தமிழ் - தமிழ் அகரமுதலி - கலவி முதல் - கலிதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கலனை | காண்க : கலணை ; கலப்பை ; ஒன்றற்கமைந்த பல்வகை உறுப்புகள் . |
| கலாங்கிசம் | இராசியைப் பதினாறு கூறிடுகை . |
| கலாசு | மரக்கலம் , கப்பல் . |
| கலாசுகாரன் | மரக்கலம் ஓட்டுவோன் ; பீரங்கிசுடும் படையாள் . |
| கலாத்துவா | ஐந்து கலைகளாகிய அத்துவாவகை . |
| கலாதத்துவம் | சுத்தாசுத்த தத்துவங்களுள் ஒன்று . |
| கலாதரன் | காண்க : கலாபதி . |
| கலாதன் | தட்டான் , கருமான் . |
| கலாதி | கலகம் , சண்டை . |
| கலாநிதி | சந்திரன் ; கல்விக்களஞ்சியம் ; அறிஞர்களுக்குக் கொடுக்கும் பட்டம் . |
| கலாப்பித்தல் | கலத்தல் . |
| கலாபதி | பதினாறு கலைகளையுடைய சந்திரன் . |
| கலாபம் | பதினாறு கோவையுள்ள மாதர் இடையணி , மேகலை , அரைப்பட்டிகை ; மயில்தோகை ; பீலிக்குடை ; தொகுதி ; அம்புக்கூடு ; கலகம் . |
| கலாபனை | கலகம் . |
| கலாபி | மயில் . |
| கலாபித்தல் | கலகம் பண்ணுதல் . |
| கலாபேதம் | வேறுபட்ட சமயம் . |
| கலாம் | போர் ; மாறுபாடு ; சினம் ; கொடுமை ; ஊடல் . |
| கலாம்பூரம் | ஒருவகை மருந்து . |
| கலாய்த்தல் | கலகஞ்செய்தல் ; சினத்தல் . |
| கலாயி | பாண்டங்கட்குப் பூசப்படும் ஈயம் . |
| கலால் | கள் . |
| கலால்தீர்வை | கள்வரி . |
| கலாவதி | சந்திரன் ; கலைமகள் . |
| கலாவம் | காண்க : கலாபம் . |
| கலாவல்லி | கலைமகள் ; பண்டிகை . |
| கலாவுதல் | கலத்தல் ; கூடுதல் ; கலக்கமடைதல் ; வெகுளல் . |
| கலி | ஒலி ; கடல் ; வலிமை ; செருக்கு ; தழைக்கை ; துளக்கம் ; மனவெழுச்சி ; கலிப்பா ; இடைச்சங்கநூல் , கலித்தொகை ; கலிபுருடன் ; கலியுகம் ; துன்பம் ; வறுமை ; வஞ்சகம் ; போர் . |
| கலிக்கம் | கண்ணிலிடும் மருந்து . |
| கலிகம் | காண்க : கலிக்கம் ; வன்னிமரம் . |
| கலிகன்றி | திருமங்கையாழ்வார் . |
| கலிகாலம் | கலியுகம் . |
| கலிகை | பூவரும்பு ; மல்லிகைச்செடி . |
| கலிகொள்ளுதல் | வெளிப்படுதல் . |
| கலிங்கம் | ஒரு நாடு ; ஒரு மொழி ; ஆடை ; வானம்பாடி ; ஊர்க்குருவி ; வெட்பாலைமரம் ; ஆற்றுத் தும்மட்டிக்காய் ; கண்மருந்து ; மிளகு . |
| கலிங்கல் | ஏரிமதகு ; நீர் வழியும் அணைக்கட்டு . |
| கலிங்கு | ஏரிமதகு ; நீர் வழியும் அணைக்கட்டு . |
| கலிச்சி | இரட்டைப் பிள்ளைகளுள் பெண் . |
| கலிசம் | வன்னிமரம் . |
| கலிஞ்சு | காண்க : கலிங்கு . |
| கலித்தல் | ஒலித்தல் ; யாழொலித்தல் ; செழித்தல் ; உண்டாதல் ; எழுதல் ; பெருகுதல் ; மகிழ்தல் ; செருக்குதல் ; விரைவாதல் ; நெருங்கியிருத்தல் ; நழுவுதல் ; நீக்குதல் . |
| கலித்தளை | நேர் ஈற்று உரிச்சீர் முன்னர் நிரை வருவது . |
| கலித்தாழிசை | ஒத்துள்ள சில அடிகளையேனும் பல அடிகளையேனும் பெற்று ஈற்றடிமிக்கு வருவதாகிய கலிப்பாவின் இனம் . |
| கலித்துருமம் | தான்றிமரம் . |
| கலித்துறை | நெடிலடி நான்குகொண்டு வருவதாகிய கலிப்பாவின் இனம் ; கட்டளைக் கலித்துறை . |
| கலிதம் | விந்து நழுவுகை . |
| கலவி | கலக்கை , புணர்ச்சி . |
| கலவிகரணன் | வயிரவன் . |
| கலவித்துப்பாடு | காண்க : கலம்பாடு . |
| கலவிருக்கை | விருப்பமான இடம் ; பண்டசாலை . |
| கலவினர் | உறவினர் . |
| கலவு | உடலின் மூட்டுவாய் . |
| கலவுதல் | கலத்தல் . |
| கலவை | கலப்புண்ட பொருள் ; சந்தனக்குழம்பு ; கலப்பான உணவு ; மண் கலந்த சுண்ணாம்பு , சுண்ணச்சாந்து . |
| கலவைச்சந்தனம் | மணப்பண்டங்கள் சேர்த்த சந்தனம் . |
| கலவைச்சேறு | மணப்பண்டங்கள் சேர்த்த சந்தனம் . |
| கலவைத்தசை | இறுகியமைந்த சதை . |
| கலவைநீர் | மணங்கலந்த நீர் . |
| கலவையணி | நீரும் பாலும்போலப் பிரிக்க முடியாத பல அணிகள் விரவிவருதல் . |
| கலவோடு | உடைந்தவோடு , மட்பாண்டச்சல்லி . |
| கலன் | அணிகலன் ; கீழ்மகன் ; மரக்கலம் ; பூண் ; யாழ் ; கோட்சொல்லி ; வில்லங்கம் . |
| கலன்கழிமடந்தை | அணிகள் அணிவதைக் கைவிடும் கைம்பெண் . |
| கலனம் | வாய் பிதற்றுகை ; இந்திரிய நெகிழ்ச்சி ; பெரும்பாடு ; சந்தனக்குழம்பு . |
| கலனரசு | தாலி . |
| கலனிருக்கை | கலவிருக்கை ; பண்டசாலை . |
| கலனிலி | கைம்பெண் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 282 | 283 | 284 | 285 | 286 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலவி முதல் - கலிதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கலகம், சந்திரன், கலத்தல், நீர், பதினாறு, மரக்கலம், கலித்துறை, கலவிருக்கை, இனம், கலிப்பாவின், பண்டசாலை, மணப்பண்டங்கள், அணிகள், கைம்பெண், சந்தனம், சேர்த்த, வருவதாகிய, சந்தனக்குழம்பு, கலிங்கு, கலைமகள், கலியுகம், மருந்து, போர், கலாபம், கலிக்கம், வன்னிமரம், கலாபதி, அணைக்கட்டு, வழியும், ஏரிமதகு, அடிகளையேனும்

