தமிழ் - தமிழ் அகரமுதலி - கலிதி முதல் - கலேல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கலிமோகனம் | அத்திமரம் . |
| கலியப்தம் | கலியுகம் பிறந்த ஆண்டு முதல் எண்ணும் ஒரு முறை . |
| கலியம் | காண்க : கல¦யம் . |
| கலியன் | படைவீரன் ; திருமங்கையாழ்வார் ; இரட்டைப் பிள்ளைகளுள் ஆண் ; கலிபுருடன் ; பசித்தவன் ; வறிஞன் ; சனி . |
| கலியாணக்காரர் | மணமக்கள் ; கலியாண சம்பந்திகள் ; கலியாண விருந்தினர் . |
| கலியாணக்கால் | பந்தற்கால் . |
| கலியாணக்கூடம் | வீட்டில் மணச்சாலையாகப் பயன்படுத்தும் கூடம் . |
| கலியாணக்கோலம் | மணக்கோலம் , திருமண அலங்காரம் . |
| கலியாணச்சடங்கு | திருமணத்துக்குமுன் மாப்பிள்ளை காதணி அணியும் சடங்கு ; திருமணச்சடங்கு . |
| கலியாணஞ்சொல்லுதல் | திருமணம் நிகழ்வதைக் கூறி அழைத்தல் . |
| கலியாணப்பந்தல் | மணப்பந்தல் . |
| கலியாணப்பூ | மூன்றாம் முறையாக நிறைந்து விழும் இலுப்பைப் பூவின் வீழ்ச்சி . |
| கலியாணப்பூசணி | பெரும்பூசணி ; நீற்றுப் பூசணி . |
| கலியாணப்பொருத்தம் | திருமணப் பொருத்தம் ; திருமண உறுதி ; நிச்சயதார்த்தம் . |
| கலியாணம் | திருமணம் ; நன்மை ; மங்களம் ; பொன் ; நற்குணம் . |
| கலியாணம்பண்ணுதல் | திருமணம் செய்தல் ; மொய்யிடவேண்டி விருந்து செய்தல் . |
| கலியாணமண்டபம் | திருமணம் நடக்கும் கோயில் மண்டபம் ; திருமண மண்டபம் . |
| கலியாணமால் | அரண்மனையைச் சார்ந்த கலியாணக்கூடம் . |
| கலியாணமுடித்தல் | திருமணம் உறுதிசெய்தல் ; திருமணம் புரிதல் . |
| கலியாணமெழுதுதல் | திருமணப் பதிவு செய்தல் . |
| கலியாணவாழ்த்து | மணமக்களை வாழ்த்துதல் . |
| கலியாணவெழுத்து | திருமணத்தைச் சட்டப்படி பதிவு செய்கை . |
| கலியாணன் | நற்குண நற்செய்கையுள்ளவன் . |
| கலியுகம் | நாலு யுகங்களுள் கடைசி யுகம் . |
| கலிலம் | கலப்பு ; செந்நீர் . |
| கலிவிருத்தம் | அளவடி நான்குடையதாய் வரும் கலிப்பாவின் இனம் . |
| கலிவெண்பா | கலிப்பா வகையுள் ஒன்று , கலியோசை தழுவி ஈற்றடி வெண்பாப்போல் முச்சீரடியான் வருவது ; வெண்கலிப்பா , கலிவெண்பாட்டு . |
| கலிழ் | கலங்கல்நீர் . |
| கலிழ்தல் | அழுதல் ; ஒழுகுதல் ; புடைபெயர்தல் . |
| கலிழிநீர் | காண்க : கலிழ் . |
| கலின்கலினெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கலினம் | கடிவாளம் ; வன்னிமரம் ; கற்பரிபாடாணம் . |
| கலினி | திப்பிலி ; கைம்பெண் . |
| கலினை | மிளகு ; கொள்ளு ; கடிவாளம் ; கைம்மை . |
| கல¦யம் | கடிவாளம் . |
| கல¦ரம் | முருக்கு . |
| கல¦ரெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கலுக்குப்பிலுக்கு | அணிகளால் எழுமொலி ; பகட்டு . |
| கலுங்கு | காண்க : கலிங்கு . |
| கலுடம் | கலங்கல்நீர் ; பாவம் . |
| கலுவடம் | பூவரும்பு . |
| கலுவம் | மருந்தரைக்கும் குழியம்மி . |
| கலுழ் | அழுகை ; நீர்க்கலக்கம் . |
| கலுழ்ச்சி | அழுகை . |
| கலுழ்தல் | கலங்குதல் ; தடுமாறுதல் ; அழுதல் ; ஒழுகுதல் ; உருகுதல் . |
| கலுழக்கல் | கருடக்கல் , பாம்பின் கடிநஞ்சை நீக்கும் கல் . |
| கலுழம் | கலங்கல்நீர் . |
| கலுழன் | கருடன் , ஒரு பறவை வகை . |
| கலுழி | கலங்கல்நீர் ; காட்டாறு ; நீர்ப்பெருக்கு , வெள்ளம் ; கண்ணீர் ; கலக்கம் . |
| கலேகபோதநியாயம் | பறவைகள் பல ஒரே களத்தில் தவசங்களைப் பொறுக்க மேல் விழுவது போலும் நெறி . |
| கலேயகம் | மஞ்சள் . |
| கலேர் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கலேல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கலிதி | திப்பிலி . |
| கலிநடம் | கழாய்க்கூத்து . |
| கலிப்பா | நான்குவகைப் பாக்களுள் ஒன்று . |
| கலிப்பு | ஒலிக்கை ; பொலிவு ; தரா என்னும் உலோகம் . |
| கலிபணம் | ஈமச்சடங்கிற் பண்டைக் காலத்து வழங்கிய ஒரு நாணயம் . |
| கலிபலி | ஆரவாரம் ; கலகம் , சச்சரவு . |
| கலிபிலி | ஆரவாரம் ; கலகம் , சச்சரவு . |
| கலிபுருடன் | கலிகாலத்துக்கு உரிய தேவதை , சனி . |
| கலிமகிழ் | ஓலக்கம் . |
| கலிமா | முகமது மதத்தாருடைய விண்ணப்பம் . |
| கலிமாரகம் | கிலுகிலுப்பை . |
| கலிமாலகம் | அகில் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 283 | 284 | 285 | 286 | 287 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலிதி முதல் - கலேல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், திருமணம், கலங்கல்நீர், ஒலிக்குறிப்பு, கடிவாளம், செய்தல், திருமண, காண்க, ஒழுகுதல், அழுதல், சச்சரவு, கலகம், ஆரவாரம், திப்பிலி, அழுகை, கலிப்பா, கலியாணக்கூடம், கலியாண, கலிபுருடன், கல¦யம், திருமணப், மண்டபம், ஒன்று, கலியுகம், பதிவு, கலிழ்

