முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கருத்தொட்டுதல் முதல் - கருப்புவில் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கருத்தொட்டுதல் முதல் - கருப்புவில் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கருப்பிண்டம் | கருப்பத்திலுள்ள பிண்டம் . |
| கருப்பிணி | கருக்கொண்டவள் . |
| கருப்பு | பஞ்சம் , வறுமையான காலம் . |
| கருப்புக்கட்டி | வெல்லம் ; பனைவெல்லம் ; கற்கண்டு . |
| கருப்புரம் | காண்க : கருப்பூரம் . |
| கருப்புவில் | மன்மதனது கரும்புவில் . |
| கருதுதல் | எண்ணுதல் ; மறந்ததை நினைத்தல் ; நிதானித்தறிதல் ; உத்தேசித்தல் ; மதித்தல் ; விரும்புதல் ; அனுமானித்தல் ; நன்கு ஆலோசித்தல் ; ஒத்தல் . |
| கருந்தமிழ் | கொச்சைத்தமிழ் . |
| கருந்தரை | பாழ்நிலம் . |
| கருந்தலை | கால்பாகம் ; முடிவு ; தொடக்கம் ; கரிய தலை . |
| கருந்தனம் | பொன் ; பணம் . |
| கருந்தாது | இரும்பு ; இரும்பின் பொடி . |
| கருந்தாமக்கொடி | சிறுசெங்குரலி என்னும் மலைக்கொடி . |
| கருந்தாள் | அறுபட்ட தாளடி . |
| கருந்திடர் | பெரிய மேடு . |
| கருந்துகிலோன் | நீல ஆடையை அணிந்த பலராமன் . |
| கருந்தும்பை | பேய்மருட்டி ; கருங்காலிமரம் ; செடிவகை ; மரவிசேடம் . |
| கருந்துவரை | மலைத்துவரை ; மரவகை . |
| கருந்தூள் செந்தூள் பரத்தல் | கடுமையாய் முயலுகை . |
| கருந்தொழில் | வலிய தொழில் ; கொலைத் தொழில் ; தச்சுவேலை . |
| கருந்தோழி | அவுரிச்செடி . |
| கருநடம் | கருநாடகம் , கன்னடம் . |
| கருநந்து | நத்தைவகை . |
| கருநாக்கு | தீயநாக்கு ; தீயநாக்குள்ளவர் . |
| கருநாகப்படலம் | ஒருவகைக் கண்நோய் . |
| கருநாகம் | கரும்பாம்பு , இராகு ; காரீயம் . |
| கருநாடகம் | தென்னிந்திய மாநிலங்களுள் ஒன்று ; கன்னடமொழி ; தென்னாட்டு இசை ; பழைமையானது ; நாகரிகமற்றது . |
| கருநாடர் | கருநாடகத்தைச் சேர்ந்தவர் . |
| கருநாபி | கல்லுப்பு |
| கருநாய் | ஓநாய் |
| கருநார் | பனையின் கறுத்த நார் . |
| கருநாழிகை | இரவு . |
| கருநாள் | நற்செயல்களுக்கு ஆகாத நாள் , தீய நாள் . |
| கருநிலம் | பயன்படாத நிலம் . |
| கருநீலப்பிறப்பு | நரகப் பிறப்புக்குச் சிறிது மேற்பட்ட பிறவி . |
| கருநெய்தல் | கருங்குவளை , நீலம் . |
| கருநெல்லி | ஒருவகை நெல்லிமரம் . |
| கருநெறி | நெருப்பு . |
| கருநொச்சி | ஒருவகை நொச்சிச்செடி . |
| கருநோய் | ஒருவகை மாட்டுநோய் . |
| கருப்பக்கிருகம் | கருவறை , மூலத்தானம் , கோயிலில் தெய்வத்திருமேனியுள்ள அறை ; அரண்மனையின் உள்வீடு . |
| கருப்பகோளகை | கருப் பை . |
| கருப்பங்கொல்லை | கரும்புத் தோட்டம் . |
| கருப்பச்சிதைவு | கருவழிவு . |
| கருப்பட்டி | பனைவெல்லம் ; பனங்கற்கண்டு ; வெல்லம் . |
| கருப்படம் | கந்தற் புடைவை . |
| கருப்பணி | பனையினின்று இறக்கும் பதநீர் . |
| கருப்பத்துளை | பவளங்கள் உண்டாகும்போதே காணும் உட்டுளையாகிய குற்றம் . |
| கருப்பதீக்கை | மனைவியின் கருப்பகாலத்து மயிர் வளர்க்கை . |
| கருப்பதீட்சை | மனைவியின் கருப்பகாலத்து மயிர் வளர்க்கை . |
| கருப்பதும்பம் | கருப்பத்தை மூடியிருக்கும் நஞ்சுப்பை . |
| கருப்பந்தெப்பம் | பேய்க்கரும்புகொண்டு செய்யப்படும் மிதவை . |
| கருப்பந்தோகை | கரும்பின் இலை . |
| கருப்பநாடி | கொப்பூழ்க்கொடி . |
| கருப்பநாள் | குழந்தை பிறந்த ஒன்பதாம் நாள் . |
| கருப்பநிச்சிதம் | கருப்ப காலத்திலேயே செய்யப்பட்ட திருமண உறுதி . |
| கருப்பநீர் | கருப்பஞ்சாறு ; பனையின் பதநீர் . |
| கருப்பப்பரிசம் | கருப்பந்தரிக்கை . |
| கருப்பம் | கருக்கொண்டிருத்தல் , உட்பொருளாகக் கொண்டது ; சினை ; கருப்பை ; அரண்மனை . |
| கருப்பம்பாகு | வெல்லப்பாகு . |
| கருப்பரம் | தலையோடு ; இரும்புப் பாத்திரம் ; எலும்பு . |
| கருப்பாசயம் | கருத்தங்கும் இடம் , கருப்பை . |
| கருப்பாதானம் | கருப்பந்தரித்தற்காகச் செய்யும் ஒரு சடங்கு . |
| கருப்பாலை | கரும்பாட்டும் ஆலை . |
| கருத்தொட்டுதல் | பொருள் காணுதல் ; தொக்கு நின்ற சொல்லை விரித்துப் பொருள்காணுதல் ; பிறர் பாடத்தில் தன் கருத்தை ஒட்டுதல் ; மனத்தை ஒருமுகப்படுத்துதல் . |
| கருத்தோட்டம் | சிந்தனை . |
| கருதல் | எண்ணல் , அனுமானம் , நினைத்தல் . |
| கருதலர் | பகைவர் . |
| கருதலளவை | காண்க : கருத்தளவு(வை) . |
| கருதலார் | காண்க : கருதலர் . |
| கருதாதார் | காண்க : கருதலர் . |
| கருதார் | காண்க : கருதலர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 274 | 275 | 276 | 277 | 278 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருத்தொட்டுதல் முதல் - கருப்புவில் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கருதலர், ஒருவகை, நாள், மயிர், கருப்பகாலத்து, வளர்க்கை, கருப்பை, பனைவெல்லம், மனைவியின், பதநீர், கருநாடகம், பனையின், வெல்லம், நினைத்தல், தொழில்

