தமிழ் - தமிழ் அகரமுதலி - கருப்புவில்லி முதல் - கருமம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
கருமசம் | அரசமரம் ; கருமத்தினாலே தோன்றிய ரோகம் முதலியன ; களங்கம் ; வினைப்பயன் ; கலியுகம் . |
கருமசாட்சி | சூரியன் . |
கருமசுத்தி | பாவம் நீக்கல் ; செயலைக் குற்றமறச் செய்கை . |
கருமசேடம் | பல்வேறு அனுபவங்களைக் கொண்டு செலுத்தும் வினைக்குறை . |
கருமஞ்சரி | நாயுருவிச்செடி . |
கருமஞ்செய்தல் | இறுதிக்கடன் செய்தல் . |
கருமணல் | கரிய நுண்மணல் . |
கருமணி | கண்ணின்மணி ; கருகுமணி , நீலமணி . |
கருமத்தம் | கருவூமத்தை . |
கருமத்தலைவன் | காரியத்தலைவன் . |
கருமத்துரோகம் | துரோகச்செயல் . |
கருமநிவர்த்தி | வினையொழிவு ; முன் செய்த தீவினை நீங்கப் புரியும் கிரியை . |
கருமப்பழி | துரோகம் . |
கருமப்பிறப்பு | பாவசென்மம் . |
கருமபந்தம் | வினைகளாலான கட்டு . |
கருமபந்தனம் | வினைகளாலான கட்டு . |
கருமபலன் | வினைப்பயன் . |
கருமபாகை | வேதநூற்பொருளின் ஒன்று , கருமகாண்டம் . |
கருமபூமி | உழவு , தொழில் , வரைவு , வாணிகம் , விச்சை , சிற்பம் என்னும் அறுவகைத் தொழிற்குரிய பூமி ; சுடுகாடு ; வேள்வி முதலிய நற்செயல்கள் புரிதற்குரிய பாரதநாடு . |
கருமம் | செயல் ; வினைப்பயன் ; தொழில் வேதசம்பந்தமான சடங்கு ; இறுதிக்கடன் ; செயப்படுபொருள் ; வெம்மை ; மும்மலங்களுள் ஒன்றாகிய கன்மவிதி . |
கருப்புவில்லி | கரும்பை வில்லாகவுடைய மன்மதன் . |
கருப்பூர்வழக்கு | தீராத வழக்கு . |
கருப்பூரம் | பொன் ; ஒரு மணச்சரக்கு ; பொன்னரிதாரம் ; ஒரு மரவகை . |
கருப்பேந்திரம் | கரும்பாலை . |
கருப்பை | கருப்பப் பை ; காரெலி ; ஒருவகைப் பனை . |
கருப்பொருள் | காரணப் பொருள் ; ஐந்திணைக்கும் உரிய தெய்வம் முதலிய பொருள்கள் . |
கருப்போட்டம் | மார்கழி மாதத்தில் கருக்கொண்ட மேகத்தின் தென்சார்பான ஓட்டம் . |
கரும்படை | மேகப்படை . |
கரும்பணி | பெண்களின் தோள் மார்புகளில் சந்தனக் குழம்பு முதலியவற்றால் கரும்பு வடிவாக வரையப்படும் கோலம் . |
கரும்பன் | கரும்பை வில்லாகவுடைய மன்மதன் . |
கரும்பனசை | கருவழலைப் பாம்பு . |
கரும்பாடு | ஏரியின் நீர்ப்பிடி வரையுள்ள நிலம் . |
கரும்பாம்பு | இராகு ; கருவழலைப் பாம்பு . |
கரும்பாலை | கரும்பாட்டும் ஆலை , பாலைமரவகை . |
கரும்பித்தம் | ஒருவகைப் பித்தநீர் ; பைத்தியம் ; ஒரு நோய் . |
கரும்பிள்ளை | காக்கை . |
கரும்பிறப்பு | நரகப்பிறவி . |
கரும்பிறை | கரும்பளிங்குக் கல் ; கருஞ்சுக்கான் கல் . |
கரும்பு | ஒருவகைப் பயிர் ; புனர்பூசம் . |
கரும்புசம் | வண்டு , ஒருவகைக் கரிய வண்டு . |
கரும்புல் | பனைமரம் . |
கரும்புள் | கரிக்குருவி ; காகம் ; வண்டுவகை ; பெண்வண்டு . |
கரும்புள்ளிக்கல் | உலோக தாதுவுள்ள கல்வகை . |
கரும்புளித்தல் | களிம்பூறுதல் , செம்பிற் களிம்பினால் மோர் முதலியன திரிந்து கெடுதல் . |
கரும்புற்று | கருநிறமுள்ள கிரந்திவகை . |
கரும்புறத்தோர் | விலங்குகளை வேட்டையாடி உண்ணும் இனத்தார் . |
கரும்புறம் | பனைமரம் ; கருமை . |
கரும்பூ | நீலோற்பலம் , கருங்குவளை . |
கரும்பேன் | ஈரத்தாற் சீலையில் தோன்றும் கரும்புள்ளி . |
கரும்பொன் | இரும்பு . |
கருமக்கருத்தன் | கருமஞ்செய்பவன் ; செயப்படுபொருள் வினைமுதல்போல் வருவது . |
கருமக்கழிபலம் | தீவினையைக் கழிக்கும் நல்வினை . |
கருமக்காமம் | செயலின்பொருட்டு மேற்கொண்ட பொய்க்காமம் . |
கருமக்கோட்பாடு | மேற்கொண்ட செயல் . |
கருமகர்த்தா | காண்க : கருமக்கருத்தன் . |
கருமகள் | சண்டாளி ; காக்கை . |
கருமகன் | கொல்லன் . |
கருமகாண்டம் | வேள்வி முதலிய வைதிக தருமங்களைப்பற்றிக் கூறும் வேதத்தின் முற்பகுதி ; முற்பிறப்புத் தீவினைகளால் ஏற்படும் நோய்களையும் அவற்றிற்குரிய சிகிச்சை முறையையும் விளக்கும் ஒரு மருத்துவ நூல் . |
கருமகாண்டி | வைதிகக் கிரியைகளின்படி நடப்பவள் . |
கருமகீலகன் | வண்ணான் . |
கருமச்சார்ச்சி | இரண்டாம் வேற்றுமைச் சார்பு பொருண்மையுள் ஒன்று . அஃது ஒன்றனையொன்று மெய்யுறுதல் ; அதாவது செயப்படுபொருளைக் கருத்தா மெய்யுறும் சார்பு . |
கருமச்சார்பு | இரண்டாம் வேற்றுமைச் சார்பு பொருண்மையுள் ஒன்று . அஃது ஒன்றனையொன்று மெய்யுறுதல் ; அதாவது செயப்படுபொருளைக் கருத்தா மெய்யுறும் சார்பு . |
கருமசண்டாளன் | இராகு ; துரோகி , பொறாமை முதலிய தீக்குணமுடையவன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 275 | 276 | 277 | 278 | 279 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருப்புவில்லி முதல் - கருமம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சார்பு, முதலிய, ஒருவகைப், வினைப்பயன், ஒன்று, இரண்டாம், வேற்றுமைச், மேற்கொண்ட, கருமக்கருத்தன், வண்டு, காக்கை, பனைமரம், பொருண்மையுள், அதாவது, செயப்படுபொருளைக், கருத்தா, மெய்யுறுதல், ஒன்றனையொன்று, இராகு, அஃது, மெய்யுறும், கரும்பு, கருமகாண்டம், தொழில், வேள்வி, கட்டு, வினைகளாலான, இறுதிக்கடன், கரிய, செயல், செயப்படுபொருள், முதலியன, கருவழலைப், கரும்பாலை, மன்மதன், கரும்பை, வில்லாகவுடைய, பாம்பு