள் . |
| களவிற்கூட்டம் | காண்க : களவுப்புணர்ச்சி . |
| களவு | திருட்டு ; திருடிய பொருள் ; வஞ்சனை ; கள்ளவொழுக்கம் ; களாச்செடி . |
| களவுச்சொத்து | திருட்டுப்பொருள் . |
| களவுப்புணர்ச்சி | தலைவனும் தலைவியும் பிறர் அறியாது தனியிடத்தில் கூடுகை ; கற்பிற்கு முன்பு நிகழும் ஒழுக்கம் . |
| களவுபண்ணுதல் | திருடுதல் ; கவர்தல் . |
| களவுபிடித்தல் | மந்திர தந்திரங்களால் திருடனைக் கண்டுபிடித்தல் . |
| களவேர்வாழ்க்கை | திருட்டுத்தொழில் . |
| களவேள்வி | பேய்கள் வயிறார உண்ணும்படி வீரன் போர்புரிந்து பகையழித்ததைக் கூறும் புறத்துறை . |
| களவொழுக்கம் | காண்க : களவுப்புணர்ச்சி . |
| களன் | மருதநிலம் ; இடம் ; பொய்கை ; ஒலி ; கழுத்து ; தொடர்பு ; மயக்கம் . |
| களா | சிறுகளா ; பெருங்களா ; மலைக்களா ; களாவகை ; முண்முருங்கை ; தணக்கு . |
| களாசம் | பிரம்பு . |
| களாஞ்சி | காண்க : காளாஞ்சி . |
| களாபாடனம் | அருட்பெருக்குப் பதினான்கனுள் ஒன்று . அது கல்வி கற்பித்தல் . |
| களாவகம் | சிறுகீரை . |
| களாவதி | ஒருவகை வீணை . |
| களாவம் | இடையணி . |
| களி | மகிழ்ச்சி ; கள் முதலியன அருந்திக் களிக்கை ; தேன் ; கள் ; கட்குடியன் ; உள்ளச்செருக்கு ; யானைமதம் ; குழைவு ; குழம்பு ; மாவாற் கிண்டிய களி ; கஞ்சி ; வண்டல் ; உலோகநீர் ; களிமண் . |
| களிக்கண் | கம்பியிழுக்குங் கருவி . |
| களிகம் | வாலுளுவை என்னும் மருந்து . |
| களிகிண்டுதல் | களிகிளறுதல் ; குழப்புதல் . |
| களிகூர்தல் | அகங்களித்தல் , களிப்பு மிகுதல் . |
| களிகை | மொட்டு ; ஒருவகைக் கழுத்தணி . |
| களித்தரை | களிமண் நிலம் . |
| களித்தல் | மகிழ்தல் ; கள்ளுண்டு வெறிகொள்ளுதல் ; மதங்கொள்ளுதல் ; செருக்கடைதல் ; நுகர்தல் . |
| களித்துயில் | இன்பத்துயில் . |
| களித்துழவை | களியாகத் துழாவிச் சமைத்த கூழ் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 292 | 293 | 294 | 295 | 296 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களமாலை முதல் - களியாட்டு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நிலம், முதலியன, காண்க, களவுப்புணர்ச்சி, களர்நிலம், களிமண், மகிழ்ச்சி, உதவாத, உப்புமண், அரங்கில், பயிரிட, கல்வி, கட்டுதல், அகப்பொருள், ஒன்று, திருடன், நாடக, செய்தல், இடம், கழுத்து, மயக்கம், களிப்பு, களிப்பாக்கு, மிகுதல், களிம்புபிடித்தல், தயிர், கிண்டிய, கட்குடியன், கெடுதல், களிம்பாற், கள்ளுண்டு

