முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கழுவிக்குளிப்பாட்டுதல் முதல் - கள்ளமுத்திரை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கழுவிக்குளிப்பாட்டுதல் முதல் - கள்ளமுத்திரை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கள்ளக்கடவு | திருட்டுவழி . |
| கள்ளக்கடை | திருட்டுப் பொருள்களை விற்கும் கடை . |
| கள்ளக்கதவு | கள்ளவாயில் , பிறர் அறியாமற் செல்லுதற்குரிய கதவுள்ள வாயில் . |
| கள்ளக்கப்பல் | கடற்கொள்ளைக்காரர்க்குரிய கப்பல் . |
| கள்ளக்கப்பற்காரன் | கடற்கொள்ளை யடிப்போன் . |
| கள்ளக்கயிறு | உறியின் சுருக்குக் கருவி ; பையின் சுருக்குக் கயிறு . |
| கள்ளக்கவறு | கள்ளச் சூதுகருவி . |
| கள்ளக்கவி | பிறர் பாடிய பாடலைத் தனதென்று கூறுபவன் ; ஒருவனுக்குப்பாடிய பாட்டை வேறொருவனுக்குக் கொடுப்போன் . |
| கள்ளக்காசு | செல்லாக்காசு ; திருட்டு நாணயம் . |
| கள்ளக்காமம் | காரியத்தின்பொருட்டு மேற்கொண்ட போலிக் காமம் . |
| கள்ளக்கிடை | தூங்குவதுபோல் பாசாங்கு செய்தல் ; மறைந்து பதுங்கியிருத்தல் . |
| கள்ளக்கும்பிடு | வஞ்சனையாகச் செய்யும் வணக்கம் . |
| கள்ளக்கும்பீடு | வஞ்சனையாகச் செய்யும் வணக்கம் . |
| கள்ளக்கையெழுத்து | மாறான கையொப்பம் . |
| கள்ளக்கோல் | அளவைத் தவறாக நிறுத்துக்காட்டுந் தராசு . |
| கள்ளங்கவடு | சூதுவாது . |
| கள்ளச்சத்தியம் | பொய் ஆணை . |
| கள்ளச்சரக்கு | திருட்டுப்பொருள் ; ஏமாற்றி விற்கும் போலிப்பொருள் . |
| கள்ளச்சாட்சி | பொய்ச்சாட்சி ; பொய்ச்சாட்சி சொல்வோன் . |
| கள்ளச்சாவி | கள்ளத் திறவுகோல் . |
| கள்ளச்சி | கள்ளச் சாதியாள் ; திருடி ; வாழைப் பூவின் உட்புறமுள்ள நரம்பு . |
| கள்ளச்சிரிப்பு | வஞ்சகமாக வெளிக்குக் காட்டுஞ் சிரிப்பு . |
| கள்ளச்சுரம் | உட்காய்ச்சல் . |
| கள்ளச்சொல் | பொய் ; திருட்டுப்பேச்சு . |
| கள்ளஞானம் | போலியறிவு . |
| கள்ளத்தனம் | திருட்டுத்தனம் ; கபடம் . |
| கள்ளத்தாலி | பிறர் மணம் புரியாதவாறு தனக்கு உரிமையுள்ள ஒரு பெண்ணுக்குத் திருட்டுத் தனமாகக் கட்டும் தாலி . |
| கள்ளத்தூக்கம் | பொய்யுறக்கம் ; யோகநித்திரை . |
| கள்ளநித்திரை | பொய்யுறக்கம் ; யோகநித்திரை . |
| கள்ளநேரம் | களவு முதலியன நடத்துவதற்கு ஏற்ற வேளை ; கன்னியிருட்டு வேளை . |
| கள்ளநோக்கம் | கள்ளப்பார்வை ; வஞ்சகக் கருத்து . |
| கள்ளநோக்கு | கள்ளப்பார்வை ; வஞ்சகக் கருத்து . |
| கள்ளப்பசு | பால் கொடுக்காமல் அடக்கிக் கொள்ளும் பசு . |
| கள்ளப்பார்வை | வஞ்சக நோக்கம் ; காமக்குறிப்போடு நோக்கும் நோக்கம் . |
| கள்ளப்புருடன் | வைப்பு நாயகன் , கள்ளக்காதலன் . |
| கள்ளப்பூமி | பகைவரைப் பிடிக்க உள்ளிடம் படுகுழியாய் மேலிடம் தரைபோல் அமைக்கப்படும் நிலம் . |
| கள்ளப்பெண்சாதி | வைப்பாட்டி . |
| கள்ளம் | வஞ்சகம் ; பொய் ; களவு ; குற்றம் ; அவிச்சை ; புண்ணிலுள்ள அசறு . |
| கள்ளமடை | திருட்டு வழியால் நீரைச் செல்லச் செய்யும் மடை . |
| கள்ளமாடு | பட்டிமாடு ; சண்டிமாடு ; திருடப்பட்ட மாடு . |
| கள்ளமார்க்கம் | திருட்டு வழி , கள்ள வாயில் ; போலிச்சமயம் . |
| கள்ளமுத்திரை | போலிமுத்திரை . |
| கழுவிக்குளிப்பாட்டுதல் | பிணத்தை நீராற் கழுவுதல் . |
| கழுவிழுங்கி | சோம்பேறி . |
| கழுவுணி | சோம்பேறி . |
| கழுவுதல் | நீரால் தூய்மை செய்தல் ; வட்டாக உருக்குதல் ; நீக்குதல் . |
| கழுவுநீர் | புண்கழுவும் மருந்துநீர் . |
| கழுவெளி | புல்தரை . |
| கழுவேற்றுதல் | கழுவினில் ஏற்றிக் கொல்லுதல் . |
| கழுவேறி | கழுவேறினவன் ; கழுவன் . |
| கழுவேறுதல் | கழுவிலேறிச் சாதல் ; பிறனது வருத்தந் தாங்குதல் . |
| கழை | கரும்பு ; மூங்கில் ; மூங்கிற்குழாய் ; வேய்ங்குழல் ; ஓடக்கோல் ; குத்துக்கோல் ; தண்டு ; புனர்பூச நாள் . |
| கழைக்கூத்தன் | மூங்கில்மேல் நின்றாடும் கூத்தன் . |
| கழைக்கூத்து | கம்பங்கூத்து , மூங்கிற் கழியை நட்டு அதன்மேல் நின்றாடும் கூத்து . |
| கழைநெல் | மூங்கில் அரிசி . |
| கழைவளர்தூம்பு | மூங்கிலாற் செய்யப்பட்ட இசை வளரும் பெருவங்கியம் . |
| கள் | மது ; தேன் ; வண்டு ; களவு ; பன்மை விகுதி ; அசைநிலை . |
| கள்வம் | திருட்டுச் செயல் ; கவர்ச்சியுள்ளது . |
| கள்வன் | திருடன் ; கரியவன் ; நடுச்செல்வோன் ; முசு ; நண்டு ; கற்கடகராசி ; யானை . |
| கள்வி | கள்ளம் உடையவள் ; திருடி ; மனமடக்கம் உள்ளவள் . |
| கள்விலைஞன் | கள் விற்பவன் . |
| கள்விலையாட்டி | கள் விற்பவள் . |
| கள்ள | ஓர் உவமஉருபு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 290 | 291 | 292 | 293 | 294 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கழுவிக்குளிப்பாட்டுதல் முதல் - கள்ளமுத்திரை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், திருட்டு, செய்யும், பொய், கள்ளப்பார்வை, பிறர், களவு, நோக்கம், வஞ்சகக், கருத்து, கள்ள, மூங்கில், நின்றாடும், சோம்பேறி, கழுவுதல், வேளை, கள்ளம், பொய்யுறக்கம், செய்தல், கள்ளச், சுருக்குக், வாயில், வஞ்சனையாகச், வணக்கம், விற்கும், திருடி, பொய்ச்சாட்சி, யோகநித்திரை

