தமிழ் - தமிழ் அகரமுதலி - கலங்கொம்பு முதல் - கலவார் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கலப்பெண் | பின்னத்துடன் சேர்ந்த முழு எண் . |
| கலப்பை | உழுபடை ; ஒன்றற்கு அமைந்த உறுப்புகள் ; துணைக்கருவி ; யாழ் ; வாத்தியக்கருவி ; வாத்தியம் முதலிய கருவிகளை வைக்கும் பை . |
| கலப்பைக்கிழங்கு | கார்த்திகைக் கிழங்கு , வெண்தோன்றிக் கிழங்கு ; கொப்பூழ்க்கொடி . |
| கலப்பைக்கூர் | கலப்பையின் கொழுமுனை . |
| கலப்பைச் சக்கரம் | ஏர்ப் பொருத்தம் பார்க்கும் சக்கரம் . |
| கலப்பைசேர்த்தல் | கலப்பை செய்தல் . |
| கலப்பைநூல் | உழவுநூல் . |
| கலப்பைப்படை | அலாயுதம் , கலப்பை வடிவுள்ள ஆயுதம் . |
| கலபம் | மயில்தோகை . |
| கலபி | மயில் . |
| கலபிங்கம் | ஊர்க்குருவி . |
| கலம் | உண்கலம் ; பாண்டம் ; குப்பி ; கப்பல் ; இரேவதி ; அணிகலன் ; யாழ் ; கலப்பை ; ஆயுதம் ; ஓலைப்பாத்திரம் ; ஒரு முகத்தலளவை ; பந்தி ; வில்லங்கம் . |
| கலம்பகக்கலி | எழுத்தொவ்வாது வரும் கலிப்பா . |
| கலம்பகம் | கலவை ; பல்வகைச் செய்யுள்களாலாகிய சிற்றிலக்கியம் ; கலக்கம் ; கணிதநூல் . |
| கலம்பகமாலை | பல பூக்கலந்த மாலை ; ஒரு சிற்றிலக்கியம் . |
| கலம்பகன் | செவிட்டூமன் . |
| கலம்பம் | கடப்பமரம் ; தாலம்ப பாடாணம் . |
| கலம்பாடு | ஒரு கல விதை விதைத்தற்குரிய நிலம் . |
| கலம்பி | கொத்துப்பசளை . |
| கலம்பூச்சு | பாண்டம் தேய்க்கும் ஓசை . |
| கலமர் | பாணர் . |
| கலமலக்குதல் | உழக்குதல் . |
| கலயம் | கலசம் , மட்பாண்டம் ; நீர்ப்பாண்டம் . |
| கலர் | தீயோர் , கீழ்மக்கள் . |
| கலரை | ஓர் அளவுப்பெயர் . |
| கலலம் | கருவைச் சூழ்ந்து தோன்றும் தோல் . |
| கலவகம் | காக்கை . |
| கலவஞ்சம்பா | ஆறுமாதத்திற் பயிராகக்கூடிய சிறுமணிநெல் . |
| கலவடை | உரலின் வாய்க்கூடு , உரலணை ; பாண்டம் வைக்கும் புரியணை . |
| கலவம் | மயில்தோகை ; மயில் ; கலாபம் என்னும் ஓர் இடையணி ; குழியம்மி , கல்வம் . |
| கலவர் | மரக்கலமோட்டுவோர் ; கப்பலிற் செல்வோர் ; நெய்தல்நில மக்கள் ; படைவீரர் . |
| கலவரம் | மனக்கலக்கம் , குழப்பம் ; சந்தடி . |
| கலவரை | மனக்கலக்கம் , குழப்பம் ; சந்தடி . |
| கலவல் | கலத்தல் ; எழுத்திலாவோசை . |
| கலவறை | அணிகலன்கள் வைக்கும் அறை . |
| கலவன் | கலப்பானது . |
| கலவாங்கட்டி | உடைந்தவோடு . |
| கலவாசு | ஒருவகை வெடி . |
| கலவாயோடு | கடல்நுரை . |
| கலவார் | பகைவர் . |
| கலங்கொம்பு | கலைமான் கொம்பு . |
| கலசக்கொப்பு | மாதர் காதணிவகை . |
| கலசப்பானை | சிறுபானை ; தூபகலசம் ; காளாஞ்சி . |
| கலசம் | குடம் ; கிண்ணம் ; பாண்டம் ; பால் ; தூபகலசம் . |
| கலசமாட்டுதல் | குடத்தால் மஞ்சனமாட்டுதல் . |
| கலசமுனி | குடத்தில் தோன்றிய அகத்தியர் . |
| கலசயோனி | அகத்தியர் ; துரோணாசாரியார் . |
| கலசுதல் | கலத்தல் . |
| கலடு | கன்னிலம் , வன்னிலம் , கடுநிலப் பூமி . |
| கலணை | குதிரைச்சேணம் . |
| கலணைக்கரடு | சேணத்தின் முன்பக்கம் . |
| கலத்தல் | சேர்த்தல் ; சேர்தல் ; நெருங்கல் ; புணர்தல் ; பொருந்தல் ; கூட்டுறவாதல் ; தோன்றுதல் ; பரத்தல் . |
| கலத்திலிடுதல் | உணவு பரிமாறுதல் . |
| கலத்திற்பிரிவு | கடல்கடந்து செல்லும் பிரிவு . |
| கலதம் | வழுக்கைத்தலை . |
| கலதி | தலை வழுக்கைவிழும் நோய் ; கேடு ; மூதேவி ; தீக்குணமுடையோன் . |
| கலதிமை | தீவினை . |
| கலதை | கலக்கம் , குழப்பம் ; மூதேவி . |
| கலந்தருநன் | குயவன் ; பணித்தட்டான் . |
| கலந்துகட்டி | நல்லதும் கெட்டதும் கலந்தது . |
| கலந்துபரிமாறுதல் | கூடிச் செயல்புரிதல் ; கூடியனுபவித்தல் . |
| கலந்தை | பெருமை . |
| கலப்படம் | கலப்புள்ளது . |
| கலப்பற்று | படகின் மூட்டுகளை நீர் புகாது அடைக்கை . |
| கலப்பற்றுக்காரன் | படகின் நீக்கலடைப்பவன் . |
| கலப்பற்றுத்தோணி | நீக்கலடைக்கப்பட்டுள்ள தோணி . |
| கலப்பற்றுப்பார்த்தல் | படகின் நீக்கலடைத்தல் . |
| கலப்பு | கலத்தல் ; உறவாகுகை ; புணர்ச்சி ; கலந்து கட்டியாதல் . |
| கலப்புக்கதிர் | பயிரிடைக் கதிர் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணும் பருவம் . |
| கலப்புச்சரக்கு | கலந்து கட்டியான பண்டம் . |
| கலப்புறம் | குழியம்மி . |
| கலப்புறுமொழி | இருதிணையிலும் வருஞ்சொல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 281 | 282 | 283 | 284 | 285 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலங்கொம்பு முதல் - கலவார் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கலப்பை, பாண்டம், கலத்தல், படகின், வைக்கும், குழப்பம், சந்தடி, அகத்தியர், கலந்து, மூதேவி, மனக்கலக்கம், தூபகலசம், கலக்கம், சக்கரம், கிழங்கு, யாழ், ஆயுதம், மயில்தோகை, கலசம், சிற்றிலக்கியம், மயில், குழியம்மி

