தமிழ் - தமிழ் அகரமுதலி - கல்லத்தி முதல் - கல்லெடுப்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கல்லுவைத்தல் | நங்கூரமிடுதல் ; கடிவாயில் மந்திரங்கூறி நஞ்சுக்கல் வைத்தல் ; நெற்றியிற்கல்லை ஏற்றித் தண்டித்தல் ; இறந்தோர்க்குக் கல் நடல் ; செயல் பலிக்காமற் பண்ணுதல் ; அணிகளில் மணிக்கற்களைப் பதித்தல் . |
| கல்லுளி | கல்வெட்டும் உளி , கல்வேலைக்குரிய உளி ; பேய்க்களா . |
| கல்லுளிச்சித்தன் | ஒருவகைச் சித்தர் ; கல்லுளி மங்கன் . |
| கல்லுளிமங்கன் | அருவருப்பான செய்கையால் பிடிவாதங் காட்டுபவன் . |
| கல்லுளியுருக்கு | கல்லைச் செதுக்கும் எஃகு . |
| கல்லுளுவை | ஒரு கடல்மீன்வகை . |
| கல்லூரி | கல்வி பயிலும் இடம் ; சுற்றுத்தாழ்வாரம் . |
| கல்லூற்று | கல்லில் ஊறும் நீரூற்று . |
| கல்லூன்றுதல் | கல் புதைத்தல் , சாச் சடங்காகக் கல்நடுதல் . |
| கல்லெடுப்பு | கல்லை யெடுத்தல் , சாவுச் சடங்கில் நிறுத்திய கல்லை யெடுத்தல் . |
| கல்லதர் | பருக்கைக் கற்கள் பொருந்திய சிறுவழி . |
| கல்லம் | செவிடு ; மஞ்சள் . |
| கல்லரவிந்தம் | கற்றாமரை . |
| கல்லல் | குழப்பம் ; பலர் பேசலால் எழும் ஒலி ; ஓர் ஊர் . |
| கல்லலகு | ஒருவகை வாச்சியம் . |
| கல்லவடம் | ஒருவகைப் பறை ; முரசு . |
| கல்லழிஞ்சில் | ஒருவகை அழிஞ்சில்மரம் . |
| கல்லளை | மலைக்குகை . |
| கல்லறுத்தல் | பச்சைவெட்டுக்கல் அறுத்தல் , செங்கல் அறுத்தல் . |
| கல்லறை | குகை ; பிணக்குழி ; கல்லாலாகிய அறை . |
| கல்லன் | தீயோன் , பொல்லாதவன் . |
| கல்லாங்குத்துநிலம் | கடினமான நிலம் . |
| கல்லாசாரி | கல்தச்சன் ; கல்தச்சர் தலைவன் . |
| கல்லாடை | காவித்துணி . |
| கல்லாணக்காணம் | திருமணத்திற்காகச் செலுத்தப்பட்ட ஒரு பழைய வரி . |
| கல்லாந்தலை | ஒரு மீன்வகை . |
| கல்லாப்பெட்டி | பலசரக்கு வணிகனின் பணப்பெட்டி . |
| கல்லாமை | கல்வி கல்லாதிருத்தல் , கற்றுக் கொள்ளாமை , படியாதிருத்தல் . |
| கல்லார் | கல்வியறிவற்றவர் , கீழ்மக்கள் . |
| கல்லாரம் | செங்கழுநீர் , செங்குவளை ; நீர்க்குளிரி ; மஞ்சள் . |
| கல்லாரை | கரந்தை , ஒருவகைப் பூமரம் . |
| கல்லால் | ஓர் ஆலமரம் ; கல்லாலமரம் ; குருக்கத்தி ; பூவரசு . |
| கல்லான் | கல்வியில்லாதவன் . |
| கல்லி | பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு ; கல்விமிக்க குழந்தை ; ஆமை ; ஊர்க்குருவி ; கேலி ; வேடிக்கை ; மேலங்கி உறுப்பு ; சுற்றுவரி என்னும் கட்டட உறுப்பு ; சகடம் . |
| கல்லிச்சி | இத்திமரவகை . |
| கல்லித்தி | இத்திமரவகை . |
| கல்லித்திருத்துதல் | மேடான நிலத்தை வெட்டித்திருத்துதல் . |
| கல்லியம் | கள் ; ஆயத்தமானது ; நோயின்மை . |
| கல்லியாணக்கூடம் | சேலைவகை ; திருமணம் செய்யுமிடம் . |
| கல்லியாணம் | காண்க : கலியாணம் . |
| கல்லில் நார் உரித்தல் | இல்லாத பொருளைப் பெற முயலுதல் ; ஒரு பொருளைப் பாடுபட்டு முயன்று பெறுதல் . |
| கல்லிழைத்தல் | மணிக்கற்களைப் பதித்தல் . |
| கல்லின்காரம் | கல்நார் . |
| கல்ல¦யம் | வெள்ளீயம் காரீயங்களின் கலப்பு ; வன்மையான ஈயம் ; நீலாஞ்சனம் . |
| கல்ல¦ரம் | முருக்கு . |
| கல்ல¦ரல் | பித்த சுரப்பி ; பறவை மீன்களுக்குள்ள இரண்டாம் இரைப்பை . |
| கல்லுக்கலைக்காத்தான் | பொன்னாங்காணிக் கீரை . |
| கல்லுக்கலைத்தான் | பொன்னாங்காணிக் கீரை . |
| கல்லுக்காரர் | இரத்தினம் விற்போர் . |
| கல்லுக்குத்துதல் | மேல்தளம் முதலியவற்றிற்குப் பாவுகல் குத்துதல் ; செயலைத் தடை செய்தல் . |
| கல்லுகம் | பெருவாகை . |
| கல்லுகொம்பு | தரைதோண்டும் முளை . |
| கல்லுண்டை | ஒருவகைச் சம்பாநெல் . |
| கல்லுத்தீர்தல் | இரத்தினஞ் செதுக்குதல் . |
| கல்லுத்தூக்குதல் | நங்கூரந் தூக்குதல் . |
| கல்லுதல் | தோண்டுதல் ; துருவுதல் ; நீர் அரித்தல் ; தின்னுதல் ; எழுத்தாணிக் கூர் கிழித்தல் ; ஒலித்தல் . |
| கல்லுப்பிடித்தல் | அரிசி களையும்போது சிறுகற்கள் கீழே தங்குதல் ; தொலைக்க வழிதேடுதல் . |
| கல்லுப்பு | ஒருவகை உப்பு . |
| கல்லுப்பொறுக்கி | கல்லை விழுங்கும் புறாவகை . |
| கல்லுப்போடுதல் | செயலைத் தடைசெய்தல் ; எதிர்பாராத ஆபத்தை உண்டாக்குதல் ; நங்கூரம் போடுதல் . |
| கல்லுருணி | புல்லுருவிப்பூடு . |
| கல்லுருவி | கல்லைக் கரைக்குங் குணமுள்ள ஒருவகைப் பூடு . |
| கல்லத்தி | ஓர் அத்திமரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 279 | 280 | 281 | 282 | 283 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கல்லத்தி முதல் - கல்லெடுப்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கல்லை, ஒருவகை, ஒருவகைப், அறுத்தல், உறுப்பு, பொருளைப், செயலைத், கீரை, பொன்னாங்காணிக், இத்திமரவகை, மஞ்சள், கல்லுளி, பதித்தல், ஒருவகைச், கல்வி, யெடுத்தல், கல்லில், மணிக்கற்களைப்

