முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கல்லெரிப்பு முதல் - கலங்குதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கல்லெரிப்பு முதல் - கலங்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கலகக்காரன் | சண்டை செய்வோன் , சச்சரவு செய்வோன் . |
| கலகக்குருவி | மீன்கொத்தி ; சச்சரவு செய்வோன் . |
| கலகக்கை | இரு கை விரல்களையும் நிமிர்த்து வளைக்கும் அபிநயக்கை . |
| கலகப்பிரியன் | கலகத்தில் விருப்பமுடையவன் , கலகமூட்ட விரும்புவோன் ; நாரதர் . |
| கலகம் | குழப்பம் , சச்சரவு ; ஒருவன்மேல் பிறர்க்குப் பகை உண்டாகும்படி தூண்டிவிடுகை ; பேரொலி ; நாட்டுக் குழப்பம் ; போர் ; ஒரு மீன் ; காண்க : கலகக்குருவி . |
| கலகல | காண்க : கலகலெனல் . |
| கலகலக்கக் காய்தல் | நன்றாக உலர்தல் . |
| கலகலத்தல் | கலகலவென்று ஒலித்தல் ; நன்றாகக் காய்தல் ; மிகப் பேசுதல் ; கட்டுக்குலைதல் . |
| கலகலத்தவாய் | அலப்பும் வாய் ; மனத்திலுள்ளதை மறையாது பேசுவோன் . |
| கலகலப்பு | ஒலிக்கை ; கலந்து பழகுகை ; உற்சாக முடைமை . |
| கலகலம் | பறவை ஒலி ; பேரிரைச்சல் ; அணிகலச் செப்பு . |
| கலகலெனல் | ஈரடுக்கொலிக் குறிப்பு . |
| கலகவாயன் | சண்டைக்காரன் ; கலகம் செய்வோன் . |
| கலகி | கலகக்காரி . |
| கலகித்தல் | கலகஞ் செய்தல் . |
| கலங்கடித்தல் | திகைக்கப்பண்ணுதல் , கலங்கச் செய்தல் . |
| கலங்கரைவிளக்கம் | கப்பலைக் கரைநோக்கி அழைக்கும் விளக்குத்தூண் . |
| கலங்கல் | கலங்குதல் ; கலங்கல் நீர் ; அழுதல் ; அச்சம் ; மயங்கல் , குழம்புதல் ; துன்புறுதல் ; கலங்கிய கள் ; கலிங்கு ; ஏரிமதகு . |
| கலங்குதல் | நீர் முதலியன குழம்புதல் ; மனங்குழம்புதல் ; தெளிவின்றாதல் , மயங்குதல் ; அஞ்சுதல் ; துன்புறுதல் ; தவறுதல் . |
| கலக்குதல் | கலங்கச்செய்தல் ; கலத்தல் . |
| கல்லெரிப்பு | நீர்ச்சுருக்கு நோய் |
| கல்லெரிப்புமேகம் | நீர்ச்சுருக்கு நோய் |
| கல்லெறி | கவண் ; கல்லை வீசுகை ; கல்லெறி தொலைவு . |
| கல்லெறிதூரம் | வலிமையோடு கல்லை வீசிஎறிய அது விழும் தொலைவின் அளவு . |
| கல்லெனல் | ஒலிக்குறிப்பு . |
| கல்லேறு | கல்லெறிதல் ; முத்துக் குற்றங்களுள் ஒன்று . |
| கல்லை | இலையாற் செய்த உண்கலம் ; பாதக்குறட்டின் குமிழ் ; அவதூறு . |
| கல்லொட்டர் | கற்சுவர் எடுக்கும் ஒட்டச் சாதியார் . |
| கல்லொட்டி | நத்தை . |
| கல்லோலம் | நீர்த்திரை , அலை . |
| கல்வம் | காண்க : கலுவம் . |
| கல்வழி | கல்லை வைத்தெண்ணும் ஒருவகைக் கணக்கு ; மலைப்பாதை . |
| கல்வளை | மலைப்பிளப்பு ; மலைக்குகை . |
| கல்வி | அறிவு ; வித்தை ; கற்கை ; கற்கும் நூல் ; பயிற்சி . |
| கல்விக்களஞ்சியம் | கல்வியறிவு நிறைந்தவர் . |
| கல்விச்சாலை | கல்விபயிலும் இடம் , கல்விக் கூடம் , கல்லூரி , பாடசாலை . |
| கல்விச்சேர்க்கை | கலைக்களஞ்சியம் , பல்கலை யகரமுதலி . |
| கல்வித்துறை | கல்வி அமைப்பு ; கல்வி நிலையம் ; கல்விவகை . |
| கல்விநூல் | கலை , சாத்திரம் . |
| கல்விப்பொருள் | கல்விச்செல்வம் . |
| கல்விபயில்களம் | கல்வி பயிலும் இடம் , கல்லூரி . |
| கல்விமதம் | கல்விச்செருக்கு . |
| கல்விமான் | அறிஞன் , புலவன் ; கற்றவன் , படிப்பாளி ; கலைஞன் . |
| கல்வியறிவு | கற்றதனாற் பெறும் அறிவு . |
| கல்வியூரி | கல்வி பயிலிடம் , கல்லூரி , கழகம் , சங்கம் . |
| கல்விவான் | காண்க : கல்விமான் . |
| கல்விளக்கு | மாக்கல்லாலாகிய விளக்கு . |
| கல்வினையர் | சிற்பாசாரியர் , கல்தச்சர் , சிற்பி . |
| கல்வீடு | கல்லினாற் கட்டிய வீடு ; உறுதியான கட்டடம் . |
| கல்வீரியம் | அன்னபேதி . |
| கல்வெட்டி | மாணிக்கக்கல் செதுக்குவோர் ; செங்கல் அறுத்தற்குரிய கருவி , செங்கல் அச்சு . |
| கல்வெட்டு | கல்லில் எழுதப்பட்டது ; சிலாசாசனம் ; அழியாத சொல் ; முன்னோர் இறந்த நாள் முதலியவற்றைக் குறிக்கும் புகழ்ச்சிச் செய்யுள் , சரமகவி , இரங்கற் பா . |
| கல்வெடி | மலைகளை உடைக்க உதவும் வெடிமருந்து வகை ; உரத்த ஓசையோடு வெடிக்கும் வெடி . |
| கல்வெள்ளி | இரும்பும் வெள்ளீயமும் கலந்தது , கலப்பு வெள்ளி . |
| கல்வேலை | கல்லிற் செய்யும் வேலை ; மணி வேலை . |
| கலக்கடி | கலக்கம் , அச்சம் ; குழப்பம் . |
| கலக்கம் | கலங்குகை ; மனக்குழப்பம் ; துன்பம் ; அச்சம் ; புத்தித் தெளிவின்மை ; அழுகை ; ஆரவாரம் . |
| கலக்கு | கலக்கம் ; பொருத்து . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 280 | 281 | 282 | 283 | 284 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கல்லெரிப்பு முதல் - கலங்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கல்வி, கல்லை, செய்வோன், காண்க, அச்சம், கல்லூரி, குழப்பம், சச்சரவு, கலக்கம், கல்லெறி, அறிவு, கல்விமான், வேலை, செங்கல், நோய், இடம், கல்வியறிவு, குழம்புதல், காய்தல், கலகலெனல், கலகம், கலகக்குருவி, செய்தல், கலங்கல், துன்புறுதல், சொல், நீர், கலங்குதல், நீர்ச்சுருக்கு

