தமிழ் - தமிழ் அகரமுதலி - கரைமடி முதல் - கல்லணை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கரையேற்றுதல் | நற்கதி சேர்த்தல் ; வறுமை முதலியவற்றினின்று ஈடேற்றுதல் ; திருமணம்பெறச் செய்தல் . |
| கரையேறுதல் | நீரினின்று கரையடைதல் ; நற்கதி யடைதல் ; வறுமை முதலியவற்றினின்றும் ஈடேறுதல் ; வாழ்கைப்படுதல் ; விரும்பியதை அடைதல் . |
| கரையோலை | பிரிவினைப் பத்திரம் . |
| கரைவலை | மீன்வலை . |
| கரைவலைத்தோணி | கரைவலையை இழுத்துச் செல்லுந் தோணி . |
| கரைவழி | நீர்க்கரைப் பாதை ; ஆற்றோரமான நிலம் ; கரையீடு . |
| கரைவழித் தீர்வை | வேற்றூர்களிலிருந்து உள்நாடு வழியாகவரும் பண்டங்களுக்கு விதிக்கப்படும் சுங்கம் . |
| கரைவாடை | வடமேல்காற்று . |
| கரைவீதம் | ஊர்க் குடிகட்குப் பிரிக்கப்படும் பங்கு . |
| கரைவு | கரைதல் , மன இளக்கம் ; சரிவு . |
| கரோடம் | தலையோடு . |
| கரோடி | சூட்டுமாலை , முடிமாலை ; கழுதை . |
| கரோடிகை | சூட்டுமாலை , முடிமாலை ; கழுதை . |
| கரோருகம் | நகம் . |
| கல் | வெட்டியெடுத்த கல் ; சிறுகல் ; பாறை ; மலை ; இரத்தினம் ; காவிக்கல் ; முத்து ; வீரக்கல் ; சாவுச்சடங்கில் இறந்தார்பொருட்டுப் பத்து நாளைக்கு நாட்டப்படுங்கல் , மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று ; செங்கல் ; கருங்கல் ; மைல் அளவுக்கு நாட்டப்பட்ட கல் ; கிலோமீட்டர் அளவுக்கு நாட்டப் படுங்கல் ; மைல்தூரம் ; கல்வி . |
| கல் | தோண்டு ; பயில் ; கல்வி கல் ; படைக்கலம் முதலியன பயில் . |
| கல்கட்டை | கல்லினாற் கட்டப்பட்ட கட்டை . |
| கல்கம் | உலர்ந்த சரக்கைப் பால் அல்லது நீர் விட்டு அரைத்துச்செய்யுங் குளிகை . |
| கல்காரம் | பாறைக்கற் கட்டடம் . |
| கல்கி | கோயில் , திருமாலின் பத்துப் பிறப்புகளுள் இனி நிகழவிருக்கும் கடைசிப் பிறப்பு . |
| கல்சிலை | பறவைவகை . |
| கல்நடுதல் | இறந்தார்பொருட்டுக் கல் நடுதல் . |
| கல்நாதம் | அன்னபேதி என்னும் மருந்துச் சரக்கு . |
| கல்நார் | ஒருவகை மருந்து . |
| கல்நுங்கு | முதிர்ந்த நுங்கு . |
| கல்நெஞ்சு | வன்னெஞ்சு , இரக்கமற்ற மனம் . |
| கல்பு | மனம் . |
| கல்மடி | பசுவின் காய்மடி . |
| கல்மந்தாரம் | அடைபட்டுச் சஞ்சாரமின்றியுள்ள மேகம் . |
| கல்மரவை | கற்சட்டி . |
| கல்மழை | ஆலங்கட்டியாக விழும் மழை . |
| கல்மாந்தம் | குழந்தைகட்கு உண்டாகும் ஈரல் நோய்வகை . |
| கல்மூங்கில் | ஒருவகை மூங்கில் , உள்தொளை சிறுத்துள்ள மூங்கில் வகை , முள்ளில்லாத சிறு மூங்கில்வகை . |
| கல்யாணகுணம் | நற்குணம் , உயர்ந்த குணம் . |
| கல்யாணச்சாவு | அகவைமுதிர்ந்தோரது இறப்பு . |
| கல்யாணத்திருமேனியாதல் | நல்லுடம்பு வாய்த்தல் . |
| கரையேற்றம் | நற்கதியடைகை ; வறுமை முதலியவற்றினின்றும் ஈடேறுகை . |
| கல்யாணதரம் | சமவசரணத்திலுள்ள மூன்று மதில்களுள் ஒன்று . |
| கல்யாணம் | காண்க : கலியாணம் . |
| கல்யாணன் | நற்குணமுடையவன் . |
| கல்யாணி | நற்குணமுடையவள் ; ஒரு பண்வகை . |
| கலியாணி | நற்குணமுடையவள் ; ஒரு பண்வகை . |
| கல்லக்காரம் | பனங்கற்கண்டு . |
| கல்லகம் | மலை . |
| கல்லகாரம் | செங்குவளை ; நீர்க்குளிரி . |
| கல்லங்காய் | இறுகிய காய் . |
| கல்லட்டிகை | மணிவைத்து இழைத்த அட்டிகை அணி . |
| கல்லடார் | விலங்குகளைப் பிடிக்கும் கற்பொறி . |
| கல்லடித்தல் | கல் வெட்டுதல் ; காலிற் கல்லடி படுதல் . |
| கல்லடைப்பு | நீரடைக்கும் ஒரு நோய்வகை . |
| கல்லணை | கல்லாற் கட்டிய நீரணை ; கரிகாலன் கட்டிய அணை ; ஓர் ஊர் ; குதிரைமேல் தவிசு . |
| கரைமடி | கரைவலை . |
| கரைமரஞ்சேர்தல் | உய்வடைதல் . |
| கரைமானியம் | ஏரிக்கரையைப் பழுதுபார்ப்பதற்கு வேண்டிய ஆள்களைக் கூட்டுவதற்கு விடப்பட்ட இறையிலி நிலம் . |
| கரையப்பாடம்பண்ணுதல் | காண்க : கரையாக்குதல் . |
| கரையல் | கரைந்தது ; கரைதல் ; உருகுதல் ; கரைந்த பொருள் . |
| கரையற்சாதம் | குழைந்த சோறு . |
| கரையாக்குதல் | நன்றாகக் கற்றல் . |
| கரையாளன் | ஊர்க் கரைப்பங்குக்கு உரியவன் ; மறவர் ; இடையர்களின் பட்டப்பெயர் . |
| கரையான் | கடற்கரைப் பக்கத்து வாழும் வலைஞன் . |
| கரையிடுதல் | நிலப்பங்கு பிரித்தல் ; நிலங்களைப் பயிரிடுமாறு பிரித்துக் கொடுத்தல் . |
| கரையீடு | ஊர்நிலங்களை மாற்றியடைக்கை ; அடைமானம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 278 | 279 | 280 | 281 | 282 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரைமடி முதல் - கல்லணை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வறுமை, நோய்வகை, மனம், பயில், மூங்கில், ஒருவகை, நற்குணமுடையவள், கரையாக்குதல், கட்டிய, பண்வகை, கல்வி, காண்க, ஒன்று, கரையீடு, நிலம், கரைவலை, முதலியவற்றினின்றும், ஊர்க், கரைதல், நற்கதி, கழுதை, முடிமாலை, சூட்டுமாலை, அளவுக்கு

