முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கருவிரலூகம் முதல் - கரைபோடுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கருவிரலூகம் முதல் - கரைபோடுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கருவேப்பிலை | கறிவேம்பின் இலை ; கறிவேம்பு ; செடிவகை . |
| கருவேம்பு | கறிவேம்புமரம் ; கறுப்பு வேப்பமரவகை . |
| கருவேல் | ஒரு மரம் , வேலமரவகை . |
| கருவை | வரகு வைக்கோல் ; ஒரு சிவதலம் . |
| கருள் | இருள் ; கறுப்பு ; குற்றம் ; சீற்றம் ; நல்லாடை . |
| கருளன் | கருடன் |
| கருனை | பொரியல் , பொரிக்கறி . |
| கரேணு | யானை , பெண்யானை . |
| கரை | கடற்கரை , நீர்க்கரை , எல்லை , செய்வரம்பு ; சீலையின் விளிம்பு ; பக்கம் ; இடம் ; சொல் ; ஊர்ப் பெரும்பங்கு . |
| கரைக்கல்லோலம் | கடற்பாசி . |
| கரைக்காரன் | ஊர் மணியக்காரன் ; நிலப்பங்குக்குரியவன் ; சீட்டு நடத்துபவன் . |
| கரைக்கூறுசெய்வார் | நிலவளவை செய்யும் ஊர் அதிகாரிகள் . |
| கரைகட்டுதல் | நீர்க்கரைக்கு வரம்பு உண்டாக்குதல் ; சீலை விளிம்பைக் கட்டுதல் . |
| கரைகடத்தல் | கரையைத் தாண்டுதல் ; எல்லை மீறுதல் . |
| கரைகண்டவன் | மிகத் தேர்ந்தவன் . |
| கரைகன்று | பருவத்துக்குமுன் ஈன்ற கன்று . |
| கரைகாணுதல் | முடிவு காணுதல் , எல்லையறிதல் . |
| கரைகாரன் | காண்க : கரைக்காரன் . |
| கரைச்சல் | உருக்குகை ; கவலை . |
| கரைசல் | கரையல் ; உருக்குதல் . |
| கரைசிலை | இந்துப்பு . |
| கரைசேர்தல் | காண்க : கரையேறுதல் . |
| கரைஞ்சான் | அகில்மரம் . |
| கரைத்தல் | உருக்குதல் , கரையச்செய்தல் , எழுத்திலாவோசை ; அழைத்தல் ; அழித்தல் ; நிமிண்டுதல் . |
| கரைத்துக்குடித்தல் | உணவு முதலியவற்றைக் கரைத்து உட்கொள்ளுதல் ; முற்றக்கற்றறிதல் . |
| கரைதட்டுதல் | கப்பல் மணலிற் பாய்தல் . |
| கரைதல் | கரைந்து போதல் ; உருகுதல் ; இளைத்தல் ; அழைத்தல் ; சொல்லுதல் ; அழுதல் ; உருவழிதல் ; ஒலித்தல் ; வருந்துதல் ; காக்கையின் கூப்பீடு . |
| கரைதலைப்பாடம் | கடைதலைப் பாடம் , தலைகீழாகப் பாடம் பண்ணுகை . |
| கரைதுறை | முடிவு ; இறங்குமிடம் . |
| கரைதுறைக்காவற்காரன் | துறைமுகங்காப்பவருள் தலைவன் . |
| கரைப்பங்கு | ஊர் நிலப்பங்கு . |
| கரைப்படுத்தல் | கரையிற் சேர்த்தல் ; நற்கதி அடைவித்தல் . |
| கரைப்பாதை | கரைவழி ; கரைவழியே செல்லும் பயணம் . |
| கரைப்பு | வீட்டின் மேல்தளத்தை நீர்வாட்ட முறும்படி செய்கை . |
| கரைப்புக்கல் | தளத்திற்கு இழைப்போட்டுங்கல் . |
| கரைப்போக்கு | கடற்கரை ,போலிக்கெம்பு ; இழிவானது . |
| கரைபடுதல் | பங்குவீதம் நிலம் பிரிவுபடுதல் . |
| கரைபிடித்தல் | மரக்கலந் துறைசேர்தல் . |
| கரைபிடித்தோடுதல் | மரக்கலம் கரையோரமாய்ச் செல்லுதல் . |
| கரைபுரளுதல் | பெருக்கெடுத்தல் , கரைமூடிப்பாய்தல் , மிகுதல் . |
| கரைபோடுதல் | செய்கரை கட்டுதல் ; நிலம் பிரித்தல் ; சீட்டுப்போடுதல் . |
| கருவிரலூகம் | கரிய விரல்களையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி . |
| கருவிரிதல் | பயிரில் கதிர்பறிதல் . |
| கருவிலி | ஒருவகைப் பாம்பு . |
| கருவிழி | கண்மணி . |
| கருவிளங்கனி | மூன்று நிரையசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு . |
| கருவிளங்காய் | நிரைநிரைநேர் கொண்ட மூவகைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு . |
| கருவிளந்தண்ணிழல் | நிரை நிரை நேர் நிரை கொண்ட நாலசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு . |
| கருவிளம் | இரண்டு நிரையசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு ; காக்கட்டான் ; வில்வம் . |
| கருவிளா | ஒருவகை விளாமரம் ; வில்வம் . |
| கருவிளை | காக்கணங்கொடி ; ஒரு மரவகை . |
| கருவினை | பாவம் . |
| கருவீரல் | கல்ல¦ரல் . |
| கருவுகலம் | பொருளறை , கருவூல அறை . |
| கருவுப்பு | எள்ளுப்பு . |
| கருவுயிர்த்தல் | ஈனுதல் . |
| கருவுளமைப்பு | பிறப்பெடுத்தலால் வரும் விளைவு . |
| கருவுறுதல் | கருத்தரித்தல் ; மலர்தல் . |
| கருவூமத்தை | ஊமத்தஞ்செடிவகை . |
| கருவூர் | சேரரது பழைய தலைநகர் ; கரு உண்டாகும் இடம் . |
| கருவூலம் | செல்வச் சேர்ப்பறை , பொருளறை . |
| கருவெடுத்தல் | உடம்பெடுத்தல் ; அட்ட கருமக்கருச் சேர்த்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 277 | 278 | 279 | 280 | 281 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருவிரலூகம் முதல் - கரைபோடுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குறிக்கும், வாய்பாடு, நிரை, சீரைக், நிலம், சேர்த்தல், கொண்ட, பொருளறை, வில்வம், பாடம், அழைத்தல், இடம், எல்லை, கடற்கரை, கறுப்பு, கரைக்காரன், கட்டுதல், உருக்குதல், காண்க, முடிவு, சொல்

