முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கருமமல்லாச்சார்பு முதல் - கருவியைந்து வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கருமமல்லாச்சார்பு முதல் - கருவியைந்து வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கருமேந்திரியம் | தொழில்களைச்செய்யும் கை கால் முதலிய உறுப்புகள் . |
| கருமேனி | கரியவுடல் ; பருவுடல் , தூல உடம்பு . |
| கருமை | கறுப்பு ; பெருமை ; வலிமை ; பசுமை ; கொடுமை ; வெள்ளாடு ; செயல் ; வெப்பம் . |
| கருவங்கம் | காரீயம் . |
| கருவடகம் | கறிவடகம் . |
| கருவடம் | மலையும் ஆறுஞ் சூழ்ந்த ஊர் . |
| கருவப்பை | கருவூலம் ; பொருள் வைக்கும் பை . |
| கருவம் | செருக்கு , அகங்காரம் ; கரு . |
| கருவரி | கண்ணிலுள்ள கரிய கோடு . |
| கருவல் | குட்டையாள் . |
| கருவலி | மிகுந்த வலிமை . |
| கருவழலை | வழலைப்பாம்புவகை . |
| கருவழிவு | கருச்சிதைவு . |
| கருவறிதல் | உள்ளீடறிதல் ; பகுத்தறியும் பருவம் அடைதல் ; கருக்கொண்டதை அறிதல் . |
| கருவறுத்தல் | அடியோடு தொலைத்தல் . |
| கருவறை | கருக்குழி ; கோயிலிலுள்ள மூலத்தானம் . |
| கருவன் | செருக்கன் ; சங்காரமூர்த்தி . |
| கருவா | இலவங்கப்பட்டைமரம் ; கிராம்புமரம் . |
| கருவாட்டுவாலி | வலியான் , கரிக்குருவி . |
| கருவாடு | உப்பிட்டு உலர்த்திய மீன் ; காய்ந்த மீன் . |
| கருவாப்பட்டை | இலவங்கப்பட்டை . |
| கருவாய் | இலவங்கம் . |
| கருவாலி | ஒரு குருவி ; ஒரு மரவகை . |
| கருவாளி | கருத்துடையோன் , அறிவாளி ; இரசம் . |
| கருவி | ஆயுதம் ; சாதனம் ; கவசம் ; கேடகம் ; குதிரைக்கலணை ; குதிரைச்சம்மட்டி ; தொகுதி ; மேகம் ; தொடர்பு ; ஆடை ; ஓவியம் ; அணிகலன் ; துணைக்காரணம் ; இசையுண்டாதற்குரிய யாழ் முதலிய கருவிகள் . |
| கருவிக்குயிலுவர் | தோற்கருவி வாசிப்போர் . |
| கருவிகரணங்கள் | உடல் உறுப்புகளும் மனமும் . |
| கருவிகழலுதல் | வலியழிதல் . |
| கருவிநூல் | கல்வியறிவை வளர்த்தற்குச் சாதனமான நூல் ; ஆரம்ப நூல் . |
| கருவிப்புட்டில் | ஆயுதவுறை . |
| கருவிப்பை | அடைப்பம் , ஆயுதம் வைக்கும் பை . |
| கருவிபணம் | வரிவகை . |
| கருவிமாக்கள் | யாழ்மீட்டும் பாணர் . |
| கருவியாகுபெயர் | காரணத்தின் பெயர் காரியத்திற்காவது . |
| கருவியைந்து | தோற்கருவி , துளைக்கருவி , நரம்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐந்து வகையான இசைக்கருவிகள் . |
| கருமமல்லாச்சார்பு | செயப்படுபொருளையேனும் ஆதாரத்தையேனும் கருத்தா மெய்யுறுதலினின்றி வரும் சார்பு . |
| கருமமூலம் | தருப்பை . |
| கருமயாகம் | நித்திய கருமானுட்டானம் . |
| கருமயிர் | கரடி . |
| கருமயிலை | இருண்ட சாம்பல் நிறம் . |
| கருமயோகம் | பயன் கருதாது செய்யும் கடமை ; உடல் நிலைத்தற்காகச் செய்யும் யோகம் . |
| கருமருந்து | வெடிமருந்து . |
| கருமவதிகாரர் | அரசு காரியம் நடத்துந்தலைவர் . |
| கருமவிதிகள் | அரசு காரியம் நடத்துந்தலைவர் . |
| கருமவியாதி | முன்செய்த தீவினையால் உறும் தீராநோய் . |
| கருமவினைஞன் | புரோகிதன் . |
| கருமவேதனை | மிக்க வருத்தம் . |
| கருமன் | கொல்லன் . |
| கருமா | பன்றி ; யானை . |
| கருமாத்துமா | முன்வினைப்பயனை அனுபவிப்பவன் . |
| கருமாதி | அந்தியேட்டி முதலிய சடங்கு , கருமாந்தரம் . |
| கருமாதிபதி | சாதகன் பிறந்த இலக்கினத்திற்குப் பத்தாம் இடத்து அதிபதி . |
| கருமாந்தம் | இறந்தவர்பொருட்டுச் செய்யும் பதினாறாம்நாட் சடங்கு . |
| கருமாந்தரம் | இறந்தவர்பொருட்டுச் செய்யும் பதினாறாம்நாட் சடங்கு . |
| கருமாயம் | அருமையானது ; அதிக விலை . |
| கருமாறிப்பாய்ச்சல் | காஞ்சிபுரத்துக் காமாட்சி கோயிற்குளத்துள் நாட்டப்பட்ட இரண்டு கழுக்கோல்களின் இடையே உயரமான இடத்தினின்றுந் தவறாது குதிக்கை . |
| கருமாறிப்பாய்தல் | கருமாறிப் பாய்ச்சல்போன்ற அரிய செயலைச் செய்தல் . |
| கருமான் | கலைமான் , ஆண்மான் ; கொல்லன் ; பன்றி . |
| கருமானம் | மந்திரவித்தை . |
| கருமானுபவம் | செய்வினை அனுபவிக்கை . |
| கருமி | தன் இனத்திற்குரிய செயல்களைச் செய்வோன் ; தீவினையுடையோன் ; பாவி ; ஈயாதவன் . |
| கருமுகில் | நீருண்ட மேகம் ; கருமுகில் பாடாணம் . |
| கருமுகை | இருவாட்சி ; சிறுசண்பகம் ; சாதிமல்லிகை . |
| கருமுடித்தல் | மந்திரத்திற்காக அட்ட கருமக்கருவுண்டாக்கல் ; இரசவாதக் கருவைச் சித்தப்படுத்துதல் . |
| கருமுரடன் | கீழ்ப்படியாதவன் . |
| கருமேகம் | மேகநோய்வகை ; கருமையான மேகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 276 | 277 | 278 | 279 | 280 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருமமல்லாச்சார்பு முதல் - கருவியைந்து வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செய்யும், முதலிய, சடங்கு, மேகம், கருமுகில், கொல்லன், பன்றி, பதினாறாம்நாட், நடத்துந்தலைவர், கருமாந்தரம், இறந்தவர்பொருட்டுச், அரசு, ஆயுதம், மீன், வைக்கும், தோற்கருவி, உடல், வலிமை, நூல், காரியம்

