தமிழ் - தமிழ் அகரமுதலி - அதீதம் முதல் - அந்தராயம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
அந்தகாரி | அந்தகாசுரன் ; அல்லது யமனுக்குப் பகைவன் , சிவன் . |
அந்தகாலம் | இறுதிக்காலம் , முடிவுகாலம் . |
அந்தகோ | இரக்கச்சொல் . |
அந்தகோரம் | காண்க : நெல்லி . |
அந்தகோலம் | காண்க : நெல்லி . |
அந்தண்மை | அழகிய அருள் ; பார்ப்பனத்தன்மை , அந்தணர் இயல்பு . |
அந்தணமை | அழகிய அருள் ; பார்ப்பனத்தன்மை , அந்தணர் இயல்பு . |
அந்தணத்துவம் | அந்தணனாகும் தன்மை . |
அந்தணநாபி | நஞ்சு போக்கும் மருந்து . |
அந்தணர்வாக்கு | வேதம் . |
அந்தணன் | வேதத்தின் அந்தத்தை அறிபவன் ; அழகிய தட்பத்தினையுடையவன் , செந்தண்மையுடையவன் ; பெரியோன் ; முனிவன் ; கடவுள் ; பார்ப்பான் ; சனி ; வியாழன் . |
அந்தணாளன் | அழகிய அருளுடையவன் ; முனிவன் ; பார்ப்பான் . |
அந்ததரம் | சித்தாந்தம் . |
அந்தந்த | அந்த அந்த ; ஒவ்வொன்றினுடைய . |
அந்தப்புரம் | அரசியிருக்கை , அரசன் மனைவி இருக்குமிடம் ; அரண்மனையில் பெண்கள் தங்குமிடம் ; பெண்டிர் தங்குமிடம் . |
அந்தம் | அழகு ; கடை ; கத்தூரி ; குருடு ; முடிவு ; சாவு ; எல்லை ; அறியாமை . |
அந்தமந்தம் | உறுப்புக்கேடு ; செப்பமின்மை ; அழகின்மை . |
அந்தர் | உள் ; மறைவு ; கீழ்மக்கள் ; தலைகீழாய்ப்பாயும் செயல் ; நூற்றுப்பன்னிரண்டு ராத்தல் கொண்ட நிறுத்தல் அளவை (ஆங்கிலம்) . |
அந்தர்க்கதம் | மறைந்திருக்கை ; உள்ளானது . |
அந்தர்த்தானம் | மறைவிடம் ; மறைகை ; மறைவு . |
அந்தர்பூதம் | உள்ளிருப்பது , உள்ளடங்கியது . |
அந்தர்முகம் | உள்நோக்குகை . |
அந்தர்வேதி | நடுவேயுள்ள சமபூமி . |
அந்தரங்கம் | மனம் ; உள்ளானது ; உட்கருத்து ; கமுக்கம் , இரகசியம் ; ஆலோசனை . |
அந்தரங்கன் | மிகவும் விரும்பப்பட்டவன் ; உற்ற நண்பன் ; நம்பத்தகுந்தவன் . |
அந்தரத்தாமரை | ஆகாயத்தாமரை . |
அந்தரத்தானம் | ஆகாயநிலை . |
அந்தரதுந்துபி | ஓர் இசைக்கருவி ; தேவ வாத்தியம் . |
அந்தரதுந்துமி | ஓர் இசைக்கருவி ; தேவ வாத்தியம் . |
அந்தரநாதன் | வானுலகத் தலைவன் , இந்திரன் . |
அந்தரப்பல்லியம் | காண்க : அந்தரதுந்துபி . |
அந்தரம் | வானம் ; உள் ; வெளி ; இடை ; நடு ; நடுவுநிலை ; அளவு ; இருள் ; தனிமை ; முடிவு ; வேறுபாடு ; தீமை ; தேவர்கோயில் . |
அந்தரர் | தேவர் . |
அந்தரவல்லி | கொல்லங்கொவ்வை ; கருடன் கிழங்கு . |
அந்தரவாசம் | ஒரு மருந்துப் பூடு . |
அந்தரவாசி | ஆகாயகமனம் செய்பவன் ; வானுலகில் வாழ்பவன் . |
அந்தராத்துமா | உயிர்களுக்கு உயிராய் இருப்பவன் ; மனத்துள் இருக்கும் கடவுள் . |
அந்தராயம் | தீமை , இடையூறு , துன்பம் . |
அதீதம் | எட்டாதது ; கடந்தது ; கடவுள் தன்மைகளுள் ஒன்று . |
அதீதன் | கடந்தவன் ; பாசத்தினின்று விடுவிக்கப்பட்டவன் ; மேலோன் ; முனிவன் ; ஞானி . |
அதீந்திரியம் | புலனுக்கு எட்டாதது . |
அதீனம் | உரிமை ; சார்பு ; வசம் . |
அது | அஃது ; அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயர் ; ஆறாம் வேற்றுமை ஒறுமையுருபு . |
அதுக்கல் | அடித்தல் ; அடைசுதல் ; கடித்தல் ; வாயிலடக்குதல் ; அடைத்தல் ; பிசைதல் . |
அதுங்குதல் | அமுங்குதல் ; ஒதுங்குதல் ; குழிதல் . |
அதும்புதல் | மொய்த்தல் . |
அதுலம் | உவமையின்மை ; ஓர் எண் . |
அதுலன் | உவமையில்லான் , ஒப்பில்லாதவன் , கடவுள் ; அசைவின்மை . |
அதுலிதம் | ஒப்பாக்கப்படாதது ; நிறுக்கப்படாதது ; அசைவின்மை . |
அதேந்து | அஃது என்ன என்று அருளொடு கேட்கும் குறிப்பு ; அஞ்சாதே எனப் பொருள்படும் ஒரு மொழி . |
அதைத்தல் | தாக்கிமீளல் ; வீங்குதல் ; செருக்குதல் . |
அதைப்பு | தாக்கிமீளுகை ; வீக்கம் ; நீர்க்கோப்பு . |
அதைரியம் | ஊக்கமின்மை , திட்பமின்மை . |
அதோ | சேய்மைச்சுட்டு ; படர்க்கைச்சுட்டு ; சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு ; கீழ் . |
அதோகதி | இறங்குகை ; தாழ்நிலை ; பள்ளம் ; நரகம் . |
அதோமாயை | காண்க : அசுத்தமாயை . |
அதோமுகம் | கீழ்நோக்கிய முகம் ; தலைகீழான நிலை ; ஆற்றுநீர்க் கழிமுகம் . |
அதோளி | அவ்விடம் . |
அந் | இன்மை ; எதிர்மறை காட்டும் ஒரு வடமொழி முன்னொட்டு . |
அந்தக்கரணம் | உட்கருவி ; அவை : மனம் , புத்தி , சித்தம் ,அகங்காரம் . |
அந்தக்கேடு | அழகின்மை ; சீர்கேடு . |
அந்தக்கேணி | மறைகிணறு , கரப்புநீர்க்கேணி . |
அந்தகம் | ஆமணக்கு ; ஒரு சன்னிநோய் . |
அந்தகன் | அழிப்போன் ; குருடன் ; சனி ; யமன் ; புல்லுருவி ; சவர்க்காரம் . |
அந்தகாரம் | இருள் ; அறியாமை ; மனவிருள் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அதீதம் முதல் - அந்தராயம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அழகிய, காண்க, கடவுள், முனிவன், இசைக்கருவி, அந்தரதுந்துபி, குறிப்பு, மனம், வாத்தியம், இருள், எட்டாதது, தீமை, உள்ளானது, அசைவின்மை, அஃது, அறியாமை, அந்தணர், பார்ப்பனத்தன்மை, அருள், நெல்லி, இயல்பு, பார்ப்பான், அழகின்மை, முடிவு, தங்குமிடம், அந்த, மறைவு