தமிழ் - தமிழ் அகரமுதலி - கம்பை முதல் - கமனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கமங்கட்டுதல் | சொந்த நிலத்தில் வேளாண்மை செய்தல் . |
| கமஞ்சூல் | நீர் நிறைந்த மேகம் . |
| கமடம் | ஆமை . |
| கமண்டலம் | பிரமசாரிகளும் முனிவரும் வைத்திருக்கும் ஒருவகை நீர்ப் பாத்திரம் , கரகம் . |
| கமண்டலு | பிரமசாரிகளும் முனிவரும் வைத்திருக்கும் ஒருவகை நீர்ப் பாத்திரம் , கரகம் . |
| கமத்தல் | நிறைதல் . |
| கமத்தொழில் | உழவுத்தொழில் . |
| கமம் | நிறைவு ; உழவுத்தொழில் ; வயல் . |
| கமம்புலம் | நிலமும் புலமும் . |
| கமர் | நிலப்பிளப்பு . |
| கமரதம் | மணித்தக்காளி . |
| கமரிப்புல் | ஒருவகைப் புல் . |
| கமல் | வெட்பாலை . |
| கமலக்கண்ணன் | தாமரைக் கண்களையுடைய திருமால் . |
| கமலகுண்டலமாய் | தலைகீழாய் . |
| கமலகோசிகம் | கைகுவித்து ஐந்து விரலும் அகல விரித்துக்காட்டும் இணையா வினைக்கை . |
| கமலத்தேவி | தாமரையை இருப்பிடமாகக் கொண்ட திருமகள் . |
| கமலத்தோன் | பிரமன் . |
| கமலநிருத்தம் | கூத்தின் விகற்பம் . |
| கமலபாந்தி | சூரியன் . |
| கமலம் | தாமரை ; நீர் ; ஒருவகைத் தட்டு ; ஒரு பேரெண் ; பட்டை தீர்ந்த வயிரம் ; செம்படாம் ; கன்றிழந்த பசு . |
| கமலமனோகரி | ஒரு பண்வகை . |
| கமலயோனி | தாமரையில் பிறந்த பிரமன் . |
| கமலரேகை | பதுமரேகை , தாமரை வடிவமைந்த கோடு . |
| கமலவருத்தனை | தொழுதற்கு அறிகுறியாகத் தாமரைமொட்டைப்போலக் கைகளைக் குவித்தல் . |
| கமலவல்லி | காண்க : கமலத்தேவி . |
| கமலவூர்தி | தாமரையை ஊர்தியாகவுடைய அருகக் கடவுள் . |
| கமலவைப்பு | தாமரையுள்ள நீர்நிலை . |
| கமலன் | காண்க : கமலயோனி . |
| கமலா | கிச்சிலிவகை . |
| கமலாக்கனி | இரண்டு விரல் கனமுள்ள இரண்டு விறகாலெரிக்குந் தீ . |
| கமலாசனம் | பதுமாசனம் , தாமரைமலர் வடிவில் அமைந்த இருக்கை . |
| கமலாசனன் | தாமரையை இருப்பிடமாகக் கொண்டவன் ; பிரமன் ; அருகன் . |
| கமலாசனி | காண்க : கமலத்தேவி . |
| கமலாலயம் | திருவாரூர்க் குளத்தின் பெயர் . |
| கமலாலயன் | பிரமன் . |
| கமலி | குங்கும பாடாணம் . |
| கமலிப்பட்டு | பட்டாடைவகை . |
| கமலினி | உமாதேவியின் தோழியருள் ஒருத்தி . |
| கமலை | திருமகள் ; திருவாரூர் . |
| கமவாரம் | உழவுக் கருவிகளுக்காக வாங்கும் வாரம் . |
| கமழ்தல் | மணம்வீசுதல் ; தோன்றுதல் ; பரத்தல் . |
| கமறுதல் | மிகவொலித்தல் ; மிக அழுதல் ; மிக வேகுதல் ; நெடியுண்டாதல் . |
| கமனகுளிகை | நினைத்தவிடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் மருந்து , இரசகுளிகை . |
| கமனசித்தி | வானவெளியே நினைத்த இடம் செல்லுந்திறன் . |
| கமனம் | செல்லுகை , போதல் , நடை . |
| கம்பை | கதவு முதலியவற்றின் சட்டம் ; ஏட்டுச் சுவடிச் சட்டம் ; அதிகார வரம்பு . |
| கம்மக்குடம் | கம்மியர் செய்த குடம் . |
| கம்மக்கை | கடினவேலை . |
| கம்மகாரர் | கப்பலோட்டிகள் . |
| கம்மத்தம் | காண்க : கம்பத்தம் . |
| கம்மம் | கம்மியர் தொழில் . |
| கம்மல் | மகளிர் காதணியுள் ஒன்று ; குரலடைப்பு ; மங்கல் ; மந்தாரம் ; குறைவு . |
| கம்மாட்டி | கம்மாளப்பெண் . |
| கம்மாணன் | கம்மாளன் . |
| கம்மால் | உலோகவேலை செய்யுமிடம் . |
| கம்மாலை | உலோகவேலை செய்யுமிடம் . |
| கம்மாளச்சி | கம்மாளச்சாதிப் பெண் . |
| கம்மாளன் | உலோகவேலை செய்வோன் ; தட்டான் ; கன்னான் , சிற்பன் , தச்சன் , கொல்லன் , பொன்வேலை முதலிய தொழில் செய்யுஞ் சாதியான் . |
| கம்மாறர் | மரக்கல மோட்டுவோர் . |
| கம்மி | தொழிலாளி ; குறைவு . |
| கம்மியம் | கைத்தொழில் ; கம்மாளத்தொழில் . |
| கம்மியன் | தொழிலாளி ; கம்மாளன் ; நெய்பவன் . |
| கம்முதல் | குரல் குன்றல் ; ஒளி குறைதல் . |
| கம்மெனல் | தெளிவின்றி ஒலித்தற் குறிப்பு ; ஓசையடங்கற் குறிப்பு ; மணத்தற் குறிப்பு ; விரைவுக் குறிப்பு . |
| கம்மை | சிறுகீரை . |
| கமக்காரன் | உழவன் . |
| கமகம் | இசை வேறுபாடு அறியுங் குறிப்பு ; ஒன்றையறிதற்கு ஏதுவாயுள்ள குறிப்பு . |
| கமகமத்தல் | மிக மணத்தல் . |
| கமகமவெனல் | மணத்தற் குறிப்பு . |
| கமகன் | நுண்ணறிவினாலும் கல்விப் பெருமையினாலும் கல்லாத நூற்பொருளையும் எடுத்துரைக்கவல்லவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 265 | 266 | 267 | 268 | 269 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கம்பை முதல் - கமனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குறிப்பு, காண்க, பிரமன், தாமரையை, கம்மாளன், உலோகவேலை, கமலத்தேவி, தொழில், கம்மியர், சட்டம், குறைவு, மணத்தற், தொழிலாளி, இரண்டு, பிரமசாரிகளும், செய்யுமிடம், கமலயோனி, கரகம், பாத்திரம், நீர்ப், ஒருவகை, உழவுத்தொழில், இருப்பிடமாகக், வைத்திருக்கும், தாமரை, நீர், திருமகள், முனிவரும்

