தமிழ் - தமிழ் அகரமுதலி - அதிதாரம் முதல் - அதீதகாலம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அதிராத்திரம் | வேள்வி இருபத்தொன்றனுள் ஒன்று ; சோமவேள்வி வகை . |
| அதிராயம் | வியப்பு . |
| அதிரித்தம் | அதிகமானது . |
| அதிருசயன் | கடவுள் . |
| அதிருசியம் | காணப்படாதது ; அறுபத்து நான்கு கலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை . |
| அதிருத்தி | மனநிறைவின்மை . |
| அதிருப்தி | மனநிறைவின்மை . |
| அதிரேகம் | மிகுதி ; மாறுபாடு ; வியப்பு ; மேன்மை , மேம்பாடு . |
| அதிரேகமாயை | பெருமயக்கம் . |
| அதிரோகம் | எலும்புருக்கிநோய் , சயரோகம் ; இளைப்பிருமல் , ஈளைநோய் . |
| அதிலுத்தன் | பிறர் பொருளில் மிக்க விருப்பமுடையவன் . |
| அதிலோகம் | உலோகம் , இரசகருப்பூரம் . |
| அதிலோபம் | தன் பொருளைப் பிறர்க்குக் கொடுக்க விரும்பாமை ; மிக்க பொருளாசை . |
| அதிவருணாச்சிரமி | வருணாசிரமங்களைக் கடந்த ஆத்மஞானி . |
| அதிவன்னாச்சிரமி | வருணாசிரமங்களைக் கடந்த ஆத்மஞானி . |
| அதிவாசம் | சிராத்தத்திற்கு முதல்நாள் கடைப்பிடிக்கும் நோன்பு ; ஆரம்பச் சடங்கினுள் ஒன்று ; மிக்க மணம் . |
| அதிவாதம் | புனைந்துரை . |
| அதிவிடயம் | ஒரு மருந்துச் செடி . |
| அதிவிடை | ஒரு மருந்துச் செடி . |
| அதிவிடையம் | ஒரு மருந்துச் செடி . |
| அதிவியாத்தி | இலக்கணம் இல்லாததற்கும் இலக்கணம் சொல்லும் குற்றம் . |
| அதிவியாப்தி | இலக்கணம் இல்லாததற்கும் இலக்கணம் சொல்லும் குற்றம் . |
| அதிவிருஷ்டி | பெருமழை ; அளவுக்கு மிஞ்சிய மழை . |
| அதிவிருட்டி | பெருமழை ; அளவுக்கு மிஞ்சிய மழை . |
| அதிவினயம் | அதிகக் கீழ்ப்படிவு , மிகு வணக்கம் . |
| அதீதகாலம் | இறந்தகாலம் . |
| அதிதாரம் | இலந்தைமரம் . |
| அதிதானம் | கொடை ; பெருங்கொடை . |
| அதிதி | விருந்து ; விருந்தினர் ; புதியவன் ; தேவரை ஈன்றாள் . |
| அதிதிசேவை | விருந்தோம்பல் , விருந்தினரைப் போற்றுதல் . |
| அதிதிநாள் | காண்க : புனர்பூசம் . |
| அதிதிபூசை | விருந்தோம்பல் ; பரதேசிக்கு அன்னமிடல் . |
| அதிதெய்வம் | மேலான தெய்வம் , ஆளும்தெய்வம் . |
| அதிதேசம் | ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல் ; ஒப்புமைகாட்டி உணர்த்துவது . |
| அதிதேசித்தல் | ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல் ; ஒப்புமைகாட்டி உணர்த்துவது . |
| அதிதேவதை | அதிகார தேவதை ; குலதெய்வம் , உரிய தெய்வம் . |
| அதிபதி | அரசன் , தலைவன் ; சண்பகம் . |
| அதிபம் | வேம்பு . |
| அதிபலை | காண்க : பேராமுட்டி ; விசுவாமித்திரர் இராமனுக்குக் கற்பித்த மந்திரம் . |
| அதிபறிச்சம் | காண்க : வாலுளுவை . |
| அதிபன் | தலைவன் ; எப்பொருட்கும் இறைவன் ; அரசன் . |
| அதிபாதகம் | மிகுகொடுஞ்செயல் . |
| அதிபாதகன் | பெருந்தீங்கு புரிவோன் . |
| அதிபாரகன் | மிகு வல்லுநன் . |
| அதிபாவம் | பெரும்பாவம் . |
| அதிபானம் | மதுபானம் . |
| அதிபூதம் | பிரகிருதி மாயை ; பரமாத்மா ; மேலான பொருள் . |
| அதிமதுரம் | மிகு இனிமை ; ஒரு மருந்துச் சரக்கு ; வெண்குன்றி . |
| அதிமலம் | மாவிலிங்கமரம் . |
| அதிமிதம் | அளவில் மிக்கது , அளவு கடந்தது . |
| அதிமுத்தம் | குருக்கத்தி . |
| அதிமுத்தி | சாயுச்சிய முத்தி . |
| அதிமேற்றிராணியார் | கிறித்தவக் கண்காணியாருள் முதன்மையானவர் . |
| அதியர் | அதியமான்வழித் தோன்றியவர் . |
| அதியரையன் | மீன்வலைஞர் தலைவன் . |
| அதியாச்சிரமம் | ஆசிரமங்களைக் கடந்த நிலை . |
| அதியாமம் | முயற்புல் ; அறுகம்புல் . |
| அதியோகம் | நற்கோள் நிலையுள் ஒன்று . |
| அதிர் | ஒலி ; நடுக்கம் , அச்சம் . |
| அதிர்ச்சி | ஆரவாரம் ; குமுறல் ; நடுங்குதல் . |
| அதிர்த்தல் | அதட்டல் ; சொல்லுதல் ; முழங்குதல் ; கலங்குதல் . |
| அதிர்தல் | முழங்கல் ; கலங்கல் ; நடுங்கல் ; தளர்தல் ; குமுறுதல் ; எதிரொலித்தல் . |
| அதிர்ப்பு | அச்சம் , நடுக்கம் ; ஆரவாரம் ; தாக்கி ஒலிக்கை ; எதிரொலி . |
| அதிர்வு | நடுக்கம் , அதிர்ச்சி . |
| அதிர்வெடி | மிகுந்த ஒலியையுடைய வெடி ; குழாய்வெடி ; சிறுபீரங்கி . |
| அதிர்வேட்டு | காண்க : அதிர்வெடி . |
| அதிரசம் | மிக்க இனிமை ; பணியாரை வகையுள் ஒன்று ; உப்பு ; ஒரு பானம் . |
| அதிரடி | பெருங்கலகம் ; மிரட்டு ; அளவுக்குமிஞ்சியது . |
| அதிரதன் | கணக்கற்ற தேர்வீரரை எதிர்த்துப் போரிடும் வன்மையுடையவன் . |
| அதிரல் | மிகுதூறு , விரிதூறு , காட்டு மல்லிகை ; மோசிமல்லிகை ; புனலிக்கொடி ; காண்க : அதிர்தல் . |
| அதிராகம் | கந்தகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அதிதாரம் முதல் - அதீதகாலம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மருந்துச், இலக்கணம், ஒன்று, மிக்க, மிகு, தலைவன், நடுக்கம், செடி, கடந்த, உணர்த்துவது, அரசன், ஒப்புமைகாட்டி, ஏற்றிக்கூறுதல், அச்சம், அதிர்தல், அதிர்வெடி, ஆரவாரம், அதிர்ச்சி, மற்றொன்றற்கு, இனிமை, விருந்தோம்பல், ஆத்மஞானி, இல்லாததற்கும், வருணாசிரமங்களைக், மனநிறைவின்மை, வியப்பு, சொல்லும், குற்றம், மேலான, தெய்வம், மிஞ்சிய, அளவுக்கு, பெருமழை, ஒன்றற்குரியதை

