தமிழ் - தமிழ் அகரமுதலி - கப்புக்கால் முதல் - கபோலம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கபிலப்பொடி | மரவகை . |
| கபிலம் | புகர்நிறம் , கருமை கலந்த பொன்மை ; உபபுராணங்கள் பதினெட்டனுள் ஒன்று ; கரிக் குருவி ; கபிலப்பொடி . |
| கபிலமதம் | கபிலரால் ஏற்படுத்தப்பட்ட சாங்கிய மதம் . |
| கபிலர் | உருத்திரர் ; ஒரு புலவர் . |
| கபிலை | எருதுகளைப் பூட்டி நீரிறைக்கும் ஏற்றம் , கருமை கலந்த பொன்மை ; காராம் பசு ; தெய்வப்பசு ; காமதேனு ; தென்கீழ்த்திசைப் பெண்யானை ; ஓர் ஆறு ; மணப்பண்டவகை . |
| கபுக்குக்கபுக்கெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கபோதகத்தலை | கொடுங்கையைத் தாங்குதலையுடைய பலகை . |
| கபோதகம் | புறா ; சிற்பவுறுப்புகளுள் ஒன்று . |
| கபோதம் | புறா ; கரும்புறா ; புறாமுட்டிச் செடி ; கொடுங்கை ; பெருவிரல் விட்டு நிமிர மற்றை நான்கு விரல்களும் ஒட்டி நிமிரும் இணையா வினைக்கை ; இரண்டு கைகளையும் கபோதையாகக் கட்டுவது . |
| கபோதி | குருடன் ; அறிவிலி ; பெண்புறா . |
| கபோலம் | கன்னம் , தாடை . |
| கப்புக்கால் | வளைகால் , முட்டுக்கால் . |
| கப்புக்குனையறுத்தல் | இழையோட்டுதல் . |
| கப்புச்சிப்பெனல் | பேச்சின்றி அடங்குகைக் குறிப்பு . |
| கப்புத்தோள் | வலத்தோளும் இடத்தோளுமாக மாறிக் காவுகை . |
| கப்புதல் | மூடிக்கொள்ளல் ; விரைவாய் விழுங்குதல் ; உண்ணல் . |
| கப்புமஞ்சள் | கொச்சியிலிருந்து கிடைக்கும் ஒருவகை உயர்ந்த மஞ்சள் , குளிமஞ்சள் . |
| கப்புரம் | கருப்பூரம் . |
| கப்புவலை | வலைவகை . |
| கப்புவிடுதல் | கிளைவிடுதல் ; புரட்டுப் பேசுதல் . |
| கப்பைக்காலன் | வளைந்த காலை உடையவன் . |
| கபக்கட்டு | சளி நெஞ்சில் திரண்டிருக்கை . |
| கபகபவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; பசி முதலியவற்றால் வயிறெரிகைக் குறிப்பு . |
| கபட்டு நாக்கு | வஞ்சம் பேசும் நா . |
| கபட்டுப் படிக்கல் | கள்ள நிறைகல் . |
| கபடக்காரன் | வஞ்சகன் . |
| கபடநாடகம் | மிகத் தந்திரமான செய்கை ; வஞ்சக நடிப்பு ; போலி நடிப்பு . |
| கபடம் | வஞ்சகம் . |
| கபடவித்தை | மாயவித்தை . |
| கபடன் | வஞ்சகன் , கள்ளன் . |
| கபடி | கபடன் ; வஞ்சகி ; தந்திரசாலி ; சடுகுடு விளையாட்டு . |
| கபடு | சூது , வஞ்சனை . |
| கபந்தம் | தலையற்ற உடல் , முண்டம் , அறிவிலி . |
| கபநாசம் | கண்டங்கத்தரி . |
| கபநாசனி | தேற்றாங்கொட்டை . |
| கபம் | கோழை , சிலேட்டுமம் , சளி , மார்ச்சளி . |
| கபம்பம் | வாலுளுவை . |
| கபர்த்தம் | சிவபிரான் சடை . |
| கபர்த்தி | சடையையுடைய சிவன் . |
| கபரி | பெருங்காயம் . |
| கபரோகம் | சிலேட்டும நோய் , காசநோய்வகை . |
| கபவாதசுரம் | சிலேட்டுமவாதங்களின் சேர்க்கையால் தோன்றும் சுரநோய் . |
| கபவிரோதி | சிற்றரத்தை . |
| கபாடக்கட்டி | வசம்பு . |
| காடபந்தனம் | கதவடைப்பு . |
| கபாடம் | கதவு ; காவல் ; பொதி . |
| கபாய் | நிலையங்கி , மேற்சட்டை . |
| கபால் | கபாலம் , தலையோடு . |
| கபாலக்கரப்பான் | தலையில் வரும் ஒரு நோய் . |
| கபாலக்குத்து | கடுந்தலைவலி . |
| கபாலச்சூலை | கடுந்தலைவலி . |
| கபாலசாந்தி | ஆவிரை . |
| கபாலதரன் | பிரமன் தலையோட்டைக் கையிலும் தலையோடுகளை மாலையாகக் கழுத்திலும் கொண்ட சிவன் . |
| கபாலநீர் | தலையிலேறிய கெட்ட நீர் . |
| கபாலபாணி | கபாலத்தைத் கையிலேந்திய சிவன் . |
| கபாலம் | மண்டையோடு ; இரப்போர் கலம் ; சிவன் ஐயமேற்கும் பாத்திரம் ; கடுந்தவைலி ; நீர்க்குடத்தின் ஒரு பகுதி ; முட்டையின் ஒரு பகுதி . |
| கபாலமூர்த்தி | காண்க : கபாலதரன் . |
| கபாலரேகை | தலையெழுத்து . |
| கபாலவாசல் | தலையின் உச்சித்தொளை . |
| கபாலவாடை | தலைநோய் . |
| கபாலவாயு | கபாலக்குத்து , நரம்புத் தலைவலி . |
| கபாலன் | சிவன் ; சீர்பந்த பாடாணம் . |
| கபாலி | கபாலத்தையுடைய சிவன் ; வயிரவன் ; உமாதேவி ; பதினோர் உருத்திரருள் ஒருவர் . |
| கபி | குரங்கு ; கயிறிழுக்குங் கருவி . |
| கபிஞ்சலம் | காடை ; சாதகப்புள் ; ஆந்தை ; சிச்சிலிப்பறவை ; ஒரு புண்ணிய சிவத்தலம் . |
| கபித்தம் | விளாமரம் ; அபிநயவகை , சுட்டுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் நகங்கள் கௌவப்பிடித்து ஏனைய மூன்று விரலும் மெல்லெனப் பிடிப்பது ; கொட்டிக்கிழங்கு . |
| கபிதம் | கருஞ்சீரகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 263 | 264 | 265 | 266 | 267 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கப்புக்கால் முதல் - கபோலம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிவன், கபாலம், நோய், கபாலக்குத்து, கபடன், கடுந்தலைவலி, நுனியும், பகுதி, கபாலதரன், நடிப்பு, வஞ்சகன், ஒன்று, பொன்மை, கலந்த, கருமை, ஒலிக்குறிப்பு, புறா, குறிப்பு, அறிவிலி, பெருவிரல், கபிலப்பொடி

