தமிழ் - தமிழ் அகரமுதலி - கள்ளல் முதல் - களமர் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| களம்வெட்டல் | போரிற் பகைப்படையைக் கொன்று பேய்கட்கு விருந்தூட்டுங் களவேள்வி . |
| களமதிப்பு | களத்துக் குவிந்த நெல்லின் மதிப்பளவு . |
| களமம் | நெல் . |
| களமர் | மருதநில மாக்கள் ; உழவர் ; வீரர் ; அடிமைகள் . |
| கள்ளழகர் | கள்ளர் நாட்டுள்ள அழகர்மலையில் கோயில்கொண்டுள்ள திருமால் . |
| கள்ளன் | திருடன் ; வஞ்சகன் ; கள்ளச்சாதியான் . |
| கள்ளாட்டு | களியாட்டம் . |
| கள்ளாதாரம் | பொய்யாக உண்டாக்கின பத்திரம் . |
| கள்ளாமை | களவுசெய்யாமை . |
| கள்ளி | செடிவகை ; திருடி ; கள்ளச்சாதிப் பெண் ; வேலை செய்யாது கழப்புபவள் . |
| கள்ளிக்காக்கை | செம்போத்து ; ஒருவகைக் காக்கை . |
| கள்ளிப்பெட்டி | சாதிக்காய்ப் பெட்டி . |
| கள்ளிமடையான் | பெருங்கள்ளி ; ஓர் அலரி , ஈழத்தலரி . |
| கள்ளிமந்தாரை | பெருங்கள்ளி ; ஓர் அலரி , ஈழத்தலரி . |
| கள்ளுக்காடி | புளித்த கள் . |
| கள்ளுதல் | களவுசெய்தல் . |
| கள்ளுவெறி | குடிவெறி . |
| கள்ளேடுவிடுதல் | சில ஏடுகளைவேண்டுமென்று படியாமலோ எழுதாமலோ தள்ளிவிடுதல் ; அரைகுறையாக வேலைசெய்தல் . |
| கள | களாச்செடி ; களவொழுக்கம் . |
| களக்கம் | குற்றம் . |
| களக்கர் | புலையர் ; வேடர் ; ஈனர் . |
| களக்குறிப்பு | களத்துத் தவசக் குறிப்பு . |
| களகண்டம் | குயில் . |
| களகம் | பெருச்சாளி ; நெற்கதிர் ; சுண்ணாம்புச் சாந்து ; அன்னம் . |
| களகம்பலம் | எருது , பசு முதலியவற்றின் அலை தாடி . |
| களகள | காண்க : களகளெனல் . |
| களகளத்தல் | ஒலியெழுதல் . |
| களகளப்பு | பேரொலி . |
| களகளம் | பேரொலி . |
| களகளெனல் | ஈரடுக்கொலிக் குறிப்பு . |
| களங்கம் | குற்றம் ; மறு ; துரு ; களிம்பு ; கறுப்பு ; கறுப்புப் புள்ளியாகிய ஒருவகை வயிரக்குற்றம் ; நீலம் ; அடையாளம் ; சீதாங்க பாடாணம் . |
| களங்கன் | சந்திரன் ; மாசுள்ளோன் . |
| களங்கொள்ளுதல் | வெல்லுதல் ; இருப்பிடமாக்குதல் . |
| களஞ்சம் | கஞ்சா முதலிய வெறிப்பண்டங்கள் . |
| களஞ்சியம் | பொருளை நிரப்பிவைக்கும் இடம் ; கருவூலம் ; பண்டசாலை ; தவசமிருக்கும் இடம் . |
| களஞ்செதுக்குதல் | நெற்களத்துக்காக இடம்வெட்டித் தயார்ப்படுத்துதல் . |
| களத்திரக்காரகன் | சுக்கிரன் . |
| களத்திரம் | மனைவி ; குடும்பம் ; அரைப்புறம் ; அரனிடம் ; பிறந்த இலக்கினத்திற்கு ஏழாமிடம் . |
| களத்துமேடு | நெற்களமாக அமைந்த மேடு . |
| களதவுதம் | வெள்ளி என்னும் உலோகம் . |
| களதூதம் | வெள்ளி என்னும் உலோகம் . |
| களதௌதம் | வெள்ளி என்னும் உலோகம் . |
| களந்தூன்றி | தான்றி ; தான்றிக்காய் . |
| களப்படி | வேளையாள்களுக்குக் களத்திற்கொடுக்கும் கூலி . |
| களப்பலி | போர்க்களத்தில் போர் தொடங்குமுன் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி . |
| களப்பன்றி | பெருங்குமிழ் . |
| களப்பாட்டு | களத்துப் போர் அடிப்போர் பாடும் பாட்டு . |
| களப்பிச்சை | களத்தில் தவசமாய்க் கொடுக்கும் அறச்செயல் . |
| களப்பு | கடலில் ஆழமில்லாத இடம் . |
| களப்பூசை | நெற்களத்தில் கொடுக்கும் பலி . |
| களப்பேச்சு | நெற்களத்தில் வழங்கும் குறிப்புப்பேச்சு . |
| களப்பேறு | நெற்களத்தில் குடிமக்கள் முதலியோர் பெறும் சுதந்தரம் . |
| களபம் | கலவை ; சுண்ணச்சாந்து ; கலவைச்சாந்து ; யானைக்கன்று ; யானை ; கண்ணாடி . |
| களம் | நெற்களம் ; போர்க்களம் ; இடம் ; சபை ; வேள்விச்சாலை ; களர்நிலம் ; உள்ளம் ; கொட்டகை ; கருமை ; மனைவி ; மஞ்சு ; கழுத்து ; இன்னோசை . |
| களம்பழம் | களாவின்பழம் . |
| களம்பாடுதல் | போர்க்களத்தை வண்ணித்தல் . |
| களம்விடுதல் | நெற்கதிரடிக்க ஆணையிடுதல் ; அம்பாரம் அளந்தபின் களத்தில் சிதறிய தவசத்தை உழவனுக்கு இடுதல் . |
| கள்ளல் | களவுசெய்தல் . |
| கள்ளவழி | திருட்டுப்பாதை , மறைவாய்ச் செல்லுதற்குரிய வழி . |
| கள்ளவறை | பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை ; பெட்டி முதலியவற்றுள் பிறர் அறியா வகையில் அமைக்கப்படும் அறை . |
| கள்ளவாசல் | இரகசிய வழி ; திட்டிவாசல் . |
| கள்ளவிலை | திருடர் விற்கும் குறைந்த விலை . |
| கள்ளவிழி | வஞ்சகப் பார்வை . |
| கள்ளவேடம் | வஞ்சிக்கும்படி மேற்கொண்ட மாறுகோலம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 291 | 292 | 293 | 294 | 295 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கள்ளல் முதல் - களமர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இடம், என்னும், வெள்ளி, உலோகம், கொடுக்கும், நெற்களத்தில், பிறர், களத்தில், போர், மனைவி, பெட்டி, களவுசெய்தல், ஈழத்தலரி, அலரி, குற்றம், குறிப்பு, பேரொலி, களகளெனல், பெருங்கள்ளி

