தமிழ் - தமிழ் அகரமுதலி - அதர் முதல் - அதிதனு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அதிசாரணம் | காண்க : மாவிலிங்கம் . |
| அதிசாரம் | வயிற்றுப்போக்கு ; கோள்களின் மீறிய நடை ; அதிமதுரம் ; கல்லுப்பு . |
| அதிட்டம் | நற்பேறு ; பார்க்கப்படாதது நல்வினைப்பயன் ; நல்லனுபோகம் ; இன்ப துன்பங்களுக்குக் காரணமானது ; மிளகு . |
| அதிட்டாத்திரு | தலைமை தாங்குபவன் ; ஆளும் தலைவன் . |
| அதிட்டாதா | தலைமை தாங்குபவன் ; ஆளும் தலைவன் . |
| அதிட்டானம் | நிலைக்களம் ; நிலைபெறும் இடம் . |
| அதிட்டித்தல் | ஆவாகனமாதல் ; நிலைக்களமாகக் கொள்ளுதல் . |
| அதிதல்சிலேட்டுமம் | ஒருவகைச் சிலேட்டுமநோய் . |
| அதிதனச்செல்வன் | குபேரன் . |
| அதிதனு | பொன் . |
| அதர் | வழி ; முறைமை ; புழுதி ; நுண்மணல் ; ஆட்டின் கழுத்திலே தொங்கும் உறுப்பு . |
| அதர்கோள் | வழிப்பறி . |
| அதர்ப்படுதல் | வழியில் தோன்றுதல் ; நெறிப்படுதல் . |
| அதர்மணிகன் | வாங்கின கடனைத் தராதவன் ; கடன் வாங்கிக் கெட்டவன் . |
| அதர்மம் | அறமல்லாதது , பாவம் . |
| அதர்வணம் | நான்காம் வேதம் . |
| அதர்வம் | நான்காம் வேதம் . |
| அதர்வை | வழி ; கொடிவகை . |
| அதரம் | உதடு ; இழிவு ; கீழ் ; கீழுதடு ; மஞ்சள் . |
| அதரிகொள்ளுதல் | கதிரைக் கடாவிட்டு உழக்குதல் ; பகையழித்தல் . |
| அதரிடைச்செலவு | வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை . |
| அதரிதிரித்தல் | காண்க : அதரிகொள்ளுதல் . |
| அதலகுதலம் | கலகம் , குழப்பம் . |
| அதலம் | கீழ் ஏழு உலகங்களுள் முதலாவது ; பள்ளம் ; பின்பு . |
| அதலன் | கடவுள் , இறை . |
| அதவம் | அத்திமரம் ; நெய்த்துடுப்பு . |
| அதவா | அல்லாமல் ; அல்லது . |
| அதவு | காண்க : அதவம் . |
| அதவுதல் | எதிர்த்து நெருக்குதல் ; கொல்லுதல் . |
| அதவை | கீழ்மகன் , அற்பன் . |
| அதழ் | பூவிதழ் . |
| அதள் | தோல் , மரப்பட்டை . |
| அதளி | அமளி , குழப்பம் . |
| அதளை | ஒருவகைப் பெரும் பாத்திரம் ; புளியுருண்டை ; வயல்வெளிக் காவற்குடிசை ; நிலப்பீர்க்கு . |
| அதற்கொண்டு | அக்காலம் தொடங்கி , அதுமுதலாக . |
| அதனப்பிரசங்கி | காண்க : அதிகப்பிரசங்கி . |
| அதான்று | அதுவல்லாமலும் . |
| அதி | வலைச்சாதி ; மிகுதிப்பொருளைத் தரும் ஓர் இடைச்சொல் ; அதிகம் ; அப்பால் ; மேன்மை ; சிறப்பு முதலிய பொருள் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு . |
| அதிக்கண்டம் | செய்யுட்சீர் . |
| அதிக்கிரமம் | நெறிதவறல் ; கடத்தல் ; தப்பிப் போதல் ; மேற்படுதல் ; மீறுதல் . |
| அதிக்கிராந்தம் | கடந்தது . |
| அதிகண்டம் | இறப்புத் துன்பம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
| அதிகநாரி | காண்க : கொடிவேலி . |
| அதிகப்படி | அளவுக்குமேல் . |
| அதிகப்பிரசங்கம் | அளவுக்குமீறிய பேச்சு ; தன் மேம்பாட்டுரை . |
| அதிகப்பிரசங்கி | அடங்காதவன் , அகங்காரி . |
| அதிகம் | இலாபம் ; மிகுதி ; பொலிவு ; ஏற்றம் ; மேன்மை ; படை ; குருக்கத்தி . |
| அதிகரணம் | நிலைக்களம் , ஆதாரம் ; நூற்பொருட் கூறுபாடு . |
| அதிகரித்தல் | மிகுதிப்படுதல் ; மேற்படல் ; பெருகுதல் ; அதிகாரம் செய்தல் ; கற்றல் . |
| அதிகன் | மேலானவன் ; மேம்பட்டவன் ; மகான் ; பெரியோன் ; பரம்பொருள் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் . |
| அதியன் | மேலானவன் ; மேம்பட்டவன் ; மகான் ; பெரியோன் ; பரம்பொருள் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் . |
| அதிகாசம் | பெருநகை . |
| அதிகாந்தம் | மணிவகை ; செவ்வானம் . |
| அதிகாரம் | அதிகரித்தல் ; தலைமை ; தொடக்கம் ; நூற்பிரிவு ; அலுவல் ; ஒழுங்கு ; ஆட்சி ; ஆளுந்தன்மை . |
| அதிகாரமுறை | நூற்பிரிவின் முறைவைப்பு . |
| அதிகாரன் | மகேசுரன் ; அதிகாரி . |
| அதிகாரி | தலைவன் ; கண்காணிப்பவன் ; தொடர்புடையவன் ; நூல் செய்வித்தோன் ; பக்குவன் ; உரியவன் ; நூல் கேட்டற்குரியோன் . |
| அதிகாலங்காரம் | பெருமையணி . |
| அதிகாலை | விடியற்காலம் . |
| அதிகுணன் | சிறந்த குணமுள்ளவன் ; கடவுள் ; அருகன் . |
| அதிங்கம் | காண்க : அதிமதுரம் . |
| அதிசயம் | புதுமை , வியப்பு ; அலங்காரம் ; மிகுதி ; மேம்பாடு ; சிறப்பு . |
| அதிசயமொழி | வியப்புச்சொல் . |
| அதிசயன் | அருகன் . |
| அதிசயித்தல் | வியப்புறுதல் . |
| அதிசயோத்தி | உயர்த்திக் கூறுதல் ; உயர்வு நவிற்சியணி . |
| அதிசரம் | நெட்டுயிர்ப்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அதர் முதல் - அதிதனு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தலைவன், தலைமை, மகான், மேம்பட்டவன், மேலானவன், அதிகரித்தல், மிகுதி, பெரியோன், அதிகாரம், கடையெழு, நூல், அருகன், அதிகாரி, ஒருவன், சிறப்பு, வள்ளல்களுள், பரம்பொருள், அதிகம், நான்காம், வேதம், நிலைக்களம், ஆளும், அதிமதுரம், தாங்குபவன், கீழ், அதரிகொள்ளுதல், அதிகப்பிரசங்கி, தரும், அதவம், கடவுள், குழப்பம், மேன்மை

