தமிழ் - தமிழ் அகரமுதலி - அந்தராளம் முதல் - அந்திரர் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அந்தியேட்டி | இறுதிச்சடங்கு , இறுதிக்கடன் . |
| அந்தியேட்டிக் குருக்கள் | இறுதிச் சடங்கைச் செய்விக்கும் புரோகிதன் . |
| அந்திரக்கண்மணி | நீலக்கல் . |
| அந்திரக்கொடிச்சி | கந்தகம் . |
| அந்திரம் | சிறுகுடல் . |
| அந்திரர் | ஆந்திரநாட்டவர் . |
| அந்தரீயம் | உள்ளாடை ; அரையில் கட்டும் வேட்டி . |
| அந்தரேணம் | நடுவிடம் . |
| அந்தலை | முடிவு ; சந்திப்பு ; மேடு ; பேறு . |
| அந்தளகத்தாளார் | கவசம் தரித்த வீரர் . |
| அந்தளகம் | கவசம் ; பல்லக்கு . |
| அந்தளம் | கவசம் ; பல்லக்கு . |
| அந்தளி | தேவர்கோயில் . |
| அந்தன் | யமன் ; சனி ; அழகன் ; குருடன் ; அறிவிலான் ; கடுக்காய் . |
| அந்தா | ஒரு வியப்புச் சொல் ; அதோ . |
| அந்தாக | அப்படியே யாகுக . |
| அந்தாதி | முதலும் முடிவும் ; கடவுள் ; முதல் பாட்டின் இறுதி அசை , சொல் , தொடர் , அடி ஆகியவற்றுள் ஏதேனுமொன்றை அடுத்த பாட்டின் முதலாகக் கொண்டு பாடப்படும் செய்யுள் நூல் . |
| அந்தாதிஉவமை | ஓர் அடியின் இறுதிச்சொல்லை அடுத்த அடியின் முதலாகக்கொண்டு உவமைபெறக் கூறும் அணி . |
| அந்தாதித்தல் | அந்தாதியாகத் தொடுத்தல் . |
| அந்தாதித்தொடை | அடிதோறும் இறுதிக்கண் உள்ள சீரோ அசையோ எழுத்தோ அடுத்த அடிக்கு முதலாக வரத் தொடுப்பது . |
| அந்தாமம் | பரமபதம் . |
| அந்தாலே | அங்கே . |
| அந்தாளி | ஒரு பண் ; குறிஞ்சியாழ்த் திறவகை . |
| அந்தாளிக்குறிஞ்சி | ஒரு பண் ; குறிஞ்சியாழ்த் திறவகை . |
| அந்தாளிபாடை | ஒரு பண் ; பாலையாழ்த் திறவகை . |
| அந்தி | பகலும் இரவும் கூடும் நேரம் ; மாலைக்காலம் ; சந்தியாவந்தனம் , காலை மாலை வழிபாடு ; இரவு ; செவ்வானம் ; முடிவுகாலம் ; தில்லைமரம் ; சந்திப்பு ; முச்சந்தி ; பாலையாழ்த் திறவகை ; ஓர் அசைச்சொல் . |
| அந்தி | (வி) பொருந்து என்னும் ஏவல் . |
| அந்திக்கடை | மாலைக்கடை . |
| அந்திக்காப்பு | தீங்கு அண்டாவண்ணம் குழந்தைகளுக்கு மாலைக்காலத்தில் செய்யப்படும் காப்பு ; மாலைக்காலத்தில் கடவுளுக்குச் செய்யும் சடங்கு . |
| அந்திக்காலம் | மாலைவேளை ; இறுதிக்காலம் . |
| அந்திக்கோன் | காண்க : அந்திகாவலன் . |
| அந்திகம் | அயல் . |
| அந்திகாசிரயம் | நிலையியற்பொருள் , தாவரம் . |
| அந்திகாவலன் | சந்திரன் ; மாலையில் திரியும் காவல்தெய்வம் . |
| அந்திகூப்புதல் | சந்தியாவந்தனம் செய்தல் . |
| அந்திகை | கபடம் ; சித்தம் ; இரவு ; பெண் ; அக்காள் ; அடுப்பு . |
| அந்திசந்தி | காலைமாலை . |
| அந்தித்தல் | சந்தித்தல் ; நெருங்குதல் ; பொருந்துதல் ; முடித்துவைத்தல் ; முடிவுசெய்தல் . |
| அந்திநட்சத்திரம் | மாலை வெள்ளி . |
| அந்திப்பூ | காண்க : அந்திமந்தாரை . |
| அந்திபகல் | இராப்பகல் . |
| அந்திமகாலம் | இறக்குந்தறுவாய் ; முடிவுகாலம் . |
| அந்தியகாலம் | இறக்குந்தறுவாய் ; முடிவுகாலம் . |
| அந்திமதசை | இறக்குந்தறுவாய் ; முடிவுகாலம் . |
| அந்திமந்தாரம் | மாலையில் பூக்கும் பூச்செடி வகை . |
| அந்திமந்தாரை | மாலையில் பூக்கும் பூச்செடி வகை . |
| அந்திமல்லி | மாலையில் பூக்கும் பூச்செடி வகை . |
| அந்திமல்லிகை | மாலையில் பூக்கும் பூச்செடி வகை . |
| அந்நிமலர்ந்தான் | மாலையில் பூக்கும் பூச்செடி வகை . |
| அந்திமாலை | மாலைப்பொழுது ; மாலைக்கண் ; கண்ணோய் வகை . |
| அந்தியக்கிரியை | இறுதிச்சடங்கு . |
| அந்தியகருமம் | இறுதிச்சடங்கு |
| அந்தியன் | கடைக்குலத்தான் , புலையன் . |
| அந்திசன் | கடைக்குலத்தான் , புலையன் . |
| அந்தியதீபம் | கடைநிலை விளக்கு என்னும் அணி . |
| அந்தியம் | மரணகாலம் ; முடிவுகாலம் ; கடைப்பட்டது ; ஒரு பேரெண் . |
| அந்தியன் | மரணகாலம் ; முடிவுகாலம் ; கடைப்பட்டது ; ஒரு பேரெண் . |
| அந்தியுழவு | கோடையில் அந்தி நேரத்தில் உழுகை . |
| அந்தராளம் | நடு ; இடைக்காலம் ; இடையிடம் ; மூலத்தானத்தை அடுத்த மண்டபம் . |
| அந்தரான்மா | காண்க : அந்தராத்துமா . |
| அந்தரி | பார்வதி ; கொற்றவை ; ஆகாயவாணி ; தோற்கருவிவகை . |
| அந்தரிட்சம் | வானம் ; நற்கதி . |
| அந்தரித்தல் | நிலைகெடுதல் ; மனந்தடுமாறல் ; தனித்திருத்தல் ; உதவியற்றிருத்தல் ; இரண்டு அளவுகளைக் கழிப்பதால் வரும் மிச்சம் . |
| அந்தரிதம் | கழித்தலால் உண்டாகும் மிச்சம் . |
| அந்தரிப்பு | உதவியின்மை . |
| அந்தரியம் | காண்க : அந்தக்கரணம் . |
| அந்தரியாகபூசை | மனத்தால் செய்யும் பூசை , உட்பூசை . |
| அந்தரியாகம் | மனத்தால் செய்யும் பூசை , உட்பூசை . |
| அந்தரியாமி | உள்ளே நின்று நடத்துவோன் ; கடவுள் ; உயிர் . |
| அந்தரியாமித்துவம் | ஆன்மாவோடு கலந்திருத்தல் ; உள் இருக்குந்தன்மை . |
| அந்தரீபம் | தீவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்தராளம் முதல் - அந்திரர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மாலையில், முடிவுகாலம், பூச்செடி, பூக்கும், திறவகை, காண்க, அடுத்த, இறக்குந்தறுவாய், அந்தி, செய்யும், கவசம், சொல், இறுதிச்சடங்கு, அந்தியன், மரணகாலம், மனத்தால், பூசை, உட்பூசை, மிச்சம், பேரெண், புலையன், கடைப்பட்டது, கடைக்குலத்தான், மாலைக்காலத்தில், பாட்டின், அடியின், கடவுள், பல்லக்கு, சந்திப்பு, குறிஞ்சியாழ்த், பாலையாழ்த், என்னும், அந்திகாவலன், இரவு, மாலை, சந்தியாவந்தனம், அந்திமந்தாரை

